Daily Archive: August 6, 2019

இலக்கியத்தன்மை என்பது…

  அன்புள்ள ஜெவுக்கு, நான் ஒரு இளம் வாசகன், என்னை விட வயதில் மூத்தவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இலக்கிய படைப்புகளை தொடர்ந்து ஒரு வருடமாக வாசித்து வருகிறேன். தங்களின் அறம் சிறுகதை தொகுப்பு படித்தேன். அதில் நூறு நாற்காலி சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. அது மட்டுமின்றி பஷீரின் குறுநாவல்கள்,மண்ட்டோ சிறுகதைகள், பூமணியின் வெக்கை, பா.வெங்கடேசனின் குறுநாவல்கள் ,ஜி.நாகராஜின் குறத்தி முடுக்கு, பெருமாள் முருகன்,சுகுமாரன்,தி.ஜாவின் அம்மா வந்தாள்,இமையம் என இலக்கிய படைப்புகளை படித்து இருக்கிறேன். ஆனால் என் வயதிற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122252

அபி – கடிதங்கள்

  அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள் அன்புள்ள ஜெ   அபி அவர்களுக்குக் கிடைத்திருக்கும் விருது பாராட்டுக்குரியது. விருதுகள் தகுதியானவர்களைத் தேடிச்செல்வதைக் காணும்போது ஒரு பெரிய நிறைவு உருவாகிறது.ஏனென்றால் அது அடிக்கடி இங்கே நடப்பதில்லை. ஒரு விருதின் தேர்வுக்குழுவில் தொடர்ச்சியாக இலக்கியச் செயல்பாடுகளில் இருப்பவர்கள் குறைவு. அது இன்று கொஞ்சம் மாறிக்கொண்டு வருகிறது. அதேசமயம் சாகித்ய அக்காதமி போன்ற விருதுகள் இன்றைக்கும்கூட கவிஞர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.   அபி தமிழின் தனித்துவமான கவிஞர். அவருடைய உலகம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124629

ஆயிரம் ஆண்டு சைக்கிள்

    இவர் பிரவீன் மோகன், ஆங்கில பாரிசாலன் மற்றும் ஹீலர் பாஸ்கர். இந்த காணொளியின் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஒரு இந்தியனாக தமிழனாக நிறைவாக உணர்ந்தேன். அரைவேக்காடுகளும் மந்த புத்திக்காரர்களும் நனைந்து நமுத்துப்போன சாம்பிராணிகளும் உலகெங்கிலும் இதே அளவு உள்ளனர், குறிப்பாக மேற்குலக நாடுகளில். பிரவீன் ஆங்கிலத்தில் பேசுவதை பார்த்தால் அவரின் அறியாமையை உலகெங்கும் யூ டியூப் மூலமாக கடை விரிக்கிறார் என்று தோன்றும், ஆனால் நிகழ்ந்தது வேறு. அவரின் அறிவுச்செல்வத்தை உலகெங்கிலுமிருந்து பாராட்டி வருகின்றனர். நமது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124369

நீர்மடி- தாமரைக்கண்ணன்

  நிலை பெயர்தல் வாழ்வின் மாறாமைகளுள் ஒன்று, தேடலும் அச்சமும் இடப்பெயர்வுக்கான முதற்காரணிகள். பயணமே நிலத்துக்கும் உயிர்க்குவைகளுக்குமான ஓயாத ஊசலாட்டம் தான். இம்முறை மழைப்பயணம் பற்றி அறிவிப்பு வந்தவுடன்  பயணிக்கலாம் என்று தோன்றியது, இடமும் கிடைத்தது. நான் தமிழக எல்லை தாண்டி அலுவல் நிமித்தம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் ஓரிடத்திலும் நின்று அதன் அழகை நுகர்ந்ததில்லை. பயணக்குழுவில் நான்தான் புதுமுகம், ஏனையோர் அவரவர் இடத்தில் பொருந்திவிட்டிருந்தனர். அதிகாலை ஷிமோகா ரவி அவர்கள் இல்லத்திலிருந்து நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124818

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37

சகதேவன் அருகிலிருந்த புல்வெளியை நோக்கி “அங்கா?” என்றான். இளைய யாதவர் “ஆம், இந்த இடத்தை தெரிவுசெய்தவர் அவரே” என்றார். சுனையின் வலப்பக்கமாக நீர் வழிந்து வெளியேறும் ஓடையின் அருகில் பசும்புல்வெளி நீள்வட்டமாக விரிந்திருந்தது. இளைய யாதவர் அங்கு சென்று அந்தப் புல்பரப்பின்மீது காலை வைத்து அழுத்தி “சேறில்லை. குழிகளும் இல்லை. அடியில் மென்மணல்தான். இந்த இடம் கதைப்போருக்கு உகந்தது” என்றார். துரியோதனன் சுனைக்கரையில் தன் இடையில் கையூன்றி நின்றபடி “ஆம், இங்கிருந்து நோக்கினாலே தெரிகிறது. அப்புல்மேல் தவளைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124797