Daily Archive: August 8, 2019

கண்டு நிறைவது

  அன்புள்ள ஜெ, சமீபகாலமாக பயணம் குறித்த ஒரு கேள்வி என்னை அலைக்கழிக்கிறது. இனிமையான அலைக்கழிப்புதான். எந்த அளவுக்கு என்றால் என் கனவில் வந்த உங்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு. கனவுலக ஜீவியான நீங்கள் ஏன் எனக்கு கனவில் பதில் சொல்லவில்லை? இந்திய மாநிலம் ஒவ்வொன்றும் நிலம், இனம், மதம், வரலாறு முதலிய பல்வண்ணக்கூறுகள் இணைந்த ஒரு வானவில் போல உள்ளது. அந்த நிலத்தில் தொடர்ந்து பயணம் செய்யும்போது அதன் அனைத்து கூறுகளும் மெல்ல மெல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123848

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள் அபி விக்கிப்பீடியா   முரண்களின் நடனம்:   நெடுங்கால நிசப்தம் படீரென வெடித்துச் சிதறியது கிளைகளில் உறங்கிய புழுத்தின்னிப் பறவைகள் அலறியடித்து அகாத வெளிகளில் பறந்தோடின தத்தம் வறட்டு வார்த்தைகளை அலகுகளால் கிழித்துக் கொண்டே –அபி   முரண்கள். அது இல்லாத வெளியேயில்லை. மூளை–இதயம், இருள்–வெளிச்சம் , நினைவு– மறதி, நன்மை–தீமை, இருப்பு–இன்மை என அங்குலம் அங்குலமாய் இவ்வுலகம் முழுவதுமே நேர்த்தியாக முரண்களால் அழகுற நெய்யப்பட்டுதான் இருக்கிறது. சொல்லப்போனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124654

வைகுண்டம் அவர்களுக்கு பதில்

இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி– வைகுண்டம் அன்பின் ஜெ.. வைகுண்டம் அவர்களின் கடிதம் மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. காந்தியப் பொருளியல், உலகில் மனிதர்களின் அடிப்படைத் தேவைக்கான அனைத்துச் செல்வங்களும் உள்ளன. ஆனால், மனிதனின் பேராசையை பூர்த்தி செய்ய அவை போதாது என்னும் புள்ளியில் இருந்து துவங்குகிறது. மேலும் அது, சமூகத்தின் கடைக்கோடி மனிதனின் அடிப்படைத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதிலிருந்து தொடங்குகிறது. ஆனால், மரபான பொருளாதாரக் கொள்கைக்கு இந்த அறச்சிக்கல் இல்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124705

நவீன்- எதிர்முகம்

பாரதி தொடங்கி ஜெயகாந்தன் வரை கஞ்சா அடிக்கும் பழக்கமிருந்துள்ளது. இதை நாம் அவர்களுடைய வாழ்க்கை குறிப்பில் அறியலாம். அப்பழக்கத்தை அவர்கள் மிக வெளிப்படையாக வைத்திருந்துள்ளனர். ஜெயகாந்தன் தொடங்கி பாலகுமாரன் வரையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளனர். இவர்களையெல்லாம் நீங்கள் இலக்கியவாதி இல்லயெனச் சொல்வீர்களா? அது போல ஜி.நாகராஜனும் பாலியல் தெருக்களில் அலைந்த அனுபவங்களை நிறைய புனைவுகளாக எழுதியுள்ளார். இவரை தமிழ் இலக்கியவாதிகளின் பட்டியலில் இருந்து புறக்கணிக்க முடியுமா?   எதிர்முகம் நேர்காணல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/124928

விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு…

  தமிழில் ஒரு புதிய ஆன்மிகத்தைக் கவிதையில் உருவாக்கியவர் என்று அபியைச் சொல்லலாம். மதக்குறியீடுகள் அற்ற, அமைப்புப்பின்புலம் அற்று தனிமனித அகத்துள் மட்டுமே நிகழும் ஆன்மிகம் அது. காலம் -வெளி- வாழ்க்கை என முப்பரிமாணத்தில் தன் அடிப்படைக் கேள்விகளை முன்வைத்து அமையும் கவிதை. அபி அதை மிகச்சில உருவகங்கள் படிமங்கள் வழியாக நிகழ்த்திக்காட்டுகிறர். மிகக்குறைவானவர்களால் வாசிக்கப்பட்டாலும் தமிழின் கவிதைத்தளத்தின் முதன்மைச்சாதனைகளில் ஒன்று அது என்று கருதப்படுகிறது   2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது  அபி அவர்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124913

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39

பீமன் காட்டுக்குள் இருக்கையில் மூச்சுத்திணறியவன் போலிருந்தான். பலமுறை கைகளை முட்டிசுருட்டி பற்களை இறுகக் கடித்து கண்களை மூடி நின்று பின்னர் மீண்டான். அவன் காட்டில் எப்போதுமே இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை அறிந்திருந்த நகுலன் அவனை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு யுதிஷ்டிரனை பார்த்தான். அவர் தலைகுனிந்து தோள்களைக் குறுக்கியபடி உடன் எவரும் இல்லாதவர்போல் நடந்துவந்தார். இளைய யாதவரின் நிழல் என அர்ஜுனன். இளைய யாதவரின் முகத்தில் மட்டுமே புன்னகை இருந்தது. சிறுவன்போல மலர்ந்த விழிகளால் காட்டை சூழ நோக்கிக்கொண்டு நடந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124826