Daily Archive: August 29, 2019

நீரும் நெறியும்

  பேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா?”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா?”என்றார். ”விடல்லியோ?” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது? கணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வளத்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/507

அறம் -கடிதம்

அறம் வாங்க   வணக்கம் ஜெ ,   அறம் தொகுப்பை தற்போதுதான் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒருவித அனுபவம். ஒருவாரகாலம் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். ஒவ்வொரு மனிதர்களுடைய அகக்கொந்தளிப்புகளையும், பரவசத்தையும் வார்த்தைகளால் சொல்லியிருக்கும் விதம் அருமை. நான் இக்கதைகளை படித்தது இப்போதுதான். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த எதிர்மறை விமர்சனத்தை சாரு நிவேதிதாவிடமிருந்து கேட்க நேர்ந்தது. ‘நூறு நாற்காலிகள்’ கதையை அவர் ஓர் அதீதப் புனைவு, உண்மைக்கு மாறானது என்று விமர்சித்திருந்தார். இந்தக் கதை ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125118

யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி

கானல்நதி வாங்க   வணக்கம் சார்   நலமா? யுவன் அவர்களின் கானல்நதி நாவலை படித்து முடித்தேன்.முடித்தவுடன் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்போடு இதை எழுதுகிறேன்.   எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன்.. தபலா மேதை குருச்சரண்தாஸ் தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின் வாழ்க்கையை நாவலாக எழுதும்படி கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின் தொடக்கம் என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125372

வேண்டுதல் நிறைவு

ஒரு வேண்டுதல் உயிராபத்து நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி முருகசாமி அய்யா, தனது உடல்நலத்தில் தேறுதலடைந்து உள்நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். மருத்துவமனை வாசலில் கண்ணீர்காயாத விழிகளோடு துக்கம்சுமந்து நின்ற அந்த காதுகேளாத, வாய்பேசாத பிள்ளைகளின் வேண்டுதலும் தவிப்பும் தான் இந்த நிம்மதிப்பெருமூச்சை நமக்களித்துள்ளது. அய்யாவின் குணமடைதலைக் கேள்விப்பட்டு, அழைத்துக்கேட்கும் அத்தனை இருதயங்களையும், துவக்கநாள் தொட்டுப் பிரார்த்தனைகளால் இறைதொழுத நம்பிக்கை மனங்களையும் கைகூப்பி பாதம் தொழுகிறோம். அனைத்துவகையிலும் உடன்நின்ற நண்பர்களை நெஞ்சணைத்துக் கொள்கிறோம். முழுமையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125498