Daily Archive: July 27, 2019

கற்காலத்து மழை-2

  பெங்களூரை விட்டு வெளிவந்த உடனே நிலப்பகுதி மாறிவிடுவது ஆச்சரியம்தான். திடீரென ராயலசீமாவுக்குள் ஆளில்லா நிலப்பரப்பில் நுழைந்துவிட்டதுபோல. உண்மையில் பெங்களூரே இப்படி ஒரு பாறைநிலப்பகுதிக்குள் தான் கட்டப்பட்டிருக்கிறது. நகரத்திற்குள் பல பாறைப்பகுதிகள் உள்ளன. பல சாலைமுனைகளில் பாறைகள் துருத்தி நின்றிருக்கின்றன. 1983ல் நான் முதல்முறையாக பெங்களூர் வந்தபோது நகரத்திற்குள்ளேயே இன்னும் பல பகுதிகள் பாறைகள் குவிந்திருப்பது போல் இருப்பதைக்கண்டிருக்கிறேன். லால் பாக்கின் பல பகுதிகளில் பாறைகள் இன்றும் இருக்கின்றன. ஆனால் நகரத்திலிருந்த பாறைக்குவியல்கள் கொஞ்சம்கொஞ்சமாக அகற்றப்பட்டு விட்டிருக்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124322

நடந்தே தீரணும் வழி…

பயணியின் கண்களும் கனவும் வணக்கம் ஜெ இது நான் எழுதும் 3வது கடிதம். முந்தைய கடிதங்கள் உங்கள் தளத்தில் பிரசுரமாகியுள்ளன. ஜப்பான் பயணம்,சூரியனின் தேர் பிறகு  மீண்டும் பயணிக்கும் ஜெ. இதையெல்லாம் படிக்கும்போது முன்பு பரதேசியாக  பயணித்த எல்லா இடங்களுக்கும் இப்போது மறுவிசிட் அடிக்கிறீங்க என்று தோன்றியது இப்போது பிரபல எழுத்தாளர் மற்றும் ஒரு நண்பர்கள் குழாமோடு பயணிக்கிறீர்கள் என்பதே வித்தியாசம். எங்களுக்கு கட்டுரை போனஸ் உங்கள் இன்ஸிபிரேஷனில் போனவருடம் இப்படித்தான் பயணித்தேன். தீவிர மன அலைக்கழிப்பு. தாறுமாறான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124252

தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கதை -கடிதங்கள்

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா அன்புள்ள ஜெ   தகவலறியும் உரிமைச்சட்டம் நீர்த்துப்போக வைக்கப்படும் சூழலில் இன்று அருணா ராய் பற்றி உங்கள் தளத்தில் பாலா எழுதிய கட்டுரை அந்தச் சட்டம் உருவான பின்னணியை மிக விரிவாக அறிமுகம் செய்கிறது. அது எளிமையான ஒரு சட்டம் அல்ல. யானைமேல் ஒரு மனிதன் பயணம் செய்கிறான். அதைப்பார்க்கும்போது முதல்முதலாக காட்டு யானையிடம் ஒரு வார்த்தையைச் சொல்ல முடிந்தது எப்படி என்ற ஆச்சரியம்தான் உருவாகும். அரசாங்கத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124446

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27

திருஷ்டத்யும்னன் தேரிலேறி நின்று சூழ நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை ஒரு மானுட அசைவுகூட இருக்கவில்லை. பதிந்து உறைந்த கரிய அலைகளைப்போல மானுட உடல்கள் தெரிந்தன. அவை மெல்ல நெளிந்து ததும்பிக்கொண்டிருப்பது போலவும் அசைவிலாது அமைந்துவிட்டவை போலவும் தோன்றியது. முகில்திரள்கள் விளிம்போடு விளிம்பு பொருந்தி இணைய வானம் இருண்டபடியே வந்தது. வானில் பறவைகள் என ஏதுமில்லை. அவை மழைக்கு அஞ்சி காடுகளுக்குள் சென்றுவிட்டன என்று தோன்றியது. அவன் அந்தத் திரளில் ஒருவனாவது எழக்கூடும் என எதிர்பார்த்தான். ஒருவன் எழுந்தே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124260