Daily Archive: August 16, 2019

முதலை மோடி

காலையில் இருந்தே முதலையைப் பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்ததைப் பற்றிய மீம்கள், அசட்டு நகைச்சுவைகள் வந்துகொண்டே இருந்தன. டைனோசரைக் கொண்டுவந்தேன், புலியைக்கொண்டுவந்தேன், பல்லியைக் கொண்டுவந்தேன் என்று ஒரே டெம்ப்ளேட்டில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள். முதலை என்ற வார்த்தை இருந்தாலாவது மின்னஞ்சல்களை தடுத்துவைக்கலாம். என்ன செய்வது என்று தெரியவில்லை   முதலில் என்ன ஏது என்று விசாரிக்கத் தோன்றவில்லை. பிறகுதான் தெரிந்தது மோடி சின்னவயதில் முதலைக்குஞ்சை வீட்டுக்கு கொண்டுவந்திருக்கிறார் என்று ஒரு பேட்டியில் சொன்னார் என்று. அதைக் கேலி செய்கிறார்கள். இதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125072

மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்

[கோ சாரங்கபாணி] [ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை]    தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125066

அபியின் தெருக்கள்

அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள் ஜெ   அபியின் கவிதைகளின் அருவத்தன்மையைப் பற்றி பல குறிப்புகள் எழுதப்பட்டுவிட்டன. இனி நீண்ட கட்டுரைகள் எழுதப்படும்போதும் இதேபோன்ற பார்வைதான் நீடிக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஒரு கவிதையை இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்பதில்லை. அருவமான படிமம் கொண்ட கவிதை என்றால் அப்படி வாசிப்பதற்கான ஒரு வாய்ப்பை அது வழங்குகிறது என்று மட்டும்தான் பொருளே ஒழிய அது அருவமான கவிதை என்று அல்ல.   நான் அபியின் வாசகன் என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124885

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-47

தொலைவில் தெரிந்த பந்த ஒளியை முதலில் சாத்யகிதான் கண்டான். முதலில் அது மின்மினியின் அசைவெனத் தோன்றியது. அதற்குள் உள்ளமைந்த எச்சரிக்கையுணர்வு விழித்துக்கொண்டது. “யாரோ வருகிறார்கள்” என்று கூவியபடி அவன் எழுவதற்குள் திருஷ்டத்யும்னன் விசையுடன் எழுந்து “அவர்தான்… ஆசிரியரின் மைந்தர்” என்று கூவியபடி தன் வில்லை நோக்கி பாய்ந்தான். “எப்படி தெரியும்?” என்று தன் வில்லை எடுத்தபடி எழுந்த சிகண்டி கேட்டார். “அவருடைய மூன்றாம்விழியை நான் பார்த்தேன். ஒரு கண மின் என்று அது தெரிந்தணைந்தது. அவர் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125093