Daily Archive: August 15, 2019

நடனம்

  விஜி வரையும் கோலங்கள் வாழ்க்கையிலிருந்து பேசுவது… சமீபத்தில் போகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் ஒரு மென்பொருளைப் பயன்படுத்தி தன் முகத்தை இளமையான முகமாகவும் முதியமுகமாகவும் ஆக்கிப்பார்த்ததைப் பற்றிச் சொன்னார். இளமையான முகம் அப்படியே அவர் மகன் முகம்போலிருந்தது. அதைக்கண்டு போகன் சோர்ந்துவிட்டார். “சொந்தமாக ஒரு முகம் வைத்துக்கொள்ளக்கூடவா உரிமை இல்லை நமக்கு?” என்பதுபோல   என் முகம் என் அப்பாவின் முகம்போல ஆகிவிட்டதை உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை. சாயலே இல்லை என்றுதான் நான் நம்பியிருந்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125028

மந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி– ராதன்

  அன்புள்ள ஜெ,   அபி கவிதைகளைப்பற்றி எட்டு ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் சொல்லியிருந்தீர்கள். நமக்கிடையே தொடர்பு விட்டுப்போய்விட்டது. நான் சொந்தத்தொழில் தொடங்கி ஒரு சுற்று வந்துவிட்டேன். இப்போது அபி கவிதைகள் வழியாகவே ஒரு தொடர்பு உருவாகிவருவதில் மகிழ்ச்சி. நான் அன்று எழுதிக்கொண்டிருந்த கவிதைகள் அகவயமானவை என்றும் ஆகவே நான் அபியை வாசிக்கவேண்டும் என்றும் சொன்னீர்கள் என்பது ஞாபகம். அபி கவிதைகளை அன்று வாசித்தேன். அன்றே அவை எனக்கு பெரிய கிளர்ச்சியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124871

மறைந்த உலகங்கள் -கடிதம்

மறைந்த கனவுகளின் குகை தொல்விந்தைகள்- கடிதங்கள் மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா இனிய ஜெயம்   தொல்விந்தைகள் மீதான கடிதங்களையும் இணைப்புகளையும் வாசித்தேன் சுவாரஸ்யம்தான். அறுதி உண்மைக்கு செல்லும்வரை ஏலியன்களை துணைக்கோடுவது  நல்லதுதான் ஆனால் அந்த யூகங்கள் இந்தியநிலத்தின் ‘ஷர்லக் ஹோம்சுகள்’ கையில் சிக்கும்போது என்ன விளைவுகள் நேரும் என்பதை யூ ட்யுப் இல் சில விடியோக்கள் வழியே அறிய முடிகிறது. எல்லோரா ஏலியன் டெக்னாலஜி அளித்தமை கொண்டே ‘குடையப்’ பட்டிருக்கிறது என்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124804

கலிங்கம் -கடிதங்கள்

  ஒரிசாவின் லகுலீசர் லகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்   இனிய ஜெயம்   ஒரிசாவின் லகுலீசர் பதிவு கண்டேன். பிரசுரம் காணும் என நினைக்கவில்லை :) உங்களிடம் தெரிவித்துக் கொள்வது போதும் என்ற உணர்வில் குறிப்புகள் மட்டுமே அமைந்த மடல்.  சற்றே விரிவாக எழுதி இருந்தால் அப் பதிவுகளைத் தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன்.   குறிப்பாக வைப்பு முறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124807

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46

சதானீகன் திண்ணையில் பாய்ந்தேறியபோது கால் தடுக்கி விழுந்தான். மருத்துவன் “இளவரசே!” என கூவியபடி தொடர்ந்து வர அவன் மூச்சிரைத்தபடி உள்ளே புகுந்து “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூவினான். அவனுடைய கூச்சலில் விழித்துக்கொண்டு எழுந்தமர்ந்த பிரதிவிந்தியன் “என்ன? யார் அது?” என்றான். “மூத்தவரே, பெரிய தந்தை கொல்லப்பட்டார்” என்றான். அவன் அருகே செல்லமுயன்று முழங்கால் முட்டிக்கொண்டு “கொன்றுவிட்டார்கள்… கொன்றுவிட்டார்கள்!” என்று கதறினான். “யார்? யார் கொன்றது?” என்று பிரதிவிந்தியன் கேட்டபடி எழுந்து அவன் தோளை பற்றிக்கொண்டான். “சொல், எவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125054