Daily Archive: August 18, 2019

அர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை! -பாலா

சீன தேசத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள், பெண்களுக்கு, ‘பாதம் ஒடுக்குதல்’ என்னும் ஒரு கொடூர வழக்கம் இருந்தது. சிறிய பாதங்களே பெண்களுக்கு அழகு எனக் கருதப்பட்டது. கால் விரல்கள் கட்டப்பட்டு, குறுகிய காலணிகள் அணிவிக்கப்பட்டுப் பல ஆண்டுகள், பெண்களின் கால்கள் பழக்கப்படுத்தப்பட்டால் அவை, சிறிதாக, தாமரை மலர்கள் போலாகிவிடும் என நம்பப்பட்டது. அது ஒரு மூட நம்பிக்கை. அத்தகைய குரூரமான முறையினால், பாதங்கள் குறுக்கப்பட்டு, எலும்புகள் வளைந்து,  பல கோடிப் பெண்களின் பாதங்கள் சிதைந்து போயின.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125151

அபியின் லயம்

அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள்   அன்புள்ள ஜெ   அபியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். என் அனுபவங்களைக் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்ள முயல்வதுதான் நல்ல வழி என நினைக்கிறேன். ஆகவே தொடர்ச்சியாக அதற்கு முயன்றுகொண்டிருக்கிறேன். அபியின் ஆரம்ப காலக் கவிதைகள் கிப்ரான் கவிதைகள் போல நேரடியான பேச்சாகவே உள்ளன. பின்னர்தான் அனுபவம் மயங்கும் நிலையைப்பற்றிய பல கவிதைகளை எழுதியிருக்கிறார்.அந்தப் படிமங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிக்கலாக ஆகிக்கொண்டே செல்கின்றன   எனக்கு அவருடைய இந்தக்கவிதை மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124897

மகரந்தவெளி – கடிதம்

‘ மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்   மகரந்த வெளி’ கட்டுரையை காலையில் வாசித்தவுடன் இதை எழுதுகிறேன். சுனில் கிருஷ்ணனின் உழைப்பின் மீது கொண்டுள்ள மரியாதை அவரது ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் அதிகரிக்கிறது. சிங்கை – மலேசியப் பயணத்தில் இன்னும் பல அனுபவங்களை இக்கட்டுரையில் அவர் தொகுத்து அளித்துள்ளார்.  அது மலேசிய – சிங்கை படைப்புகளை இன்னும் நெருக்கமாக அறிய வழியமைத்துள்ளது. ஒருவேளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் உருவான இலக்கிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125167

மோடி, முதலை,முதலீடு

முதலை மோடி மோடி,முதலை -கடிதம்   அன்புள்ள ஜெ   பாலா எழுதிய குறிப்பு முக்கியமானது. இன்றைய அரசு எந்தவிதமான சூழலுணர்வும் இல்லாமல் வெறும் வணிகநோக்கில் காடுகளை அழிக்கும் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கு எதற்குமே தடையில்லை. மலேசியா, சீனா, பிரேஸில் போன்ற நாடுகள் சூழலை ஈவிரக்கமில்லாமல் அழித்து தொழிலை வளர்க்கின்றன. அந்தத் தொழிலின் லாபங்கள் சிறுபான்மையினர் கைகளுக்குச் செல்கின்றன. உலகம் கதறிக்கூப்பாடுபோடுவதை அவர்கள் செவிகொள்வதில்லை. இந்திராகாந்தி காலத்திலிருந்து இந்தியா சூழலுணர்வைப் பற்றிய தெளிவு கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125189

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49

திரௌபதி கதவைத் திறந்து வெளியே வந்தபோது சேடி தலைவணங்கி மேலாடையை நீட்டியபடி “பேரரசி நெடுநேரமாக காத்திருக்கிறார்கள். சற்று பொறுமையிழந்துவிட்டார்கள்” என்றாள். மேலாடையை வாங்கி தன் தோளில் அணிந்து கூந்தலை தன் இடக்கையால் நீவி பின்னால் அமைத்தபடி ஒன்றும் சொல்லாமல் திரௌபதி நடந்தாள். சேடி அவளுக்குப் பின்னால் ஓசையெழாமல் நடந்து வந்தாள். ஆவல்கொள்ளும்போதும் விரைவுச்செய்திகள் சொல்லப்படும்போதும் எவரேனும் காத்திருக்கும்போதும் பிறரால் பார்க்கப்படும்போதும் நடை மாறுபடுவது மானுட இயல்பு. அவ்வியல்பைக் கடந்தவர்களே அரசர்கள் என அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. அவ்வுணர்வு இருந்தமையால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125192