Monthly Archive: August 2019

இமைக்கணம் செம்பதிப்பு

  வெண்முரசு நூல்வரிசையின் பதினேழாவது நூலான இமைக்கணம் செம்பதிப்பாக வரவிருக்கிறது. நான் இதை திருத்தியமைக்க பொழுது எடுத்துக்கொண்டமையால் இத்தனை காலம் பிந்தியது. முன்பதிவுசெய்துகொள்ளும்படி நண்பர்களையும் வாசகர்களையும் கோருகிறேன். ஜெ இமைக்கணம் செம்பதிப்பு முன்பதிவு – கிழக்கு  

Permanent link to this article: https://www.jeyamohan.in/125556/

மும்மொழி கற்றல்

  அன்புள்ள ஜெ   மும்மொழிக்கல்வி பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்தி கற்பிப்பதை இன்றியமையாத தேவை என நீங்கள் எண்ணுகிறீர்களா? இன்றைக்கு நிகழும் விவாதங்களில் எவரும் மாணவர்களைப் பற்றி, கல்வித்தரம் பற்றி கவலைப்படுவதே இல்லை. அவரவர் அரசியல்நிலைபாட்டைச்சார்ந்து மோதிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் அஜெண்டாவுடன் இருக்கிறார்கள். ஒரு விவாதக்குழுமத்தில்கூட நடுநிலையான பார்வை, கல்விசார்ந்த பார்வை என்பதே இல்லை. எதிர்காலம் பற்றிய பார்வை இல்லை. எல்லாருமே கல்வியாளர்களைப்போல பேசுகிறார்கள்   ஒரு மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலைசெய்துகொண்டார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122793/

’மொக்கை’ – செல்வேந்திரன்

  அரங்கில் குழுமியிருக்கும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். மொக்கை எனும் தூய தமிழ்ச்சொல்லுக்கு கூர்மையற்ற எனும் பொருளைக் காட்டுகிறது தமிழகராதி. மொக்கு அல்லது மொன்னை எனும் சொல்லிலிருந்து மொக்கை எனும் தமிழ்ச் சொல் உருவாகியிருக்கலாம். வடிவேலு மொக்கச்சாமியாக அரிதாரம் ஏற்றதன் வழியாக இந்தச் சொல் தமிழர்களால் மீள்கண்டுபிடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று யூகிக்கிறேன். மொக்கை ஃபிகர், மொக்கை படம், மொக்கை ஜோக், மொக்கை சாப்பாடு என்று கல்லூரி மாணவர்கள் அன்றாடம் பலதடவை இந்தச் சொல்லை உபயோகிக்கிறார்கள். அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125532/

செய்தித் திரிபு – கடிதங்கள்

போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு அன்புள்ள ஜெ, செய்தி பற்றி கேட்டிருந்தீர்கள். டால்ஸ்டாய் பற்றி எதுவுமே தெரியாமல் ஒரு உயர்நீதிநீதிபதி நீதிமன்றத்தில் கேட்டார் என்பது உண்மையா என்று கேட்டிருந்தீர்கள். அதன்பின் நாம் பேசினோம். நான் சொல்வதை எழுதி அளிக்கும்படிச் சொன்னீர்கள். எழுதுவதற்குள் முழுச்செய்தியும் வந்துவிட்டது. இருந்தாலும் நான் சில அடிப்படைகளைச் சொல்ல விரும்புகிறேன் உண்மையில் அது டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நூலாகவே இருந்தாலும்கூட நீதிமன்றத்தில் அப்படி நிகழ வாய்ப்பு உண்டு. பிராஸிக்யூஷன் தரப்பு அந்நூலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125536/

தடம் இதழ்

  விகடன் தடம் இதழ் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். தமிழுக்கு முக்கியமான இதழாக இருந்தது என்பதே என் உளப்பதிவு. எந்த ஒரு சிற்றிதழும் அதற்கான ஒரு சிறிய சாய்வுடனேயே இருக்கும். விகடன் பேரிதழ் கூட அந்தச் சாய்வுகொண்டதுதான். தடமும் அச்சாய்வு கொண்டிருந்தது. பொதுவாக தமிழ் அறிவுலகில் உள்ள இடதுசாரி,தமிழ்த்தேசிய, திராவிட அரசியல் சாய்வு என அதை வகுத்திருந்தேன். ஆனால் தமிழிலக்கியத்தின் எல்லா குரல்களும் அதில் ஒலிக்க இடமளித்தது. தமிழில் இதுவரை வெளிவந்த இதழ்களிலேயே பார்வைக்கு அழகானது தடம்தான். பக்கவடிவமைப்பில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125507/

போரும் அமைதியும் – ஒரு செய்தி, செய்தித்திரிபு

  ஜெ,   வெர்னான் கோன்ஸ்லாவிஸ் [Vernon Gonsalves] ஒரு முன்னாள் பேராசிரியர், சமூக போராளி, எழுத்தாளர். முன்பும் சில முறை கைதாகி விடுதலையாகியுள்ளார்.   இம்முறை, பீமா கோரேகாவ் [Bhima-Koregaon] வன்முறையில் இவருக்கு தொடர்பு இருக்கும் என சந்தேகத்தின் பெயரில் பூனே போலிஸ் ஆகஸ்ட் 2018ல் அவரை கைது செய்தது. ஒரு வருடமாக, சாட்சயங்கள் எதுவும் காட்டப்படவில்லை (அரசு தரபில் சாட்சி தாக்கல் செய்யவில்லை?).   இந்நிலையில், அவரது ஜாமின் வழக்கை இன்று விசாரித்த மும்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125518/

குமரிநிலம் -கடிதங்கள்

இருபது நிமிட நிலம்   அன்புள்ள ஜெ,   நலம்தானே?   நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதுகிறேன். ஆனால் தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டேதான் இருக்கிறேன். நீங்கள் எழுதிய இருபதுநிமிடநிலம் என்னும் கட்டுரை எழுதத்தூண்டியது. அழகான கட்டுரை. கவித்துவம் மிக இயல்பாக வந்து அமைந்தது. ஒரு நல்ல நாவலின் தொடக்கம் போல ஒரு பகுதி. குமரிமாவட்டத்துக்கு மாதம் ஒருமுறை வந்துகொண்டிருந்தவன்நான். ஆகவே இந்த நிலப்பகுதியின் அழகு எனக்கு நல்ல அறிமுகம். அதிலும் அந்த ரயிலை ஒட்டி வரும் இருபதுநிமிடங்கள் உண்மையிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125389/

நீரும் நெறியும்

  பேச்சிப்பாறை அணையில் இருந்து சானல்களுக்குத் தண்ணீர் விட்டு பத்துநாள் தாண்டிவிட்ட பிறகும் பார்வதிபுரத்துக்கு நீர் வரவில்லை. நடக்கச் சென்றபோது கணபதியா பிள்ளை கலுங்கில் அமர்ந்திருந்தார். ”ஞாற்றடி பெருக்கியாச்சா?”என்றேன்.”வெள்ளம் வரல்லேல்லா?”என்றார். ”விடல்லியோ?” ”விட்டு பத்துநாளாச்சு…வந்துசேரணுமே” எனக்கு புரியவில்லை. நீர் எங்கே போகிறது? கணபதியாபிள்ளை சொன்னார். பேச்சிப்பாறை நீரின் அரசியலை. 1906 ல் அப்போதைய திருவிதாங்கூர் மகாராஜா மூலம்திருநாள் அவர்களால் கட்டப்பட்டது அந்த அணை. குமரிமாவட்டத்தின் வளத்தைப் பெருக்கியதில் அந்த அணைக்குள்ள பங்கு சாதாரணமல்ல. உண்மையில் இன்று மாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/507/

அறம் -கடிதம்

அறம் வாங்க   வணக்கம் ஜெ ,   அறம் தொகுப்பை தற்போதுதான் வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒருவித அனுபவம். ஒருவாரகாலம் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன். ஒவ்வொரு மனிதர்களுடைய அகக்கொந்தளிப்புகளையும், பரவசத்தையும் வார்த்தைகளால் சொல்லியிருக்கும் விதம் அருமை. நான் இக்கதைகளை படித்தது இப்போதுதான். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இதுகுறித்த எதிர்மறை விமர்சனத்தை சாரு நிவேதிதாவிடமிருந்து கேட்க நேர்ந்தது. ‘நூறு நாற்காலிகள்’ கதையை அவர் ஓர் அதீதப் புனைவு, உண்மைக்கு மாறானது என்று விமர்சித்திருந்தார். இந்தக் கதை ஆர்.எஸ்.எஸ் அஜெண்டா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125118/

யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி

கானல்நதி வாங்க   வணக்கம் சார்   நலமா? யுவன் அவர்களின் கானல்நதி நாவலை படித்து முடித்தேன்.முடித்தவுடன் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்போடு இதை எழுதுகிறேன்.   எந்த முன்முடிவுமின்றி ஒரு நாவலை அணுகுவதே ஒரு சுவாரஸ்யம்தான். கானல்நதியை அப்படிதான் அணுகினேன்.. தபலா மேதை குருச்சரண்தாஸ் தனது நண்பனான இந்துஸ்தானி இசை பாடகன் தனஞ்செய்முகர்ஜியின் வாழ்க்கையை நாவலாக எழுதும்படி கேசவசிங்சோலங்கியிடம் கேட்டுக் கொள்கிறார் என்ற கேசவ்சிங்சோலங்கியின் முன் அறிமுகத்தோடு நாவல் தொடங்குகிறது. ஆனால் அது நாவலின் தொடக்கம் என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125372/

Older posts «