Daily Archive: August 13, 2019

தரவுகள் என்னும் மூடுதிரை

பைரப்பாவின் திரை [ஆவரணா] வாங்க அன்பின் ஜெ,   நான் பள்ளிக்கூடத்தில் படித்த (!!) வரலாறாகட்டும் அல்லது இப்போது ஊடகங்கள் கூறும் வரலாறாகட்டும், நிஜத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளவை என்பதை உணர்த்திய பல புத்தகங்கள் உண்டு. அவற்றில் நான் முதலில் படித்தது மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள். ஒரு ஏழாம் வகுப்பு பள்ளி மாணவனுக்கும் (நான் அந்த புத்தகம் வெளிவந்தபோது ஏழாம் வகுப்பில் தான் இருந்தேன்) புரியும்படி எழுதியது மாபெரும் வெற்றி. பேசாமல் இதனை பள்ளி பாடநூலாக வைக்கலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124974

நாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன்

பாரதியும் பாரதிக்குப்பின் பிச்சமூர்த்தியும் தொடங்கிவைத்த புதுவித எழுத்து முறைமைகள்தான், அறுபதுகளில் கவிதை இயக்கம் வேர்பிடித்து வளர அடி மண்ணாய் இருந்ததெனச் சொல்லலாம். அந்த வளத்தில் விளையத் துவங்கியவை இன்றும் சங்கிலித்தொடராய் மகசூல்கள் தந்தவண்ணம் இருக்கின்றன. அப்போது ஏராளமான கவிகள் வந்தனர். பல குழுவினராய் பிரிந்து இயங்கி, கவிதைத் துறைக்கு வளம் சேர்த்தனர். ஒரு கோணத்தில் பாரதியிலிருந்தே தமிழின் அரூபக் கவிதைகளும் தொடங்கிவிட்டன என்றாலும், அவருக்குப் பின், அதில் குறிப்பிடும்படி இயங்கியவர், தருமுசிவராம் என்கிற பிரமிள். அதன் பின், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124890

தீர்வு- கடிதங்கள்

தீர்வுகள் – போகன் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,   போகர் அல்லவா அப்படித்தான் சொல்லமுடியும்.  மலினமல்லாத இடத்தில் தீர்வுகளுக்கு வழி இல்லை, சுத்தமாக துளி கூட மலினமே இல்லாவிட்டால் பிரச்சனைகளே இல்லை.   கவிஞர்களின் தீர்வு கதை எழுதுபவர்களின் தீர்வு மொழிபெயர்ப்பாளர்களின் தீர்வு   என்றவர் ”வாசகர்களின் தீர்வு” என்பதை திட்டமிட்டு மறைத்துவிட்டதற்கு என் கண்டனத்தை பதிவு செய்யவிரும்புகிறேன்.  உலக இலக்கியங்களை வாசிக்க ஒரளவினுக்கேனும் முயன்று கொண்டிருக்கவில்லையா? பத்து ருபாய்க்கு இல்லாவிட்டாலும் இரண்டு ருபாய் மதிபிற்க்கேனும் தரமுடியாமலா போய்விடும்?   அன்புடன் விக்ரம் கோவை     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124963

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44

துரியோதனனின் சிதையில் எரிந்த தீ தன் வெம்மையை தானே பெருக்கிக்கொண்டது. தழல்கள் ஒன்றன்மேல் ஒன்றென ஏறி வான் நோக்கித் தாவின. தீயின் இதழ்களுக்குள் துரியோதனனின் உடலை நோக்க விழைபவன்போல அஸ்வத்தாமன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். கிருதவர்மன் எழுந்து உடலை உதறியபடி வந்து அவன் அருகே அமர்ந்தான். கிருபர் பெருமூச்சுவிட்டு உடல் கலைந்து “இங்கு நம் கடன் முடிந்தது” என்றார். துரியோதனனின் முகம் எரிந்துகொண்டிருந்தது. தீயை காற்று அள்ளி சுழற்ற அருகே நின்ற ஒரு மரத்தின் இலைகள் சடசடவென்று சுருங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124978