Daily Archive: July 26, 2019

அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா

மலையாளக் கவிஞரும் என் முதல் ஆசிரியருமான ஆற்றூர் ரவிவர்மா அவர்கள் இன்று மாலை காலமானார். மலையாள நவீனக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. 1930 டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். இந்த வருடம் அவருக்கு தொண்ணூறாம் பிறந்தநாள் வந்திருக்கும். சென்ற சில ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார். இன்று காலை முதலே மனம் நிலையிழந்திருந்தது. எதுவும் எழுதவில்லை. நண்பர்களை அழைத்து என்ன என்று அறியாமலேயே கடுமையான உளச்சோர்வு என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது இச்செய்தி வந்திருக்கிறது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124449

கற்காலத்து மழை -1

[ ஓசூர் புலரி] பயணங்கள் காலையிலேயே தொடங்குவது அந்நாள் முழுக்க ஓர் உற்சாகத்தை உருவாக்குகிறது. வெயில் எழுந்தபின்னர் தொடங்கும் பயணம் தொடக்கத்திலேயே ஒரு சோர்வை அளித்துவிடுகிறது. இதை சினிமாப் படப்பிடிப்பிலும் கண்டிருக்கிறேன். காலை உணவுக்கு முன்னரே ஒரு காட்சியை எடுத்துவிட்டால் அன்றைய படப்பிடிப்பு மிகச்சிறப்பாக அமையும். காட்சிகளின் நீளம் மட்டும் அல்ல தரமும் கூட மேம்பட்டிருக்கும். ஆகவே எங்கள் பயணங்களில் வெயிலெழுவதற்கு முன் காரில் ஏறிவிடுவதை ஒரு நெறியாகவே கொண்டிருக்கிறோம். பலதருணங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124312

மூங்கில்,செர்ரிபிளாஸம்,ஜப்பான்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு தங்களின் ஜப்பான் பயண அனுபவங்களை சற்றே தாமதமாக வாசிக்கிறேன். ஜப்பானைக்குறித்த அனைத்தையும் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.   செர்ரி மலர்களுக்கான ஹனமி கொண்டாட்டத்தையும்  ,  ஹிரோஷிமாவின் குண்டுவீச்சில் அழிந்து பின்னர் மீண்டும் துளிர்த்து இன்று வரை இருப்பதாக  சொல்லப்படும் ஜிங்கோ மரத்தையும், Giant timber bamboo  எனப்படும்  மோஸோ மூங்கில்களையும் குறித்து நீங்கள் எழுதப்போவதை வாசிக்க ஆவலாக இருந்தேன் நீங்கள் அங்கே போகையில் மிகச்சரியாக செர்ரிமரஙகள் பூத்து முடிந்ததால் உங்களால் அவற்றை பார்க்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124220

வெண்முரசு -இரு கடிதங்கள்

  அன்புள்ள ஜெ   நந்தினி சேவியர் என்ற பெயரில் எழுதும் ஓர் இலங்கைக்காரர் முகநூலில் இப்படி எழுதியிருந்தார். உங்களுக்காக…     மௌனம்…அங்கீகாரமல்ல…! அல்லது வாசகர்கள் முடாள்களல்ல.. ***************************** எழுத உங்களுக்கு உரிமை இருக்குமாக இருந்தால்…வாசிக்கும் எங்களுக்கும் கருத்துச்சொல்ல உரிமை இருக்கிறது.   கிறிஸ்துவின் சரிதம் மத்தேயு, மாற்கு,லூக்காஸ், யோவானால் எழுதப்பட்டது.   அது பலமொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.   தமிழிலும் எளிமையாக அது மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.   அதனை ‘இயேசு காவியம் ‘ என கண்ணதாசன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124406

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26

சகுனி முதலில் இளைய யாதவர் தேர்முகத்தில் அமர்ந்திருப்பதைத்தான் பார்த்தார். தேரில் வில்லுடன் நின்றிருந்த நகுலன் அர்ஜுனன் என்று தோன்றினான். ஒருகணம் எழுந்த உளக்கொப்பளிப்பை அவரே வியந்தார். ஆம் ஆம் ஆம் என்னும் ஓசையாக தன் அகத்தை உணர்ந்தார். ‘சூழ்க!’ என்று கைகாட்டிவிட்டு நாணொலி எழுப்பியபடி அவர் அத்தேரை நோக்கி சென்றார். மைந்தர்கள் அவரைச் சூழ்ந்து தேர்களில் சென்றனர். செல்லும் வழியெங்கும் தேர்கள் உலைந்தாட அவர்கள் கூட்டுநடனமிடுவதுபோல் தோன்றியது. அதுவரை அவருடைய உள்ளம் களத்தில் திசையறியாததுபோல் தொட்டுத்தொட்டு தாவிக்கொண்டிருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124246