Daily Archive: July 24, 2019

மேல்நிலைக் குரல்

அரியணைகள்,வாசிப்பு -கடிதங்கள் அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,   உடல் முழு நலமடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஜப்பான் பயண குறிப்புகளை ஆவலுடன் படித்து வருகிறேன். 25 ஆண்டுகளுக்கு முன் 70 நாட்கள் ஜப்பானின் பலவேறு நகரங்களில் பயணித்த நினைவுகளை மீட்டெடுக்க உதவுகின்றன. நன்றி.   கடந்த சில நாட்களாக தங்களது வலை தளத்தில் காட்சியூடகமும் வாசிப்பும் பற்றி ஓர் உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக GOT தொடரின் தாக்கம் குறித்து கருத்து கூறப்பட்டது. நுண்னுனர்வு கொண்ட தீவிர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123248

வெண்முரசு வாசிக்கையில் பாரதம் பேசுதல்- வளவ துரையன்

  நாள்தோறும் வெண்முரசு படித்துக் கொண்டே வரும்போது வியாசரையும் வில்லிபுத்தூராழ்வாரையும் முழுக்கப்படிக்க ஒரு வாய்ப்பு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவர்களைத் தொட்டுப் பல ஆண்டு காலங்கள் கடந்து விட்டன.   கடலூர் துறைமுகம் பகுதியில் மாலுமியார்ப் பேட்டையில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. அது சோழர் காலத்தில் எழுப்பப்பட்ட பழைமையான  ஆலயமாகும். அங்கு தீமிதித் திருவிழா தொடர்ந்து 177 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.திருவிழாவின்போது பாரதம் படிப்பது நடக்கும். இப்பொழுதுதான் சொற்பொழிவு முறை வந்தது. அக்காலத்தில் பாரதம் மற்றும் இராமாயணங்களையும் ஒருவர் படிக்க மற்றவர்கள் குழுமியிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124166

ஓஷோ – கடிதங்கள்

ஓஷோ மயக்கம் -கடிதம் அன்புள்ள ஜெ நானும் கல்லூரி முடித்து சில வருடங்கள் ஓஷோ மயக்கத்தில் இருந்தேன்.. அவர் நூல்களை விடாது படிப்பேன், பிடித்த வரிகளைக் கோடிட்டு மீண்டும் படிப்பேன். .. அந்த மயக்கத்தில் இருந்து விடுபட உதவியதும் அவர் தான்.. “நான் சொல்வது வரிகளில் இல்லை, வரிகளுக்கு இடையில் இருக்கிறது” என்று ஒருமுறை கூறி இருந்தார்.. அந்த வரி என்னை மிகவும் பாதித்தது.. மெல்ல நூல் மயக்கத்தில் இருந்து நான் வெளியேறவும் உதவியது.. ஆனால் ஒன்று, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123820

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-24

ஆர்ஷியின் அமைதி முதல் நாள் சகுனியை கொந்தளிக்கச் செய்தது. அன்று இரவு முழுக்க அவளிடம் அவர் மன்றாடினார். தன்னால் கெஞ்சமுடியும் என்றும் குழையமுடியும் என்றும் அன்று அறிந்தார். “நான் பிழை செய்திருக்கலாம். ஆனால் அது உன் மீதான பெருங்காதலால் என்று உணர்க! நான் விழைவதை அடையும் இடத்தில் இருப்பவன். இளவரசிகளை மணக்கும் வாய்ப்புள்ளவன். எந்தப் பெண்ணாலும் கவரப்படவில்லை. உன்னில் பித்தானேன் என்றால் அது இறைவிருப்பம் என்றே சொல்வேன். நீ ஒரு பெண். உன்மேல் கொண்ட இப்பெருவிழைவை மட்டுமாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124215