Daily Archive: July 23, 2019

பறக்கும் இயந்திரம் – ரே பிராட்பரி

  மூலம் — ரே பிராட்பரி தமிழாக்கம் —  டி.ஏ.பாரி   கி.பி. 400ஆம் ஆண்டு பேரரசர் யுவான் சீனப் பெருஞ்சுவர் மூலம் தன் அரியணையை தக்கவைத்துக் கொண்டார். மழையால் வளம்பெற்ற நிலம் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்க, அவரது ஆட்சியிலிருந்த மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அல்லது துயர் இரண்டுமின்றி அமைதியில் வாழ்ந்தனர். புதிய ஆண்டின் இரண்டாவது மாதம், முதல் வாரத்தின் முதல் நாள் அதிகாலையில், பேரரசர் யுவான் தேனீரை உறிஞ்சியவாறு விசிறியிலிருந்து வரும் இளஞ்சூடான தென்றல்காற்றின் முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123930

கிருஷ்ணப்பருந்து

கிருஷ்ணப்பருந்து வாங்க   அன்புள்ள ஜெயமோகன்,   சில வாரங்களுக்கு முன்னால், கடலூர் சீனுவிடமிருந்து சா.துரையின் ‘’மத்தி’’ தொகுப்பை வாசிப்பதற்காக வாங்கியிருந்தேன். அதனை அவரிடம் திருப்பித் தர வேண்டும்; எப்போது சந்திக்கலாம் என்று கேட்டு ஃபோன் செய்தேன். நான் அழைத்த போது, நெய்வேலி புத்தகக் கண்காட்சி சென்று விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன் என்றார். என்ன புத்தகம் வாங்கினீர்கள் என்று கேட்டேன். வெகு நாட்களாக வாசிக்க ஆசைப்பட்டு தேடிக் கொண்டிருந்த ‘’கிருஷ்ணப் பருந்து’’ என்ற மலையாள நாவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124147

போலிப்பால் – கடிதம்

பால் – பாலா கடிதம் பால் அரசியல் பால் – இறுதியாக…   ஜெ, செயற்கை பால் தயாரித்த 3 தொழிற்சாலை அமைப்பில் சோதனை 57 பேர் கைது :பல திடுக்கிடும் தகவல்கள் https://www.ndtv.com/tamil/3-synthetic-milk-plants-supplying-to-6-states-raided-in-madhya-pradesh-read-it-2072515   தினமும் 2 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு, 3 யூனிட்டுகள் , 24/7 ஷிப்ட் .   டோல்பிரீ கஸ்டமர் கேர் மட்டும் மிஸ்ஸிங் :)   டெல்லியில் நீங்கள் சுவைத்தது இந்நிறுவன பாலாக இருக்கலாம் ,பனீர் கூட தயாரிக்கிறார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124231

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-23

சகுனி களத்தில் தேரில் நின்று அம்புதொடுத்து போரிட்டபடி தன்னை இருபுறமும் பின்தொடர்ந்து காத்து வந்த மைந்தர்களை பார்த்தார். வலப்பக்கம் விருகனும் இடப்பக்கம் உலூகனும் வழிநடத்த மைந்தர்கள் விருபாக்ஷனும் ரக்தாக்ஷனும் ஸ்ரீகரனும் புஷ்கரனும் புஷ்பனும் விந்தனும் உத்பவனும் வந்துகொண்டிருந்தனர். அவர்களின் அம்புகளால் அமைக்கப்பட்ட வேலிக்குள் அவர் சென்றுகொண்டிருந்தார். எதிரே வந்த அம்புகளில் பெரும்பாலானவை அவருடைய மைந்தரின் அம்புகளால் தடுக்கப்பட்டன. உலூகனின் அம்புகள் விசையும் விரைவும் கொண்டவை. விருகனின் அம்புகள் எடைமிக்கவை. அவை எதிரம்புகளை வெல்வதன் சிறிய மணியோசைகள் அவரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124212