Daily Archive: July 31, 2019

கற்காலத்து மழை-6

[குடோப்பி தெரு] ஆர்தர் சி கிளார்க் ‘சின்னம்’ [The Sentinel] என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அறிவியல்புனைவு. ஆனால் மிக எளிமையானது. இதை நான் எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்யச்செய்து 2001ல் சொல்புதிது இதழில் வெளியிட்டேன். நிலவுக்குச் செல்பவர்கள் அங்கே ஒரு பொருளைப் பார்க்கிறார்கள். மிகச்சரியான முக்கோண முப்பட்டை வடிவமானது. ஆகவே அது எவராலோ செய்யப்பட்டதுதான் என தெரிகிறது. ஆனால் உள்ளே நுழைய வாயில்கள் இல்லை. திறக்க முடியவில்லை. படிகம்போன்ற எதனாலோ ஆனது. உடைக்கவும் முடியவில்லை. அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124517

ஈரோடு சிறுகதை முகாம் ’19

  நண்பர்களே, வருகிற  ஆகஸ்டு 10, 11  சனி   காலை 10 மணி  முதல் ஞாயிறுமதியம் 1 மணிவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்ஈரோட்டில்   சிறுகதைகள்   ரசனை  முகாம்  நடைபெறுகிறது.   ஒட்டுமொத்தமாகசிறுகதைகளின்வெளி வட்டத்தையும் அதன்உள்அடுக்குகளையும் ஒன்றரை நாளில் நடத்துனர்களின் உரைகள் வாயிலாக வாசகர்களை அறியச்  செய்வது இந்த முகாமின்நோக்கம்.வளர்முக எழுத்தாளர்களுக்கு எழுத்துப் பயிற்சியாகவும் இது அமையும். மொத்தமாக 10 அமர்வுகள் இருக்கலாம். ஜெயமோகன், தேவிபாரதி,மோகனரங்கன், சுனில்கிருஷ்ணன், விஷால்ராஜா உள்ளிட்ட பலர் இந்த அமர்வுகளை நடத்துகிறார்கள். நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124375

இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி

இன்றைய காந்திகளைப்பற்றி… அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   திரு பாலா அவர்கள் இன்றைய காந்திகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.   சில சந்தேகங்கள்   1 )  காந்தி இந்த நாடு கண்ட தலை சிறந்த அரசியல் ஸ்டார்ட்-அப் . நாளிதழ்களையும், தந்தியையும் தவிர வேறு தகவல் தொடர்பில்லாத காலத்தில் ட்ரெண்டிங் ஆகி வைரல் ஆகி, எங்கும் பரவியவர். அமுல் தவிர (ஓரளவுக்கு அரவிந்த்) பாலாவின் பட்டியலிலுள்ள பிறர் ஏன் ஸ்கேல் செய்யவில்லை? இரண்டாவது டிலோனியா நடந்துள்ளதா? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124161

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் அன்புள்ள ஜெ,   கவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். கவிஞர் அபி பொதுவாக அறியப்படாத கவிஞர். எனக்கு 10 ஆண்டுகளுக்குமுன்பு கோவை ஞானி அவர்கள் அபியை அறிமுகம் செய்து வைத்தார். அவரை நான் நுட்பமாக வாசிக்கவில்லை.   அன்றைக்குள்ள சிக்கல் என்னவென்றால் எந்த ஒரு கவிதையையும் அது சொல்ல வருவது என்ன என்ற அளவிலேயே வாசிப்பதுதான். அதைப்பற்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124497

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31

கிருபரின் சொல்மழை கிருதவர்மனை முதலில் நிலையழியச் செய்தது. அதை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. அந்தக் காட்டில் ஒலித்த ஒரே மானுடக் குரல். அதிலிருந்து அவனால் சித்தம் விலக்க முடியவில்லை. வேண்டுமென்றே முன்னால் விரைந்தால் அக்குரல் சற்று தெளிவின்மைகொண்டதுமே அவன் கால்கள் விரைவழிந்தன. அதன் ஒவ்வொரு சொல்லும் கூரிய முனைகளுடன் அவனை தைத்தது. அவர் ஒருவகை சித்தமயக்கில் சொல் பெருக்குகிறார் என தெரிந்தது. சித்தம் மயங்கும்போது சொற்கள் பொருளிழக்க வேண்டும். ஆனால் அவை மேலும் மேலும் பொருட்செறிவுகொண்டன. ஒருவேளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124419