Daily Archive: August 5, 2019

தகவலறியும் உரிமைச்சட்டம், பொதுச்செயல்பாட்டாளர்கள்

அண்ணா ஹசாரேயின் துரோகம்! அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு;   நான் இந்தக்கடிதத்தை ஒரு அரசியல் வாதியாக எழுதவில்லை. மாறாக தகவல் அறியும் உரிமை ஆர்வலனாகவே எழுதினேன்.. இன்றைக்கும் நான் வசிக்கும் சிறு இடத்தில் நான் இந்த அரசமைப்புடன் நிகழ்த்திய மோதலின் சாட்சியாக சில ஆயிரம் பக்கங்களில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெற்ற கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் சூழ்ந்து சைனடிஸ் தொந்தரவால் துன்புறும் எனது உடல்நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றன. அவை பெரும்பாலும் அன்றைக்கு மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124785

ஆச்சரியம் என்னும் கிரகம்

ஆச்சரியம் என்னும் கிரகம் வாங்க   அன்பின் ஜெ, பனிமனிதன் மற்றும் வெள்ளிநிலம் புத்தகங்களுக்கு பிறகு, ஆச்சரியம் என்னும் கிரகம் – நான் இதுவரை படித்ததில் சிறந்த சிறார் இலக்கியங்களில் ஒன்று. நீங்கள் பலமுறை கூறியதுபோல ஜப்பானிய குழந்தை இலக்கியங்களும், திரைப்படங்களும் பொழுதுபோக்கு மட்டுமின்றி ஆகச்சிறந்த தரிசனங்களையும் அளிக்கக்கூடியன. சாஹித்திய அகாதெமியின் பதிப்பாக வந்துள்ள இந்த தொகுப்பில் ஐந்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் இப்போது அதிகமாக இருக்கும் சுயநலமிக்க பேராசை, வளர்ச்சிக்கு பின்னால் ஓடுதல் மற்றும் மிகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123841

கவிஞர் அபி பேட்டி- காணொளி

  அபியின் ஒரு பழைய பேட்டியின் காணொளி அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள்                      

Permanent link to this article: https://www.jeyamohan.in/124567

ஸ்ரீபதி -கடிதங்கள்

கலை வாழ்வுக்காக அன்புள்ள ஜெ   நலமே விழைகிறேன்.   ஸ்ரீபதி குறித்து மருத்துவமனையில் உங்களைச் சந்திக்கும் போது பேசிக் கொண்டோம்.   இரண்டாயிரத்தின் துவக்கத்தில் உங்களை முதம்முறையாக தக்கலை அலுவலகத்தில் சந்தித்தேன். ஊட்டி முகாம் பற்றி குறிப்பிடடீர்கள். மு.தளையசிஙகம் படைப்புகள் சார்ந்த முகாம். என் தம்பி செந்தில்குமார் அப்போது கோவையில் சுமஙகலி கேபிள் விஷனில் பொறியாளனாக பணிபுரிந்துக் கொண்டிருந்தான். முகாமில் கலந்துக்கொள்ள உங்களிடம் அனுமதி பெற்று மூன்று நாட்கள் முன்னதாக கோவை வந்தேன். நாஞ்சில் சாரையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124546

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36

பீமன் சுனையை அணுகி அதன் பாறைவிளிம்பில் கால் மடித்து அமர்ந்து கைகளால் அதன் கூர்மடிப்பை பற்றியபடி குனிந்து நீரில் நோக்கினான். அவனுடைய பாவை எழுந்து அலைகொண்டது. அவன் விழிகள் இரண்டு நான்கு பதினாறு எனப் பெருகி கரிய தீற்றலென்றாகி மீண்டும் இணைந்தன. உதடுகள் சிவந்த பட்டாம்பூச்சிகள் என்று சிறகசைத்து ஒன்றிலிருந்து ஒன்று எழுந்து பெருகிப் பரந்து மீண்டும் இணைந்து இழுபட்டு நீண்டு மீண்டும் கூடின. அவன் பாவை பறவையின் சிறகு என விரிந்து மீண்டும் அமைந்தது. நெளிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124794