Daily Archive: August 20, 2019

வெறுமே மலர்பவை

கலாப்ரியா கவிதைகள் தற்குறிப்பேற்றம் கலாப்ரியாவின் கவிதைகளைப்பற்றி ஒரு முன்பு ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதில் அவருடைய கவிதைகளிலுள்ள ’வெறும்படம்’ என்னும் இயல்பைப்பற்றி எழுதியிருந்தேன். முகநூலில் அவர் எழுதிக்கொண்டிருக்கும் பலநூறு கவிதைகளிலிருந்து இக்கவிதைகளைத் தெரிவுசெய்கையில் மீண்டும் அந்தக் கருத்தே முந்தி எழுகிறது. நவீனக் கவிதையில் காட்சிச்சித்தரிப்பு என்பது இரண்டு வகையிலேயே பயின்றுவருகிறது. ஒன்று, படிமங்கள். காட்சிகளின் கூரிய சித்தரிப்பு ஒரு குறிப்பிட்ட வகையில் அவற்றைப் பார்க்கும்படி நம்மை பணிக்கிறது, நாம் அவற்றை அர்த்தங்களாக விரித்தெடுக்கும் வாய்ப்பை பெறுகிறோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125157

பக்தி இலக்கியம்- கடிதங்கள்

பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.   இந்த மாத தடம் இதழில் ‘பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு’ கட்டுரை வாசித்தேன். தான் நம்பும் இலக்கியப் பார்வையிலிருந்து ஒரு சட்டக வரைவை உருவாக்கிக் கொண்டு எழுதப்பெற்ற தேர்ந்த வடிவம் கொண்ட கட்டுரை. இப்படியொரு கட்டுரையை எழுதுவதற்குத் தமிழில் இன்னொரு எழுத்தாளர் இல்லை. அதிலும் நவீன இலக்கியத்தோடு தொடர்புடைய ஒருவர் இதற்கு முன்பும் இருந்ததில்லை. இந்தக் கட்டுரையில் நீங்கள் உருவாக்கும் சட்டக வரைவு நீங்கள் நம்பும்   இலக்கியக் கோட்பாட்டிற்கேற்ப உருவாக்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124966

அபியை அறிதல்- நந்தகுமார்

விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு… அன்புள்ள ஜெயமோகன்,   “இங்கே படரும் இருளைச் சிறிது சுண்டினால் கூட என் மலை எனக்கு பதில் சைகை தரும்” “என்னைச் சுற்றி நிரம்பும் காட்டுக் களிப்பு” என் வாசற் படிகளிலிருந்து நகர்ந்து கொண்டிருந்தேன். பிறிதொரு நாளில் நோக்கிக் கொண்டிருக்கும் பொழுது திட திரவமற்றிருந்தேன். ஒளியும் இருளுமற்றிருந்தேன். கால்களுக்கடியில் குழைவாய் என் நிலம். சுற்றிலும் உயிர்த்துடிப்புகளின் அமைதி. சலனங்களிற்குள் புகுந்து துளிகளாய் உருமாறிக் கொண்டிருந்தேன். தவிரவும் இன்றிலிருந்து மட்டுமே முளைக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125005

அயல் இலக்கியம்- கடிதம்

இலக்கியவிமர்சனம், அயல் இலக்கியம் வணக்கம் ஜெ.   உங்கள் வாசகர்களுக்குச் சிரமம் வைக்காமல் முகநூலில் நான் எழுதியதை நானே அனுப்பி வைக்கிறேன்.   — ஜெயமோகனை நான் மிகவும் மதிக்கிறேன். அவருடைய விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை நாவல்கள் சமகால தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்ல அவருடைய பல “வாசகர்களாகப்பட்டவர்களைவிட” எனக்கு அருகதை உண்டு. ஏனென்றால் இந்த நாவல்களை நான் சில முறைகளாவது (முழுமையாக) வாசித்திருக்கிறேன். என்னை எங்கெல்லாம் தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் பேச …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125274

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51

திரௌபதி துயிலில் மயங்கிவிட்டிருந்தாள். மெல்லிய காலடிகளுடன் குந்தி உள்ளே வந்து நின்றபோது சேடி முடிநீவுவதை நிறுத்திவிட்டாள். அதை உணர்ந்து அவள் விழிப்புகொண்டு குந்தியை நோக்கியபின் வணங்கியபடி எழுந்தாள். “அமர்க!” என்று அவள் கைகாட்டிவிட்டு அப்பால் சிற்றிருக்கையில் அமர்ந்தாள். “மந்தன் நிகழ்ந்த அனைத்தையும் சொன்னான். நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் அஸ்தினபுரியின் அரசனை தொடையிலறைந்து கொன்றிருக்கிறான்” என்றாள். பெருமூச்சுடன் “அச்செய்தியை எவ்வண்ணமும் ஒளிக்க இயலாது. அந்த உடலை அங்கேயே போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் ஒற்றர்கள் இதற்குள் அதை கண்டடைந்திருப்பார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125186