Daily Archive: July 21, 2019

கதிரவனின் தேர்-9

ஒரியக்கலையின் ஒட்டுமொத்தத்தையே பார்த்துவிட்டோம் என்னும் உணர்வை கொனார்க்கில் அடைவோம். அதன்பின் லிங்கராஜ் ஆலயம் நாம் பார்த்தது ஒரு பட்டையை மட்டுமே எனக் காட்டும். அந்த விழிகளுக்கு முக்தேஸ்வர் ஆலயம் இன்னொரு உலகைத் திறக்கும். பொதுவாகப் பார்த்துச்செல்லும் ஒருவர் இந்த ஆலயங்கள் அனைத்தும் ஒன்றுபோலவே இருப்பதாக நினைக்கலாம். முக்தேஸ்வர் ஆலயம் லிங்கராஜ் ஆலயத்தின் கன்று என்றும் சொல்லலாம். சற்று கூர்ந்து நோக்கி கலையழகை அறிபவர் அவற்றின் தனித்தன்மையைக் கண்டடைவார் செவ்வியல் கலையின் மாயமே அதுதான். ஒன்றே என்றும் வேறுவேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124115/

விஷ்ணுப்பிரியா -கடிதங்கள்

  மீள்வும் எழுகையும் அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு, பொருளீட்டுவதும், சமூக அந்தஸ்து பெறுவதும் மட்டுமே வாழ்க்கை என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கப்பட்டு அதை நோக்கிஓடிக் கொண்டிருக்கும் இச்சமூகத்தில் மாற்றாக உண்மை,தியாகம், மனிதநேயம், தன்னறம் போன்ற உயர் விழுமியங்களுக்காக தன்வாழ்க்கையை அர்ப்பணிக்கும் விஷ்ணுபிரியா போன்றவர்கள் பெரும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முதன்முதலாக குக்கூ அமைப்பைச் சேர்ந்த நண்பர்களை திருப்பரங்குன்றம் குடைவரைக்கோயிலில் உங்கள் நிகழ்வில்தான் சந்தித்தேன். பெரும் பொருள் ஈட்டக்கூடிய,சமூகம் போற்றக்கூடிய பணிகளை உதறிவிட்டு தான் நேசிக்கும் வாழ்க்கையைவாழ்வதற்காக கைத்தறி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124184/

ஜப்பான் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,   வணக்கம். ஐந்தாவது, ஆறாவது கட்டுரை வாசிக்கும் போதே, நீங்கள் இன்றைய ஜப்பானின் உறவுச்சிக்கல்களை ஏதோ ஒரு கட்டுரையில் தொடூவீர்கள் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. பதினைந்தாவது கட்டுரையில் அது வந்தது. கட்டுரைத் தொடரின் கனத்த பகுதி.   குறிப்பாக உழைப்பு பற்றிய பகுதி. உழைப்பு பற்றிய பொதுவான நோக்கினை உடைத்தெறிவது. மசானபு புஃகோகோ ஒற்றை வைக்கோல் புரட்சியில் வேளாண்மை செய்வது பற்றி இவ்வாறு சொல்லியிருப்பார். மனிதன் குறைவான நேரமே உழைக்க வேண்டும், ஆறு மாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124112/

புதுவை வெண்முரசு கூடுகை – 28

  அன்புள்ள நண்பர்களே ,   வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி “ஜூலை மாதம்” 28 வது கூடுகையாக. 25-07-2019 வியாழக்கிழமை அன்று மாலை6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும்,புதுவை வெண்முரசு கூடுகையினசார்பாக அன்புடன் அழைக்கிறோம் .   கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி எட்டு “கதிரெழுநகர்” , 49 முதல் 58 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124217/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21

சல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன் மூதாதையின் வில் என்பது நினைவிலெழ திகைப்புற்றார். அக்கணம் அவர் கையிலிருந்து வில் தழைந்தது. அவருடைய நெஞ்சிலும் தோளிலும் யுதிஷ்டிரனின் அம்புகள் தைத்தன. அவர் நிலையழிந்து தேர்த்தூணை பற்றிக்கொள்ள அவருடைய பாகன் அவரை மீட்டு அலைகொண்ட படைகளுக்குப் பின்பக்கம் அழைத்துச்சென்றான். தான் பின்னடைகிறோம் என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124186/