Daily Archive: August 25, 2019

கவிஞனின் ஒருநாள்

தீர்வுகள் – போகன் சொற்களை தழுவிச்செல்லும் நதி மழைத்துளிகள் நடுவே நாகம் அலைகளில் அமைவது ஜெ,   பொதுவாக முகநூல் ஊடகத்தில் எழுதப்படும் கவிதைகளைப்பற்றி ஓர் இளக்காரம் இங்கே உள்ளது. உண்மைதான் முகநூல் இலக்கியத்திற்கான ஊடகம் அல்ல. எனென்றால் அது சருகுபோல ஒவ்வொருநாளும் உதிர்ந்தபடியே உள்ளது. அத்துடன் அது கவிஞர் அறிந்த சிறிய வட்டத்தில் மட்டும் புழங்குகிறது. அது ஓர் உரையாடல்தளம். ஆகவே கவிதைகளையும் ஓர் உரையாடல்துணுக்கு என்றே வாசகர்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை எதிர்வினைகள் காட்டுகின்றன   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125194

கிருஷ்ணப்பருந்து- கடிதங்கள்

கிருஷ்ணப்பருந்து பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஜெ, வாரத்தில் ஏதேனும் ஒரு நாளாவது மயிலாடுதுறை பிரபுவுடன் அலைபேசாமலிருப்பது அரிதாகிக் கொண்டுவருகிறது. தளத்தில் வந்திருந்த கிருஷ்ணப்பருந்து கடிதத்தை படித்துவிட்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதுஅந்நாவல் மீதான ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தினார். புதுவை வெண்முரசு கூடுகைக்கு பேச வந்த நாளில்புத்தகத்தை கடலூர் சீனுவிடம் திருப்பியளிப்பதாய் இருந்தவரிடமிருந்து நான் வாங்கிச்சென்றேன். ஒரே நீட்டிப்பில்வாசித்து முடித்ததை என்னாலேயே நம்ப இயலவில்லை. பொதுவாகவே ஐதீகங்களின் மீதான ஐயப்பாடுஎப்போதுமே என்னுள்ளுண்டு. அவற்றையே ஆதாரமாகக் கொண்டு இதுவரை நான் முற்றிலும் கண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125106

ஆயிரமாண்டு சைக்கிள் -கடிதம்

  ஆயிரம் ஆண்டு சைக்கிள் டாக்டர் மா இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தை நிறுவி நடத்திவரும் கண் மருத்துவர் இரா கலைக்கோவன் 1980 இல் தற்செயலாக உறையூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் தூண் சைக்கிளை பார்த்திருக்கிறார். கோச்செங்கணான் காலக் கோயிலில் சைக்கிளா என்ற புதிரில் சிக்கிய அவரை வரலாற்று ஆய்வு உள்ளிழுத்துக்கொண்டது. அவர் கருத்து, 1920 களில் கோயில் புத்தாக்கம் செய்யப்பட்டபோது சிற்பி புதுவரவான சைக்கிளை தூணில் செதுக்கிவைத்திருக்கலாம் என்பதே. இப்படி இந்த சைக்கிள் ஒரு கண் மருத்துவரை வரலாற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125163

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56

ஏவற்பெண்டு படிகளுக்கு மேலே தோன்றியதும் நகுலன் எண்ணம் கலைந்தான். அவள் ஒவ்வொரு படியாக இறங்க இறங்க அவன் எளிதாகியபடியே வந்தான். அவள் கீழிறங்கி வந்து தலைவணங்கி “அழைக்கிறார்கள்” என்றாள். அவன் மேலே செல்லத் தொடங்கியதும் அவனுடன் வந்த வீரர்கள் ஆங்காங்கே அமர்ந்தனர். அவர்கள் ஏறிவந்த புரவிகள் வெளியே விடாய்கொண்டு கனைத்தன. நகுலன் ஏவற்பெண்டிடம் “எங்கள் புரவிகளை பேணுக!” என ஆணையிட்டுவிட்டு படிகளில் ஏறி மேலே சென்றான். இடைநாழிகளிலும் செம்புழுதி பரவியிருந்தது. அவற்றை ஏவற்பெண்கள் துடைத்துக்கொண்டிருந்தனர். குருதியலைகள்மேல் அவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125261