பதினான்காம்தேதி பெல்காம் நகரத்திலிருந்து கிளம்பினோம். முந்தைய நாள் இரவு பெல்காம் வந்து சேர்வதற்கு மிகவும் பிந்திவிட்டது .வரும் வழியிலேயே எங்கள் வண்டியின் ஒரு சக்கரம் பழுதடைந்தது. இப்பகுதி முழுக்க மிகப்பெரும் சாலைகள், மேம்பாலங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே எங்கு பார்த்தாலும் பலகைகள், அவற்றை அறையும் ஆணிகள். அதிலொன்று வசமாக சக்கரத்தில் நுழைந்துவிட்டது பொதுவாக இத்தகைய வாடகை வண்டிகளில் மாற்றுச் சக்கரம் மிகப்பழையதாகவும் அனேகமாக குப்பையில்வீசத்தக்கதாகவுமே இருக்கும். அதை வைத்து பத்து கிலோமீட்டர் கூட ஓட்ட முடியாது. …
Daily Archive: July 30, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/124477
அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்
அன்புள்ள ஜெ அபி அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மனநிறைவை அளித்தது. அறியப்படாத கவிஞர் அவர். நான் பத்தாண்டுகளுக்குமுன்னர் உங்கள் கட்டுரைத் தொகுப்பில் இருந்த கட்டுரை ஒன்றில்தான் அவரைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். அவருடைய கவிதைகளுக்குள் செல்ல மேலும் பல ஆண்டுகள் தேவைப்பட்டன.அதற்கு ஒரு பயிற்சி தேவை. அபி போன்ற கவிஞர்கள் பெரும்பான்மைச் சூழலில் மதிக்கப்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு ஏனென்றால் அவருடைய எழுத்துமுறை அப்படிப்பட்டது. அதில் ‘மக்களுக்கு’ என்று ஒன்றுமே இல்லை. ‘கருத்துக்கள்’ …
Permanent link to this article: https://www.jeyamohan.in/124480
ஜப்பான், பிழைகள்- கடிதம்
அன்புள்ள ஜெ, ஒத்திசைவு எழுதிய கட்டுரையை (மூன்று பாராவை கட்டுரை என்றா சொல்வது ?) சுரேஷ் பகிர்ந்துள்ளார். இதை படித்த வகையில், ஒத்திசைவு வழக்கம் போல் தனக்கு தெரிந்த இரண்டு விஷயங்களை வைத்துக்கொண்டு, உலகம் இவ்வளவு அப்பாவியாக இருக்கிறதே என்று கவலைபடும் நடையில் எதையோ எழுதியிருக்கிறார். இதை தெளிவான கட்டுரையில் மறுப்பதே சரியாக இருக்கும்.அதை கீழே எழுதியுள்ளேன். http://manavelipayanam.blogspot.com/2019/07/blog-post.html பொதுவாக ஜப்பானிய மையநிலம் சீனாவிலிருந்து வந்தவர்களால் ஆனது என்கிற வரியை வேண்டுமானால் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/124479
ஆற்றூர்-கடிதங்கள்
அன்புள்ள ஜெ, ஒரு முறை யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் ஆற்றூர் ரவிவர்மா பற்றி அன்வர் அலி இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ரவிவர்மாவின் பெயரைக் கேட்டவுடன் உங்கள் தளத்தில் வெளியாகிய கட்டுரைகளும், மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகளுமே நினைவுக்கு வந்தன;கூடவே பன்றிகள் பாதையைக் கடந்து சென்ற சம்பவமும். “என் ஆசிரியர்களில் முதன்மையானவர் ஆற்றூர் ரவிவர்மா” என்று பலதடவை நீங்கள் எழுதியது ஆழமாக நினைவில் உண்டு. சுந்தரராமசாமி அளவுக்கு அவரை அறிந்ததும் இல்லை. அதற்காகவே அந்த ஆவணப்படத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/124474
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-30
புதர்களை ஊடுருவியும் சரிந்த நிலத்தில் மரங்களைப் பற்றியபடி இறங்கியும் குறுங்காட்டின் வழியாக சென்றுகொண்டிருக்கையில் நெடுநேரம் எங்கு செல்கிறோம் என்பதை கிருபரும் கிருதவர்மனும் உணர்ந்திருக்கவில்லை. கால்கள் கொண்டுசென்ற வழியிலேயே அவர்கள் நடந்தார்கள். ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. பேசுவதற்கு உள்ளம் எழவில்லை. சூழ இருந்த காட்டையும் அவர்கள் நோக்கவில்லை. உள்ளே ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களையும் கூர்ந்தறியவில்லை. அவர்களின் உள்ளம் முற்றாக சிதறிக்கிடந்தது. பெருநதி நீர் வற்றி சிறுகுளங்கள் என ஆனதுபோல தொடர்பற்ற எண்ணங்களின் நிரை. காலோய்ந்து அரசமரம் ஒன்றின் அடியில் சென்று …
Permanent link to this article: https://www.jeyamohan.in/124412