Daily Archive: August 17, 2019

நமது ஊற்றுக்கள்

  சிற்பங்களைப் பயில   அன்புள்ள ஜெயமோகன்,   சமீபத்தில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலை வாசித்தேன். பாலாறு, காவிரி, பொருநைக் கரைகளில் இருக்கும் ஆலயங்களுக்கு நேரில் சென்று வந்த தன் பயண அனுபவங்களை கல்கி இதழில் இரண்டரை ஆண்டுகள் தொடராக எழுதியிருக்கிறார். பின்னர் அது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தொடராக வெளியான போதே பரவலான வாசக கவனமும் பெற்றிருக்கிறது. ’’தமிழ் கூறு நல்லுலகின்’’ பண்பாட்டு மையங்களை அடையாளப்படுத்துகிறார் ஆசிரியர். ஸ்ரீரங்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125059

சுரேஷ் பிரதீப் படைப்புக்கள் – கருத்தரங்கு

  அன்பு நண்பர்களே,   சுரேஷ் பிரதீப்பின் நாவல் மற்றும் சிறுகதைகள் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன். நிகழ்வுக்கு உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். நன்றி. அன்புடன், சமயவேல் 9486102498

Permanent link to this article: https://www.jeyamohan.in/125148

ஒரு வேண்டுதல்

திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி- அடுத்த சூழ்ச்சி திருப்பூர் குற்றச்சாட்டு -நம் அறமும் குடும்பமும் ஒரு குற்றச்சாட்டு திருப்பூர், கொற்றவை- கடிதம் அன்பின் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனர் முருகசாமி அய்யா, உடல்நலக்குறைவினால் நினைவிழந்து மருத்துவமனையின் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர்மீது தொடரப்பட்ட பொய்வழக்குகளால் அவரும் அவருடைய மாணவர்கள் சிலரும் திருப்பூர் பள்ளியைவிட்டு வெளியேறி தற்போது சென்னையில் வசிக்கின்ற நிலையில், இந்நெருக்கடி அவர்களனைவரையும் சூழ்ந்துள்ளது. சென்னையில் அம்மாணவர்கள் தங்களின் கனவுலட்சியங்களை எல்லாம் ஒளித்துக்கொண்டு, கிடைத்த பணிகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125179

அபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்

அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள்   அன்புள்ள ஜெ,   அபி கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நாலைந்து மாதம் முன்னதாகவே இப்படி விருதுபெறும் படைப்பாளிகளை அறிமுகம் செய்வது மிகவும் நல்லது என நினைக்கிறேன். பெரும்பாலும் கடந்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கே விருதுகள் அளிக்கிறீர்கள். அவர்களில் பலர் நம்மால் அறியப்படுபவர்கள் அல்ல. பொதுவாக இன்றைக்கு ஏதேனும் வகையில் முகநூலில் பேசப்படும் படைப்பாளிகள்தான் அறியப்படுகிறார்கள். அவர்களே வந்து வசைபாடவேண்டும். அல்லது வேறு எவரேனும் அவர்களை வசைபாடவேண்டும். அதற்கு அரசியல்தேவை. தூய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124847

மோடி,முதலை -கடிதம்

  அன்பின் ஜெ..   முதலை மோடி கட்டுரை படித்தேன். மோதியைக் கிண்டலடிக்கும் அபத்தங்களைச் சுட்டியிருந்தீர்கள். அதைக் கிண்டலடித்த முகநூல் பதிவுகளில் எனதும் ஒன்று.   இது ஜேஜே சில குறிப்புகளில், வரும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறது. ஒரு ஐரோப்பிய நகரத் தெருவில், திடீரென ஒரு காண்டா மிருகம் ஓடுகிறது. அந்த அபத்தத்தை விட்டு விட்டு, காண்டாமிருகம் ஆசியக் காண்டாமிருகமா அல்லது ஆஃப்ரிக்கக் காண்டா மிருகமா என மக்கள் வாதம் செய்து கொண்டிருக்கும் அபத்தம்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125145

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48

ஏவல்மகள் வந்து சிற்றறையின் கதவை தட்டும்போது திரௌபதி துயின்றுகொண்டிருந்தாள். தட்டும் ஒலி கேட்டு அவள் உடல் அதிர்ந்தது. அந்த ஒலி அவளுக்குள் வேறெங்கோ ஒலித்தது. அவள் ஒரு மூடிய கதவை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால் நின்று பேரோசையுடன் அதன் மேல் மோதினார்கள். “யார்?” என்று அவள் கேட்டாள். கதவு அழுகையில் துடிக்கும் உதடுகள்போல் விரியத் திணறி அதிர்ந்தது. “யார்? யார் அது?” என்று அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். மறுமொழியின்றி கதவைத் தட்டும் ஓசை வலுத்துக்கொண்டிருந்தது. மறுபக்கம் என அவள் ஏவல்பெண்டின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125141