Daily Archive: August 23, 2019

சிவப்பயல்

துவாரபாலகன் சங்கரப்பிள்ளையும் சக்கைக்குருவும் என் அண்ணாவுக்கு பெயர் போடும்போது அப்பா ஒரு பெரிய தத்துவச் சிக்கலைச் சந்தித்தார். சொல்லப்போனால் அம்மாவும் சித்தப்பாவும் சேர்ந்து அதை அவர்மேல் சுமத்தினார்கள். அப்பா எல்லா கேள்விகளுக்கும் பழைய திருவிதாங்கூர் ஆவணங்களை நாடுபவர். “சூலைநோய்க்கு நல்லெண்ணை நல்லதுன்னு போட்டிருக்கான், எழுநூறாம் ஆண்டு டாக்குமெண்டாக்கும்!” என்று காட்டுவார். நிலப்பதிவுகளினூடாக உலகை அளந்தவர் அவர். மூன்றாம் அடியை வைக்க மண் தேடி அவருடைய கால் எப்போதுமே அந்தரத்தில் நின்றுகொண்டிருக்கும். ஆகவே அவர் திகைத்துப்போய்விட்டார். ஆறுமாதம் ஆவணங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125340

அமெரிக்கா பயணம்,

  வரும் செப்டெம்பர் 8 இரவில் ஆம் தேதி அமெரிக்கா கிளம்புகிறேன். ராலேயைச் சேர்ந்த நண்பர் ராஜன் சோமசுந்தரம் ஏற்பாடு. செப்டெம்பர் 30 கிளம்பி அக்டோபர் ஒன்றாம்தேதி திரும்பி வருவேன். அங்கே ஓரிரு சொற்பொழிவுகள். நண்பர்களுடன் ஒரு நீண்ட கார்ப்பயணம் திட்டத்தில் உள்ளது. இம்முறை அருண்மொழி உடன் வரவில்லை அமெரிக்காவுக்கு நான் செல்வது இது மூன்றாவது முறை. இருமுறையும் ஒரு மாதத்திற்குமேல் நீண்ட பெரிய பயணங்கள். இதுவும் ஏறத்தாழ ஒருமாதகாலப் பயணம்தான். இதுவரை பார்க்காத இடங்களை திட்டமிட்டிருக்கிறோம்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/125281

சிங்கப்பூர் – ஒரு கடிதம்

சிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி அன்பு ஜெ. நலம்தானே?   ஏனய்யா இந்த கொலைவெறி? தொடர்ந்து உங்களை வாசித்துக்கொண்டும் உங்கள் மொக்கை ஜோக்குகளுக்குக்கூட வாய்விட்டு சிரித்தும்வந்த என்னை இப்படி அழ வைப்பது நியாயமா?   ”சிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி” என்ற தலைப்பில், ஒரு கடிதம் உங்கள் தளத்தில் வந்ததைப்பார்த்தேன். சிங்கப்பூரிலிருந்து எழுதும் புது சிங்கப்பூரர், 18வருடங்களாய் இங்கு இருப்பவர், ’எம்.’ என்ற பெயரில் முதலெழுத்து போன்ற எதுகை, மோனை மற்றும் இயைபுகளை வைத்து, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125431

மோடியும் முதலையும் -கடிதங்கள்-3

மோடியும் முதலையும் -கடிதங்கள்-2   அன்பின் ஜெ.. ரத்தன் அவர்களின் கடிதம் கண்டேன். சூழல் விதிகளைத் தளர்த்தி, தேசிய வனவிலங்குப் பூங்காக்களுக்குள் சாலைகளுக்கும் தொழிற்திட்டங்களுக்கும் அனுமதி கொடுத்து விட்டு, ஒரு தொலைக்காட்சித் தொடருக்காக, கானுயிர்க் காவலராக அவதாரம் எடுத்த அபத்தத்தை மட்டுமே சுட்டி எழுதியிருந்தேன். அதுவும் நீங்கள் எழுதிய முதலை மோடிக்கான எதிர்வினையாக மட்டுமே. எனவே, சூரிய ஒளிச் சக்தி, பேட்டரி கார், டெஸ்லா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்வச் பாரத் எல்லாமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125416

காந்தியைக் கற்கவேண்டிய வயது

புதுநிலமான குழந்தைகளின் மனதில் விழ வேண்டியவை அறத்தின் விதைகள். அவை முளைவிடும் பதின்வயதில் அவர்களுக்கு முன்னோடிகளாக இருக்க வேண்டியவர்கள் அறத்தின் நாயகர்கள். உளவியல் ரீதியாக குமரப்பருவம் என்பது தனக்கான தலைமையைத் தேடும் பருவம். அதற்குப் பின் அவர்கள் ஏற்றோ, மறுத்தோ தங்களை உருவாக்கிக் கொள்ளட்டும். புதிதாக எதையும் கற்பிக்கவில்லை: நூல்:சத்தியசோதனை- ஆசிரியர்:மோகன்தாஸ்கரம்சந் காந்தி  

Permanent link to this article: https://www.jeyamohan.in/125237

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-54

கோட்டையின் காவல்மாடங்களில் வெறிப்புடன் செயலற்று ஆங்காங்கே அமர்ந்திருந்த பெண்டிர் நடுவே சம்வகை மட்டும் ஊக்கம் மிகுந்தவளாக அலைந்துகொண்டிருந்தாள். கைவிடுபடைகளின் மேலேறி ஆராய்ந்துகொண்டிருந்த அவளைக் கண்டு முதுமகள் ஒருத்தி வாய்மேல் கைவைத்து நகைத்து “முட்களின்மேல் பட்டாம்பூச்சிபோல தெரிகிறாய்” என்றாள். அவள் நகைத்துக்கொண்டு குதித்திறங்கி கோட்டைமேல் ஏறிச்சென்றாள். பெண்கள் அவளை வெறித்த நோக்குடன் பார்த்தனர். ஒவ்வொருவரும் சற்றுமுன்னர்தான் அழுது முடித்தவர்கள் போலிருந்தனர். எல்லா குரல்களிலும் எப்போதும் சற்று அழுகை இருந்தது. எந்தப் பேச்சும் உளமுலைந்த விம்மலில் சென்று முடிந்தது. அவள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125244