Monthly Archive: August 2019

வேண்டுதல் நிறைவு

ஒரு வேண்டுதல் உயிராபத்து நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி முருகசாமி அய்யா, தனது உடல்நலத்தில் தேறுதலடைந்து உள்நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மருத்துவமனை வாசலில் கண்ணீர்காயாத விழிகளோடு துக்கம்சுமந்து நின்ற அந்த காதுகேளாத, வாய்பேசாத பிள்ளைகளின் வேண்டுதலும் தவிப்பும் தான் இந்த நிம்மதிப்பெருமூச்சை நமக்களித்துள்ளது. அய்யாவின் குணமடைதலைக் கேள்விப்பட்டு, அழைத்துக்கேட்கும் அத்தனை இருதயங்களையும், துவக்கநாள் தொட்டுப் பிரார்த்தனைகளால் இறைதொழுத நம்பிக்கை மனங்களையும் கைகூப்பி பாதம் தொழுகிறோம். அனைத்துவகையிலும் உடன்நின்ற நண்பர்களை நெஞ்சணைத்துக் கொள்கிறோம். முழுமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125498

ஊட்டி, அபி, இளவெயில், குளிர்

  தீயின் எடை முடிந்தபோது எங்கேனும் செல்லவேண்டும் என்று தோன்றியது. வழக்கமான தனிமையுணர்வு. இம்முறை கிருஷ்ணனுக்கும் அதே தனிமையுணர்வு. துரியோதனனின் இறப்பு அவரை மிகவும் பாதித்தது. அந்த உணர்வை வெண்முரசு என்னும் வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள் புரிந்துகொள்வது கடினம். ஏறத்தாழ ஆறாண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு நாளுமென உடன்வந்து வளரும் கதைமாந்தர்கள். அவர்களில் உச்சமென கருமையும் வெண்மையும் முயங்கும் பெரிய ஆளுமை துரியோதனன்.   ஆகவே எழுதிமுடித்ததுமே எங்காவது கிளம்பலாமென கிருஷ்ணனே முடிவுசெய்தார். உடன்வரும் நண்பர்களுக்கும் தெரிவித்தார். பத்துபேர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125478

நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு

உப்புவேலி வாங்க உங்கள் வசனம்,எப்போதும் கிருபைபொருந்தினதாயும், உப்பால் சாரமேறினதாயும் இருப்பதாக. [பவுல்]    எஸ்ரா திருவண்ணாமலையில் அவருக்கென நிகழ்த்திய உண்டாட்டில் ஒரு கதை சொன்னார். ஒரு சமையலறையில் எளிய சிக்கலாக துவங்கும் கதை, அந்த சிக்கல் வீடு, தெரு,ஊர்,உலகம் எனப் பரவும் சூழலை மையம் கொண்ட கதை. கரு இதுதான். உலகில் ஒரு நாள் உப்பு மொத்தமாகக் காணாமல் போய் விடுகிறது. ஏன்?   மானுடம் இந்த நிலையில் இருப்பதன் பொருட்டு, சுவாசம் போலவே தன்னியல்பாக சில அறமதிப்பீடுகளைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125125

பக்தி இலக்கியம் – கடிதங்கள்

பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு   பக்தி இலக்கியம்- கடிதங்கள் அன்புள்ள ஜெ     பக்தி இலக்கியம்- இன்றைய வாசிப்பு என்னும் கட்டுரையை வாசித்தேன். சுருக்கமாக ஒரு விரிவான சித்திரத்தை அளித்திருக்கிறீர்கள். அதில் கூறப்பட்டிருப்பதை இப்படி புரிந்துகொள்கிறேன். தமிழின் பக்தி இயக்க கவிதைகள் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு கொண்டவை. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டுவரை. அவற்றை பயிலாத ஒருவரால் தமிழ்மொழியின் அழகையும் தமிழ்ப்பண்பாட்டின் முழுமையையும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்தி இல்லாதவர், நாத்திகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125385

இந்தியன்- 2,கதை

Shankar-Kamal Haasan’s Indian 2 story leaked? ஒருநாளில் நூறு அழைப்புக்கள். மின்னஞ்சல்கள். பதற்றமான குறுஞ்செய்திகள். தொலைபேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருக்கவேண்டியிருந்தது. ஆகவே என்னை அழைத்தவர்கள் பலரை நானே பின்னர் கூப்பிட்டுப் பேசநேர்ந்தது. விஷயம் ஒன்றே. இந்தியன்-2 கதை வெளியாகிவிட்டதாமே? உண்மையா?   நம்மவரின் பதற்றத்திற்கு இதைவிடப் பெரிய காரணம் தேவையில்லை. பல்வேறு இணைப்புக்களை அளித்திருந்தார்கள். சரி, கதை அதுவே என்றாலும் என்ன? சினிமாக்கதைகளுக்கு, குறிப்பாக சாகசக் கதைகளுக்கு, உலகமெங்கும் ஒரு சில அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125473

அபி கவிதைகள் நூல்

  அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது. காலமற்றது.  தத்துவச் சுமையில்லாதது.  வலியில்லாதது.  நான் – இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும். -தேவதேவன்     அன்பார்ந்த ஜெயமோகனுக்கு,   வணக்கம்   கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கவிருப்பது குறித்த செய்தியறிந்து மகிழ்கிறோம்.அபி கவிதைகள் மூன்றாம் பதிப்பு, அதாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125469

வீடு நமக்கு…

திருவாலங்காடு என்னும் சொல் என்னை எப்போதுமே தொடர்ந்து வருகிறது. ஆலங்காடு, ஆலமரக்காடு. அன்றெல்லாம் ஈமக்கடன் முடிந்ததும் ஆலமரம் நடுவார்கள். ஆகவே இடுகாடு ஆலமரம் செறிந்திருக்கும். ஆலங்காடு என்றால் இடுகாடு ஆனால் ஆலம் என்னும் சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு. குறிப்பாக வானம், நஞ்சு, கருமை என்னும் மூன்று பொருள்கள். வானமெனும் காடு. நச்சுக்காடு. கரிய காடு. ஆலங்காடு என சித்தர்பாடல்களில் வரும்போது இவையனைத்தையுமே குறிக்கின்றது. திருவாலங்காடு சென்னைக்கு அருகிலுள்ள சிவத்தலம். காரைக்காலம்மையார் ஈசனடி சேர்ந்த இடம் எனப்படுகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125315

கண்ணீரும் வாழ்வும்

மண்ணும் மனிதரும் பற்றி… சிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’ அன்புள்ள ஜெயமோகன்,   சிவராம காரந்த்தின் ‘’மண்ணும் மனிதரும்’’ வாசித்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னால், பைரப்பாவின் ‘’ஒரு குடும்பம் சிதைகிறது’’ நாவலை வாசித்திருக்கிறேன். இரண்டு நாவலும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றும் ஒரே உணர்வால் வடிவம் கொண்டவை என்றும் தோன்றியது. கண்ணீரின் கதை. பெண்களின் முடிவிலாக் கண்ணீரின் கதை. பெருந்துயரிலிருந்து திரண்டு வரும் வாழ்வின் சாராம்சத்துக்காகக் காத்திருக்கும் பெண்களின் கதை. குடும்பம் என்ற அமைப்புக்காக – குடும்பத்தின் நலத்துக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125233

ஈரோடு சிறுகதை முகாம் ,இன்னோரு கடிதம்

  அன்பின் ஜெ, சொல்புதிது குழுமத்தில் கிருஷ்ணன் அவர்களின் அறிவிப்பு வந்தவுடனேயே பதிவு செய்து விட்டேன். சிறுகதை முகாம் துளியளவும் ஏமாற்றவில்லை. பாரியின் பட்டியல் கூடிக் கொண்டே போனது; ஒரு கட்டத்தில் அவரே (வெள்ளி மாலையன்று!) ‘அநேகமாக இதற்கு மேல் பட்டியல் நீளாது’ என்று 45 கதைகளுடன் முடித்துக் கொண்டார். அனைத்துக் கதைகளையும் முகாம் துவங்குவதற்குள் வாசித்தாவது முடிக்க வேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டு அவ்வப்போது வாசித்து சனியன்று காலைக்குள்ளாக  28-30 கதைகள் வாசித்து விட்டேன். ஆனாலும் இந்த அவசரகதி வாசிப்பென்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125332

சில்லென்று சிரிப்பது

வைரமுத்துவின் அழகிய வரிகளில் ஒன்று ‘செங்காட்டுக் கள்ளிச்செடி சில்லென்று பூவெடுக்க’. ஒற்றைவரியில் ஒரு காட்சியும் கூடவே ஒரு தரிசனமும் நிகழும் அரிய வரிகளில் ஒன்று. வைரமுத்து தமிழ்ப்பாடல்களில் அதை அடிக்கடி நிகழ்த்தியிருக்கிறார். ஒரே சமயம் நாட்டாரிசைப்பாடல்களின் நீட்சியாகவும் நவீனக் கவிதையாகவும் நிலைகொள்ளும் வரிகள் அவை.   செங்காட்டைப் பார்த்தவர்கள் அறிவார்கள் அங்கே பூ என்பது மிக அரிய ஒன்று. மழைபெய்தால்கூட முள்தான் தளிர்க்கும். பூக்கள் விரிந்தால்கூட மிகச்சிறியவையாகவும், வண்ணம் குறைவானவையாகவுமே இருக்கும். பொட்டலில் கண்ணுக்குப்படும் பூ எருக்கு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125321

Older posts «

» Newer posts