Daily Archive: July 29, 2019

கற்காலத்து மழை-4

  இந்தப்பயணம் மழையில் செல்வதையும் இலக்காகக் கொண்டது. நாங்கள் மழைப்பயணம் செல்லத் தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. முன்பெல்லாம் மழைப்பயணம் என்றால் கேரளத்தின் தேவிகுளம் பீர்மேடு வாகைமண் பகுதிகளுக்குச் செல்வோம். கவி, பரம்பிக்குளம் என பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம். இம்முறை மேற்குதொடர்ச்சிமலையின் வடக்கு எல்லைக்குச் சென்றோம். மழையும் கற்கோயில்களும் கற்காலச் சின்னங்களும் என ஒரு கலவையான கரு கொண்டது இந்த பயணம் பதிமூன்றாம் தேதி முழுக்க காட்டுக்குள் பயணம். பெல்காமிலிருந்து கொங்கணி கடற்கரை நோக்கிச் செல்வதற்கு நடுவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124421

பழைய முகங்கள் -கடிதங்கள்

பழைய முகங்கள் அன்புள்ள ஜெ பழைய முகங்கள் ஒரு நல்ல கட்டுரை. ஏற்கனவே நீங்கள் எழுதிய பழைய முகம் என்னும் கதையை ஞாபகப்படுத்தியது. சினிமா ஒரு மாஸ் ஆர்ட். அது பண்பாட்டின் டிராயிங்ரூம். அங்கிருந்து சிலமனிதர்கள் அப்படியே தூக்கி கொல்லைப்பக்கத்திற்கோ பரணுக்கோ போடப்பட்டுவிடுகிறார்கள்.அவர்கள் என்ன ஆனார்கள் என்று எவரும் பார்ப்பதில்லை. அந்த வீழ்ச்சி ஒரு துயரம். சினிமாவில் ஒரு சாதாரண மனிதன் மேலே வருவதைப்போலவெ கீழே போவதும் ஒருவகையான ஃபெயரிடேல் மாதிரிதான் நான் வழக்கமாகப் போகும் ஓட்டலுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124382

பாவனைகள் -கடிதங்கள்

நீர் என்ன செய்தீர் நமது பாவனைகள்   அன்புள்ள ஜெ   நமது பாவனைகள் ஒரு கூர்மையான குறிப்பு. நாம் தனிப்பட்ட முறையில் ஒரு வகையில் இருக்கிறோம். கூட்டமாக இருக்கையில் இன்னொருவகையான பாவனையை மேற்கொள்கிறோம். கூட்டமாக இருக்கும்போது தர்மம் நியாயம் என்றெல்லாம் பேசுவோம். தனியாக இருக்கும்போது ‘எது எப்படி என்றால் எனக்கென்ன?” என்ற நிலைபாடுதான். இந்த பாவனைகளைத்தான் நாம் முகநூலில் காட்டிவருகிறோம். தனிப்பட்டமுறையில் எந்த வகையிலும் நேர்மையாக இல்லாதவர்கள்தான் பொதுவெளியில் ஊருக்கே பஞ்சாயத்துசொல்பவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். தனிப்பட்ட முறையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124378

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-29

காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் கிருபர் தன் உள்ளம் மானுடருக்காக ஏங்குவதை உணர்ந்தார். நாகர்களின் அடியுலகில் இருந்தபோது அவர் மேலே வர விரும்பியது ஏன் என்று அப்போது புரிந்தது. மானுட உடல்களை விழிகள் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. உற்றவர் அறிந்தவர் என்றில்லை, எவராயினும். ஏவலரோ வழிப்போக்கரோ. ஆணோ பெண்ணோ குழவியோ முதியவரோ. மானுட உடல்கள். அவற்றின் அசைவுகள். குரல்கள். அவற்றின் வியர்வையும் மூச்சும் அளிக்கும் மணம். அனைத்திற்கும் மேலாக அவை அளிக்கும் சூழுணர்வு. அதிலிருந்து திரண்டு உருவாகிறது அவருடைய தன்னுணர்வு. கிருபர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124277

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

கவிஞர் அபி இணையதளம்   2019 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த கவிஞர் அபி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அபி அவர்களை நேரில் சந்தித்து மூன்று மாதம் முன்னரே இச்செய்தியை அறிவித்தோம்.   அபியின் இயற்பெயர் ஹபிபுல்லா.  மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். லா.ச.ரா படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர். ரூமி, கலீல் கிப்ரானின் கவிதைகளிலிருந்து தன் அழகியலைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மேலும் செறிவானதும் பூடகமானதுமான கவிதைகளுக்குள் சென்றார்   அபி எழுதிய   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124281