Daily Archive: August 2, 2019

கற்காலத்து மழை-8

பயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்ததும் எங்கள் பயணம் உள்ளத்தில் நிறைவடைந்துவிட்டது. அதற்குமேல் ரத்தினகிரி செல்வதில் பொருளில்லை . பிறிதொரு முறை வெயில் எழுந்தபின்னர் ,அனேகமாக டிசம்பரில் இப்பகுதிக்கு வரலாம் என்று திட்டமிட்டோம். அன்று இத்தனை நீண்ட பயணமாக வராமல் புனா வரை ரயிலிலோ விமானத்திலோ வந்து அங்கிருந்து ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு இங்கே வந்தால் இன்னும் அணுக்கமாகவே இவற்றை பார்த்துவிடலாம்.   ரத்னகிரியிலும் மும்பை பகுதிகளிலும் கனமழை பெய்துகொண்டிருப்பதனால் பாறை செதுக்கு இருக்குமிடத்திற்கு செல்வது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124600

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

  கவிஞர் அபி விஷ்ணுபுரம் விருது பெறுகிறார் என்ற தித்திப்பான செய்தியை இன்று காலை அறிந்ததும் எத்தனையோ நினைவுகள் காட்சிகளாக விரிகின்றன. சேலம் அரசு கல்லூரியில் 1970-71, 1971-72 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் எனக்கு பி.ஏ. (ஆங்கில இலக்கிய) வகுப்பின் தமிழ் மொழிப்பாட ஆசிரியராக அவர் அறிமுகமானார். கொஞ்சம் இடதுசாரி மனோபாவம், கொஞ்சம் ஜெயகாந்தன், கொஞ்சம் சிறுபத்திரிகை அறிமுகம் என்ற பின்புலம் தமிழ்ப் பேராசிரியர்கள் மீதான வெறுப்பை மனதில் விதைத்திருந்தது. ஆனால் இவர் வித்தியாசமாகப் போதிக்கிறார் என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124562

கூகிள் மேதைகள்

ஜப்பான், பிழைகள்- கடிதம்   அன்புள்ள ஜெ ஜப்பான், பிழைகள்- கடிதம் என்னும் கடிதத்தையும் அதில் சுட்டியிருக்கும் கட்டுரையையும் வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் இலக்கியத்தில் என்னவாக இருந்தாலும் இன்றைய நிர்வாகவியலில் ஒன்றும் தெரியாதவர் என்று தெரிந்து புன்னகைத்துக்கொண்டேன். திரு.ராமசாமியைப் போன்றவர்கள் நிர்வாகவியலில் மிகமிகப் பழையபாணி தந்திரங்களைச் செய்பவர்கள். இலக்கிய உலகில் இந்த பழைய தந்திரங்களுக்கு இத்தனை மதிப்பு இருக்கமுடியும் என்பதே ஆச்சரியம்தான். இது இரண்டுவகையினரால் செய்யப்படும். கொஞ்சம் தாழ்வுணர்ச்சிகொண்ட, வயதான நிர்வாகிகள் இதைச் செய்வார்கள். படைப்புசக்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124696

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-33

காலகம் எப்போதுமே இளமழையில் நனைந்துகொண்டிருக்கும் என்று அஸ்வத்தாமன் அறிந்திருந்தான். இலைகள் சொட்டி இலைகள் அசைந்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழை செறிந்து காலடியில் இருளை தேக்கி வைத்திருந்தன. இருளுக்குள் நீர் சொட்டும் ஒலியில் அக்காடு ஊழ்கநுண்சொல்லை உரைத்தபடி விழிமூடி அமர்ந்திருப்பதுபோலத் தோன்றியது. மூன்று பக்கமும் கரிய பாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப் பசுமைக்குள் ஊறிச்சேர்ந்த நீர் மண்ணில் ஊறி தெளிந்த சிற்றோடைகளாக மாறி சரிந்து இறங்கிச் சென்றுகொண்டிருந்தது. நீரோடைகளின் ஓசை காற்று வீசும்போது இடம் மாறி கேட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124658