Daily Archive: August 1, 2019

கற்காலத்து மழை-7

ஒரு பயணத்தின் உச்சம் என்பது நாமே உருவாக்கிக்கொள்ளும் ஒர் இடம். பலசமயம் அது தானாக அமைவதுமுண்டு. மத்தியப்பிரதேசப் பயணத்தில் இயல்பாகவே பிம்பேட்கா குகைகள் உச்சமாக அமைந்தன. இந்தப்பயணத்தில் ரத்னகிரியை உச்சமென எண்ணியிருந்தோம். குடோப்பி அவ்வாறாக ஆகியது. ஆனால் அதற்குத் தகுதியான இடம்தான் அது.   குடாப்பி வருங்காலத்தில் இன்னும் விரிவான ஆய்வுக்கு உள்ளாகும் என நினைக்கிறேன். பாறைச்செதுக்கு ஓவியங்கள் அப்பகுதியெங்கும் இருக்கின்றன. அவற்றில் பல அழிந்துவிட்டிருக்கின்றன. அங்குள்ள பாறைச்செதுக்கு ஓவியங்களை பார்க்கப்பார்க்க புதியதாக ஏதேனும் தெரிந்துகொண்டே இருக்கிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124575

மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா

இந்தியாவில் கிடைத்த பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாறைச் செதுக்கோவியங்கள் அதன் உலகளாவிய இணைப்பைக் காட்டுகிறது. படங்கள் கீழே அக், 1, 2018, சமீபத்தில் பி.பி.சி, மகாராஷ்டிராவிலுள்ள ரத்தினகிரி மற்றும் ராஜபுரா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாறைச்செதுக்குகள் (Petroglyphs) குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. பாறைகளில், சமநில மலைமேடுகளில் பொறிக்கப்பட்ட இந்த பாறைச் செதுக்குகள் அங்கு மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றன. எண் 1: ரத்தினகிரி, மகாராஷ்டிராவிலுள்ள கொங்கன் கடலோர பகுதியைச் சேர்ந்தது மகாராஷ்டிரா மாநிலத் தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124618

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-1 கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2 அன்புள்ள ஜெ,   உங்கள் தளத்தில் நீங்கள் கவிஞர் அபியைச் சென்று சந்தித்ததைப் பற்றிய குறிப்பை வாசித்தபின்னர்தான் நான் அபி அவர்களைப் பற்றி அறிந்தேன். அன்று அவருடைய இணையதளம் சென்று ஓர் இரவு முழுக்க அபியின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். முழுக்கமுழுக்க மெடஃபிசிக்கலான கவிதைகள். தமிழில் இந்த அளவுக்கு முழுமையாகவே மெட்டஃபிஸிக்கலான கவிஞர்கள் வேறு எவரும் இல்லை என்று நினைக்கிறேன்.   ந.பிச்சமூர்த்திதான் தமிழிலே மெட்டஃபிஸிக்கலான கவிதைகளை நிறைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124506

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-32

கிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் மலைப்பகுதியில் ஏறியதன் களைப்புடன் நின்றனர். கிருதவர்மன் “பாஞ்சாலரே, நீங்கள் வழியை அறிவீர்களா?” என்று கேட்டான். “இல்லை, இவ்வாறு ஓர் இடம் உண்டு என்பதல்லாமல் வேறெதையும் அறிந்ததில்லை. அது இங்கிருக்கும் என்பது என் உள்ளத்தில் தோன்றுவது மட்டுமே” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அந்தக் காட்டின் பெயர் காலகம். சாயாகிருகம் என்னும் இக்காட்டுக்கு அப்பால் உள்ளது. வேடர்கள் இந்தக் காட்டின் எல்லையைக் கடந்து அதற்குள் நுழைவதில்லை. அக்காட்டுக்குள் ஸ்தூனகர்ணன் என்னும் கந்தர்வன் வாழ்கிறான். அவன் அங்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124652