Daily Archive: August 11, 2019

கிளைதாவுவதற்கு முன்பு…

அன்னையின் சிறகுக்குள்   ஜெ, உங்களால் இப்பொழுது “அன்னையின் சிறகுக்குள்” கட்டுரையில் எழுதியது போல் ஒரு பயணம் மேற்கொள்ள இயலுமா? (ஹல்த்வானி).   அடிப்படையில், பணம் இல்லாமல்?     //உடைகள், உணவு, வசதிகள் எதிலும் ‘ போதும்,வேண்டாம்’ என்று சொல்லும் மனநிலையையே எப்போதும் கொண்டிருக்கிறேன். //   என்பதில் தொடங்கினாலும்,   //நான் மெல்லமெல்ல வசதிக்கு பழகிப்போய்விட்டிருக்கிறேன். அழகு இல்லாத விடுதி உளச்சோர்வை உருவாக்குகிறது. அது இங்கே ஆடம்பரம்தான். ஆகவே எப்போதுமே சற்று உயர்தர விடுதிகளையே நாடிச்செல்கிறேன்.//   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124965

அபி -கடிதங்கள்

அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள் அபி விக்கிப்பீடியா   அன்புள்ள ஜெ,   அபி கவிதைகளை வாசித்தேன்.இந்த விருதுக்குப்பின்னர்தான் அவருடைய கவிதைகளை வாசிக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்வதில் வெட்கமில்லை.  ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். யூட்டிலிட்டி சார்ந்த ஒருவிஷயத்திற்குத்தான் இயல்பாக உடனடியான வாசகர்கள் கிடைப்பார்கள். அன்றாட அரசியல் மட்டுமல்ல கேளிக்கையும்கூட யூட்டிலிட்டி சார்ந்ததுதான்.   அதைப்பற்றிய ஒரு பேச்சு சூழலில் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு நகரத்தில் நல்ல ஓட்டல் எது என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124791

மிலன் குந்தேரா- தோற்றுப்போதலின் அழகியல்

  மிலான் குந்தரே எழுதிய புனைவுகளில் ஆகவும் சிறந்ததாக The Unbearable Lightness Of Being நாவலை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நாவலின் முதல் இரண்டு பக்கங்களின் எந்தப் புள்ளியில் இருந்து அந்த நாவல் அவரில் தொடங்கியது என்பதை எழுதிவிடுகிறார். அதில் நீட்சே வருகிறார். Parmenides வருகிறார். இன்னும் சில தத்துவவாதிகள் வருகிறார்கள். அவர்களது கருத்துக்களை எல்லாம் குறிப்பிட்டுச் சொல்லும் குந்தரே, தனக்குள்ள கேள்விகளையும் முன் வைத்து அவர்களை மறுதலிக்கவும் முயல்கிறார். அதில் இருந்து தனக்கான தேடலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124416

மறந்த கனவுகளின் குகை- கடிதம்

மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா இனிய ஜெயம்   https://www.bbc.com/tamil/india-42959325   இந்த சுட்டி உங்கள் பார்வைக்கு.   1850-1950 இந்தக் காலக்கட்டம் இந்தியாவில் மானுடவியல்,வரலாற்று ஆய்வுகள்  ஒரு பாய்ச்சலை நிகழ்த்திய காலம் . இக் காலக்கட்டத்தில் ராபட் ப்ரூஸ் பூட்  கொசஸ்தலை அதிரம்பாக்கம் இவற்றில் கண்டெடுத்த தொல் பழங்கால கல்லாயுதங்கள், அவற்றின் காலம் இன்றிலிருந்து மூன்று லட்சம் ஆண்டுகள் என்ற துல்லிய வரையறைக்கு வர 2020 வரை உழைப்பும் வேலைகளும் நடந்திருக்கிறது.  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124802

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42

காலகத்தை அணுகுந்தோறும் கிருபர் நடைதளர்ந்தார். அஸ்வத்தாமன் வேறெங்கோ உளம் அமைய நடந்துகொண்டிருக்க கிருதவர்மன் நின்று திரும்பி நோக்கி மூச்சிரைக்க “விசைகொள்க, ஆசிரியரே. இருட்டி வருகிறது. அங்கே ஒளியில்லையென்றால் சென்றும் பயனில்லை” என்றான். “இந்த இரவு இருண்டது. மழையும் பெய்யக்கூடும். அரசரின் உடல் அங்கே தனித்துக்கிடக்கிறது…” கிருபர் “இத்தனை களைப்பை நான் உணர்ந்ததே இல்லை” என்று முனகிக்கொண்டு மேலும் நடந்தார். காட்டுக்குள் புகுந்து ஓடையினூடாக மேலேறத் தொடங்கியபோது அவ்வப்போது நின்று நீர் அள்ளிக்குடித்தார். பாறைகளில் இருமுறை தளர்ந்து அமர்ந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124923