Daily Archive: August 12, 2019

சீமானும் கிராமப்பொருளாதாரமும்

ஆயிரங்கால்களில் ஊர்வது அன்புள்ள  ஜெ,   சமீபமாக நான் மிகவும் கவனிப்பது சீமானின் பரப்புரைகளைத்தான்.தமிழ் அரசியல் மேடைகளில் முதன்முறையாக ஜெ.சி.குமரப்பாவின் கிராமப்புற காந்திய பொருளாதாரத்தை வலிய, உரக்க பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் தான்.   இது எனக்கு மிக வியப்பாக இருக்கிறது. காந்தியத்தை அதிகம் எழுதிய நீங்கள் இதைக்கவனித்திருக்கிறார்களா?     அன்புடன், வா.ப.ஜெய்கணேஷ்.     அன்புள்ள ஜெய்கணேஷ்   கிராமியப்பொருளியல், விவசாயத்தின் அழிவு ஆகியவற்றை பேசும் ஏராளமான தன்னார்வ அமைப்புக்கள் இங்கே உள்ளன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122259

அபிக்கு வாழ்த்து- பாவண்ணன்

  அன்புள்ள ஜெயமோகன்     வணக்கம். நலம்தானே?     இந்த ஆண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருதுக்குரியவராக கவிஞர் அபி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ந்தேன்.  நான் விரும்பிப் படிக்கும் கவிஞர்களில் அவரும் ஒருவர். என்றென்றைக்குமான கவிதையுலகின் முக்கியமான தூண்களில் ஒருவர் அவர். எதையும் விளக்காமல் அல்லது சித்திரமாக எதையுமே முன்வைக்காமல் மிகக்குறைவான சொற்களால் ஒரு கோலத்தை எழுதிக் காட்டி மறையும் தன்மையை ஒரு புதுமையாக உத்தியாகத் தன் கவிதைகளை முன்வைத்தவர்     அவர்.  எண்ணிக்கையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124796

எழுத்தாளன்,சாமானியன் -ஆர்.அபிலாஷ்

எழுத்தாளனும் சாமானியனும்   எழுத்தாளனும் சாமானியனும் என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக ஆர்.அபிலாஷ் இக்குறிப்புகளை எழுதியிருக்கிறார்   எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (1) எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (2)   இவை அபிலாஷின் தரப்புகள். என் அவதானிப்பு என சில சொல்வதற்குண்டு. அபிலாஷ் கல்லூரிப் பேராசிரியர். ஓர் அரசியல்வாதிக்கு, அதிகாரிக்கு இலக்கியவாதி என்பது மேலதிகப்பெருமை. தமிழகத்தில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத மதிப்பு ரவிக்குமாருக்கும் சு.வெங்கடேசனுக்கும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் உருவாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124641

பாரியின் மொழியாக்கக் கதைகள் – கடிதங்கள்

  அன்பின் ஜெ,   இறுதியாக மொழியாக்கம் செய்தது யசனாரி கவபத்தாவின் ‘BirthPlace’ எனும் சிறுகதை – பிறப்பிடம்   சிறிய கதை, அவரை சரியான வகையில் பிரதிநிதித்துவம் செய்கிறதா எனத் தெரியவில்லை. நான் தேடியவரை இணையத்தில் இவரது சிறுகதைகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. கிண்டிலில் வாங்கி வாசிக்க வேண்டும். இப்போதைக்கு இக்கதை மட்டும் செய்துள்ளேன்.   இத்துடன் பத்து கதைகள். இச்செயலில் பலருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மொழியாக்க அனுபவத்தை இங்கு பதிவிட்டிருக்கிறேன்:   இங்கிலாதிருத்தல் – மொழியாக்க அனுபவம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124814

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-43

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டைச் சென்றடைந்தபோது அவர்கள் முற்றாகவே சொல்லடங்கி வெறும் காலடியோசைத் தொடராக இருளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தார்கள். தெற்குக்காடு சீவிடுகளின் ஒலிகூட இன்றி அமைதியாக இருட்குவைகளின் பரப்பாக சூழ்ந்திருந்தது. கிருபர் தொண்டையைச் செருமி, குரல்கொண்டு “அங்கே எந்த ஓசையுமில்லை” என்றார். அஸ்வத்தாமன் அதைக் கேட்டும் மறுமொழி உரைக்கவில்லை. கிருபர் தானாக தொடர்ந்தார். “நாய்நரிகளின் ஊளையால் களம் இப்போது நிறைந்திருக்கும் என எண்ணினேன். அங்கே வெறும் இருள்வெளியே எஞ்சியிருக்கிறதுபோலத் தோன்றுகிறது” என்றார். அஸ்வத்தாமன் மறுமொழி சொல்லவில்லை எனக் கண்டு “ஆம், களம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124948