Daily Archive: July 25, 2019

நாகரிகத்திலிருந்து தப்பித்தல்- ஐசக் பாஷவிஸ் சிங்கர்

தமிழாக்கம் டி.ஏ.பாரி நாகரிகத்திலிருந்து தப்பிப்பது என்றஎனதுசெயல்திட்டத்தைஅச்சொல்லின் பொருளைக் கற்றுக்கொண்ட சிறிது காலத்திலேயேதொடங்கிவிட்டேன். ஆனால் பதினெட்டு வயதுவரை நான் வாழ்ந்துவந்த பில்கோரே கிராமமோ தப்பித்து ஓடிவரும் அளவுக்கு போதுமான நாகரிகத்தைக் கொண்டிருக்கவில்லை.பின்னாட்களில் நான் வார்சாவுக்குச் (போலாந்தின் தலைநகர்) சென்றபோது மீண்டும் பில்கோரேவுக்கு திரும்பிவருவதை மட்டுமே என்னால் செய்யமுடிந்தது. நியூயார்க் நகருக்கு வந்துசேர்ந்த பின்னரே இவ்வெண்ணம் ஓரளவு பொருள் கொண்டதாக மாறியது. இங்குதான் ஒருவித ஒவ்வாமையால் நான் அவதிப்படத் துவங்கினேன் – தூசிக்காய்ச்சல், வேனில் ஒவ்வாமை போன்ற ஒன்று.. யாருக்குத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123856

ஒரிசாவின் லகுலீசர்

  இனிய ஜெயம்   ஒடிஸா பயணம் என நீங்கள் சொன்னதுமே முதலில் நினைவில் எழுந்தவர் லகுலீசர்தான். புவனேஷ்வர் மத்தியில் அமைந்திருக்கிறது விட்லா ட்யுல் எனும் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த  கோவில். கலிங்க நிலம் மொத்தமும் உள்ள கோவில் விமான வடிவத்தில் சேராத தனி வடிவத்தில் விமானம் கொண்ட சிறு கோவில்.   https://en.wikipedia.org/wiki/Baitala_Deula   ஊர் மத்தியில் அமைந்த சிறிய கோவில். சூழ சூழ சாலைகளை மீண்டும் மீண்டும் போட்டு இப்போது அந்தக் கோவில் பள்ளத்தில். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124155

ஜப்பான் – கடிதங்கள்

  அன்புள்ள ஜெ ஜப்பான் பயணக்கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று. மிக இயல்பான ஓட்டமாக நீங்கள் ஜப்பானின் பலமுகங்களைச் சொல்லிச்செல்கிறீர்கள். அந்தவகையான பயணக்குறிப்பின் பயன் மற்றும் எல்லை பற்றி முன்னரே எழுதிவிட்டுத்தான் ஆரம்பிக்கிறீர்கள். என்னைப்பொருத்தவரை இம்மாதிரியான பயணக்குறிப்புகள் வழியாக வரும் ஒரு சித்திரத்தையே பெரும்பாலும் நினைவில் வைத்திருக்கிறேன். சீரியஸான வரலாற்றுநூல்கள் பெரிதாகப் பயன்படுவதில்லை. ஏனென்றால் நமக்கு ஜப்பானிய வரலாறு அவ்வளவு தேவைப்படுவதில்லை. நமக்கு என்னதேவையோ அது மட்டும் உள்ளவை இந்த கட்டுரைகள். எவை நம்மை வந்து தொடுகின்றனவோ அவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124174

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-25

தன் மைந்தர்கள் போருக்கு வருவார்கள் என்று சகுனி எண்ணியிருக்கவில்லை. அதன்பொருட்டே அவர்கள் காந்தாரத்திலிருந்து அஸ்தினபுரிக்கு வந்திருந்தும்கூட அவ்வண்ணம் எப்படி எதிர்பார்க்காமலிருந்தோம் என எண்ணி எண்ணி அவர் வியந்துகொண்டார். அவர்களை அவருடைய அகம் இளைஞர்களாக ஏற்றுக்கொள்ளவே இல்லை என்பதை பின்னர் கண்டடைந்தார். அவர்களை போர்க்களத்தில் நிறுத்திப்பார்க்க முயன்றும் அவரால் இயலவில்லை. ஆனால் போருக்கு எழுவதற்கு முந்தைய நாட்களில் போருடன் இறப்பும் இணைந்துள்ளது என்பதே அவர் உள்ளத்தில் இருக்கவில்லை. எவருடைய இறப்பையும் அவர் எண்ணவில்லை. அவருக்கு மட்டுமல்ல அஸ்தினபுரியில் அனைவருக்குமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124235