Daily Archive: July 28, 2019

கற்காலத்து மழை-3

பழுதுபட்டு கைவிடப்பட்ட ஆலயம் ஒன்றைச்சுற்றி இருக்கும் சிற்றூர் என்ற உருவகம் எழுபது எண்பதுகளில் நாவல்கள் சினிமாக்களில் நிறையவே வந்திருக்கிறது. குறிப்பாக கேரளம், கர்நாடகம் பகுதிகளின் படைப்புகளில். தமிழகத்தில் , குறிப்பாக தஞ்சையில், அத்தகைய ஆலயங்கள் ஏராளமாகவே உண்டு என்றாலும் அத்தகைய படைப்புக்கள் குறைவு. லா.ச.ராமாமிருதத்தின் அபிதாவையும் பூமணியின் நைவேத்யம் நாவலையும் ஓரளவு சொல்லலாம். சினிமாக்கள் என எவையுமில்லை. அவற்றில் ஆலயம் மையமாகச் சொல்லப்படவில்லை. மலையாளத்தில் அவ்வகையில் கிளாஸிக் என சொல்லத்தக்க படங்கள் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி இயக்கிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124384

எழுத்தாளன்,சாமானியன் -கடிதங்கள்

எழுத்தாளனும் சாமானியனும் அன்புள்ள ஜெ,     எழுத்தாளனும் சாமானியனும் ஒரு கூர்மையான கட்டுரை. நீங்கள் தாக்கப்பட்ட நிகழ்வின்போது எழுந்த எதிர்வினைகளை வன்மம், வஞ்சம் என்றெல்லாம் பலர் சொன்னார்கள். அதெல்லாம் மேலோட்டமானவை. அடிப்படையான பிரச்சினை இங்கே எழுத்தாளர்கள் மேல் எந்த மதிப்பும் இல்லை என்பதுதான். ஏனென்றால் எழுத்தை வாசிப்பவர்கள் மிகமிகக் குறைவு. வாசித்தாலும் எதையாவது புரிந்துகொள்பவர்கள் அதிலும் குறைவு. மற்றவர்களுக்கு செவிவழியாகத் தெரிந்த பெயர் அவ்வளவுதான். இன்னும் சில முகநூல் கூட்டத்தவருக்கு அவர்களைப்போல எழுத்தாளனும் இன்னொரு பக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124272

தம்மமும் தமிழும்

தம்மம் தோன்றிய வழி… அன்புள்ள  ஜெ  ,   தத்துவத்தில  சிறிது  ஆர்வம் இருக்கும்  எவரும் , பெளத்தத்தின்  எதோ  ஒரு வடிவ  பிரதியை  படிக்காமல்  இருந்திருக்க  முடியாது . அதிலும்  ஓஷோ  போன்ற  ஆசிரியர்கள்  எவ்வகையிலேனும்  புத்தரை பல்வேறு  இடங்களில்  உபயோகித்த வண்ணம்  இருப்பதை  காணலாம்.  உங்களுக்கு “”மாலை நடையும்  பழம்பொறி” யும்  போல  ஓஷோவுக்கு  புத்தர்  ஒரு இனிய  நடை பயண  தோழன்.அவ்வகையில் ஓஷோவின்  ”தம்மபதம்”எனும் , புத்தரின்  ஞானத்தை  தனது  கேள்வி பதில்கள்  மூலம்  கையாண்டிருப்பார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124264

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-28

தன்னைச் சூழ்ந்திருந்த உடல்களை உணர்ந்தபின் இடநினைவு மீண்டு எழுந்துகொள்ள முயன்ற கிருபர் அவ்வுடல்கள் அத்தனை எடைகொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தார். உந்தி உந்தி மேலெழ முயலுந்தோறும் அவை மேலும் எடைகொண்டன. மேலிருந்து களிபோன்ற கரிய சேறும் உடன் உள்ளே வழிந்தது. அதன் பின்னரே தான் ஒரு பிலத்திற்குள் விழுந்திருப்பதை உணர்ந்தார். சிகண்டியுடன் போரிட்டபடி பின்னடைந்ததையும் தன் தேர் கவிழ்ந்ததையும் நினைவுகொண்டார். தன் உடலுக்குமேல் உடல்களின் அடுக்குகள் இருக்கக்கூடும். அந்த ஆழத்தில் ஒலி என ஏதும் வந்தடையவில்லை. அங்கே அவ்வண்ணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124262