Daily Archive: August 21, 2019

முகில்செய்தி

அஷ்டபதியில் எனக்குப் பிடித்த முதல் ஐந்து பாடல்களில் ஒன்று  “பிரியே சாருசீலே!” அதன் பல்வேறு அழகிய வடிவங்கள் இணையத்தில் உள்ளன. ஆனால் தெலுங்குப்படமான மேகசந்தேசத்தில் உள்ள இந்தப்பாடல் மிக அணுக்கமானது. முற்றிலும் வேறுபட்ட ராகம். ஆனால் அதன் சொற்களிலுள்ள உண்மையான கொஞ்சல் இந்த மெட்டில் சரியாக அமைந்திருக்கிறது ஆனால் பாதிக்குமேல் தெலுங்குப்பாடல். இசையமைப்பாளரான பி.ரமேஷ் நாயிடு [ Pasupuleti Ramesh Naidu]   இந்தப்படத்திற்காக தேசிய விருது பெற்றார். நாகேஸ்வரராவ் இதில் கவிஞர். ஜெயசுதா அன்பான ஆனால் ரசனையற்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125132

மோடியும் முதலையும் -கடிதங்கள்-2

மோடியும் முதலையும் -கடிதங்கள் அன்புள்ள ஜெ தற்போதைய பொருளாதார நிலையைக் குழப்பத்தோடு பார்த்து வரும் மோடி ஆதரவாளர்களின் நானும் ஒருவன்.. அனால் சில கேள்விகள்: 1) “வரிக்கட்டுப்பாடுகள் மூலம் நிலமுதலீட்டை இறுக்கிவிடடார்கள்” – இதில் என்ன செய்ய வேண்டும்.. எல்லாரும் வரி ஏய்ப்பு செய்வதால் அதை அப்படியே விட்டு விட வேண்டுமா ? 2) இந்த அரசாங்கம் சூரிய,காற்று மின்சாரத்திலும், பாட்டரி வாகனத்திலும் காட்டும் அக்கறையை எந்த விதத்தில் கண்டுகொள்வது ? அதை ஒரு வரியெனும் சுட்டி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125272

வாழ்விலே ஒருமுறை

வாழ்விலே ஒருமுறை வாங்க அன்புள்ள ஜெ வாழ்விலே ஒருமுறை படித்து கொண்டிருக்கிறேன். முன்பக்கமிருந்து சில கதைகள் (அனுபவங்களை) படித்து விட்டு இறுதியிலிருந்து முன்னோக்கி படித்தேன். ஏதேச்சையாக மகராஜபுரம் சந்தானம் பாடிய மருகேலர ஓ ராகவா பாடல் இரு நாட்களாக மனதிற்குள் தாளமிட்டுக் கொண்டிருந்தது. இப்புத்தகத்தில் அவரைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையை படித்த பின் மீண்டும் ஒரு முறை கேட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை உங்கள் எழுத்து வாசிக்க வாசிக்க புதிய கண்டடைதல்களை தந்து கொண்டே இருக்கிறது. இசை, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125103

இன்றைய காந்திகள் -கடிதங்கள்

விவாதக்கட்டுரைகள்  இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி வைகுண்டம் அவர்களுக்கு பதில் திரு பாலா அவர்களின் விரிவான பதிலுக்கு நன்றி. நுகர்வோர் சமூகம் இல்லாமல் காந்திய பொருளாதாரம் தனித்து தழைப்பது சாத்தியமல்ல என்பது என் கருத்து. தகவல் தொழில்நுட்பம் பெருகிவிட்ட இந்நாளில் தினம் திருவிழா பார்க்கும் குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுக்காமலும் இருக்க முடியாது. ஆனால், இன்றைய அரசியல்வாதிகள் போல் அல்லாமல், உண்மையான காந்தியர்கள் நடைமுறை சாத்தியத்தோடு தேவையான சமரசம் செய்து கொள்வார்கள் என்று வேறொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125095

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52

முன்னால் சென்ற கொடிவீரன் நின்று கையசைக்க நகுலனின் சிறிய படை தயங்கியது. புரவிகள் ஒன்றுடன் ஒன்று முட்டாதபடி அணிவகுத்திருந்தமையால் அவை ஒன்றின் நடுவே இன்னொன்று புகுந்துகொண்டு நீண்டிருந்த படை செறிவுகொண்டு சுருங்கியது. கொடிவீரனைத் தொடர்ந்து சென்ற நான்கு வீரர்கள் விற்களில் அம்புகளைத் தொடுத்தபடி இருபுறமும் காடுகளுக்குள் புகுந்தனர். அவர்கள் விலகிச்செல்வது புதரொலியாகக் கேட்டது. அவர்களின் மெல்லிய சீழ்க்கையொலிகள் தொடர்புறுத்திக்கொண்டே இருந்தன. அவர்கள் திரும்பி வந்து நகுலனை அணுகினர். முதன்மைக் காவலன் வீர்யவான் நகுலனிடம் “அரசே, இங்கே காட்டுக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125209