Daily Archive: August 28, 2019

ஊட்டி, அபி, இளவெயில், குளிர்

  தீயின் எடை முடிந்தபோது எங்கேனும் செல்லவேண்டும் என்று தோன்றியது. வழக்கமான தனிமையுணர்வு. இம்முறை கிருஷ்ணனுக்கும் அதே தனிமையுணர்வு. துரியோதனனின் இறப்பு அவரை மிகவும் பாதித்தது. அந்த உணர்வை வெண்முரசு என்னும் வட்டத்திற்கு வெளியே உள்ளவர்கள் புரிந்துகொள்வது கடினம். ஏறத்தாழ ஆறாண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொரு நாளுமென உடன்வந்து வளரும் கதைமாந்தர்கள். அவர்களில் உச்சமென கருமையும் வெண்மையும் முயங்கும் பெரிய ஆளுமை துரியோதனன்.   ஆகவே எழுதிமுடித்ததுமே எங்காவது கிளம்பலாமென கிருஷ்ணனே முடிவுசெய்தார். உடன்வரும் நண்பர்களுக்கும் தெரிவித்தார். பத்துபேர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125478

நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்- கடலூர் சீனு

உப்புவேலி வாங்க உங்கள் வசனம்,எப்போதும் கிருபைபொருந்தினதாயும், உப்பால் சாரமேறினதாயும் இருப்பதாக. [பவுல்]    எஸ்ரா திருவண்ணாமலையில் அவருக்கென நிகழ்த்திய உண்டாட்டில் ஒரு கதை சொன்னார். ஒரு சமையலறையில் எளிய சிக்கலாக துவங்கும் கதை, அந்த சிக்கல் வீடு, தெரு,ஊர்,உலகம் எனப் பரவும் சூழலை மையம் கொண்ட கதை. கரு இதுதான். உலகில் ஒரு நாள் உப்பு மொத்தமாகக் காணாமல் போய் விடுகிறது. ஏன்?   மானுடம் இந்த நிலையில் இருப்பதன் பொருட்டு, சுவாசம் போலவே தன்னியல்பாக சில அறமதிப்பீடுகளைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125125

பக்தி இலக்கியம் – கடிதங்கள்

பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு   பக்தி இலக்கியம்- கடிதங்கள் அன்புள்ள ஜெ     பக்தி இலக்கியம்- இன்றைய வாசிப்பு என்னும் கட்டுரையை வாசித்தேன். சுருக்கமாக ஒரு விரிவான சித்திரத்தை அளித்திருக்கிறீர்கள். அதில் கூறப்பட்டிருப்பதை இப்படி புரிந்துகொள்கிறேன். தமிழின் பக்தி இயக்க கவிதைகள் ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு கொண்டவை. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டுவரை. அவற்றை பயிலாத ஒருவரால் தமிழ்மொழியின் அழகையும் தமிழ்ப்பண்பாட்டின் முழுமையையும் அறிய முடியாது. ஆனால் அவர் பக்தி இல்லாதவர், நாத்திகர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125385

இந்தியன்- 2,கதை

Shankar-Kamal Haasan’s Indian 2 story leaked? ஒருநாளில் நூறு அழைப்புக்கள். மின்னஞ்சல்கள். பதற்றமான குறுஞ்செய்திகள். தொலைபேசியை பெரும்பாலும் அணைத்தே வைத்திருக்கவேண்டியிருந்தது. ஆகவே என்னை அழைத்தவர்கள் பலரை நானே பின்னர் கூப்பிட்டுப் பேசநேர்ந்தது. விஷயம் ஒன்றே. இந்தியன்-2 கதை வெளியாகிவிட்டதாமே? உண்மையா?   நம்மவரின் பதற்றத்திற்கு இதைவிடப் பெரிய காரணம் தேவையில்லை. பல்வேறு இணைப்புக்களை அளித்திருந்தார்கள். சரி, கதை அதுவே என்றாலும் என்ன? சினிமாக்கதைகளுக்கு, குறிப்பாக சாகசக் கதைகளுக்கு, உலகமெங்கும் ஒரு சில அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125473