Daily Archive: August 14, 2019

சிறுகதை அரங்கும் சித்தேஸ்வரன் மலையும்

நான் மாலை ரயிலுக்கு ஈரோடு செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் முன்பதிவு செய்த பயணச்சீட்டைப் பார்த்தால் அதிகாலை ஆறுமணி. மாலை ஆறு மணி அல்ல. ஆகவே முழு இரவும் அமர்ந்து வெண்முரசு எழுதினேன். காலையில் அப்படியே கிளம்பி ரயிலில் ஏறிப் படுத்து கரூர் கடந்தபின் விழித்துக்கொண்டேன். ஒரு முட்டைப்பிரியாணி சாப்பிட்டேன். பிரியாணி மட்டுமே இருந்தன. மற்ற இரு பிரியாணிகளைவிட முட்டை பாதுகாப்பானது.   ஆனால் என் வாழ்நாளில் இப்படி ஓர் உணவை உண்ண நேரிட்டதில்லை. உணவு மோசமாக ஆவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125029

அபி கவிதைகளின் வெளியீடு – கடிதங்கள்

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நான் கலிஃபோர்னியாவிலிருந்து பூவேந்திரன் எழுதுகிறேன். கவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிப்பதன் மூலம் அபியின் கவிதைகளை பலர் வாசிக்க அறிமுகப்படுத்தி  இருக்கிறீர்கள்.  நன்றி. நான் 1982-1985 மேலூர் அரசு கலைக்  கல்லூரியில் கணிதம் படித்தேன்.  எனக்குத் தமிழ்ப் பாடம் நடத்தியவர் அபி சார்.  மிகவும் வித்தியாசமான தமிழ் ஆசிரியர்.  கடினம் என மாணவர்கள் ஒதுங்கும் யாப்பிலக்கணத்தை அவர் நடத்திய விதம் என்னை / எங்களை மிகவும் கவர்ந்தது; …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125013

வீரப்ப வேட்டை

  Veerappan: Chasing the Brigand அன்பின் ஜெ,   சென்ற வாரத்தில் Veerappan : Chasing the brigand என்ற நூலை வாசித்தேன். வீரப்பனைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்த டிஜிபி விஜயகுமார் எழுதிய நூல். சட்டமும் வணிக மேலாண்மையும் படித்திருக்கிறார். ஒரு காவல்துறை ஆய்வாளரின் மகனாக ஐ.ஏ.எஸ் பாஸ் செய்து சுயவிருப்பத்தின் காரணமாக காவல்துறை பணிக்கு வருகிறார். கமாண்டோக்களுக்கு பயிற்சியளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இந்திய பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை கவனிக்கும் பொறுப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124761

பயணம்- கடிதங்கள்

நடந்தே தீரணும் வழி… பயணியின் கண்களும் கனவும் அன்புள்ள ஜெ, மாயனின், ‘நடந்தே தீரணும் வழி’ வாசித்தவுடன் எழுதத் தோன்றியது. என் சி பி எச் வெளியிட்டுள்ள இராகுல் சாங்கிருத்தியாயனின் ஊர்சுற்றி புராணம் வாசித்தேன். எத்திராஜுலு அவர்களின் மொழிபெயர்ப்பு. பயணம் அறிவை விரிவுபடுத்துகிறது என்னும் வாக்கிற்கு இன்னொரு சான்று. ஊர்சுற்றிக்களின் வகைகள், கைக்கொள்ளவேண்டியவை, கடமை எனப் பல்வேறு தலைப்புகளில் நகைச்சுவை தெறிக்கும் நடை, அறிவியல், தத்துவம், மதம்சார் சிந்தனைகள் என உட்பொருள் சார்ந்தும் என்றும் பொலிவிழக்காத எழுத்தும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124744

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45

“நெடும்பொழுது…” என்னும் சொல்லுடன் சதானீகன் தன்னுணர்வு கொண்டபோது அவன் எங்கிருக்கிறான் என்பதை உணரவில்லை. நெடுநேரம் அவன் போரிலேயே இருந்தான். குருதிமணம், அசைவுகளின் கொந்தளிப்பு, சாவில் வெறித்த முகங்கள். பின்னர் ஒரு கணத்தில் அவன் உணர்ந்தான், அந்தப் போரில் ஓசையே இல்லை. அமைதியான நிழற்கொப்பளிப்புபோல் அது நிகழ்ந்துகொண்டிருந்தது. அவன் உடல் வியர்வையில் குளிர்ந்து நடுங்க, கடும் விடாயில் நா வறண்டு தவிக்க, விழித்துக்கொண்டான். எழுந்து அமர்ந்து சூழ நோக்கியபோதும் எங்கிருக்கிறான் என்னும் உணர்வு எழவில்லை. மஞ்சத்திலிருந்து கால்களை நிலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125023