Daily Archive: July 19, 2019

வாசிப்பு மாரத்தான்

  நண்பர்களுக்கு வணக்கம் ! கடந்த முறை எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் பாலுமகேந்திரா நூலகத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயமோகன் துவங்கி வைத்த ஆயிரம் மணிநேர வாசிப்பு பற்றியும் அதனுடைய அவசியம் பற்றியும் பேசினேன் அப்பொழுது ஆயிரம் மணி நேரம் முடியாவிட்டாலும் 100 மணி நேர வாசிப்பிலிருந்து நாம் துவங்கலாமே என்று அந்த கூட்டத்தில் பேசினேன். அதை அஜயன் பாலா அவர்கள் இப்பொழுது முன்னெடுத்திருக்கிறார்கள் நாளை காலை ஒரு மாரத்தான் வாசிப்பு துவங்க இருக்கிறது. வசந்தபாலன் [பிகு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124107

கதிரவனின் தேர்-7

நான் முதன்முறையாக கொனார்க்குக்கு வந்தபோது  ஒரிசாவில் சூரியக்கோவிலைத் தவிர பார்ப்பதற்கு வேறு இடங்கள் உள்ளன என்று தெரிந்திருக்கவில்லை. அங்கு வந்துவிட்டு அங்கிருந்து கயா சென்றேன். பின்னர் காசி. அன்றே யுனெஸ்கோ நிறுவனம் சூரியர் கோவிலை மறுகட்டமைக்கும் பணியை தொடங்கிவிட்டிருந்தது. மொத்தக் கோயிலுமே கம்பிச் சட்டங்களால் தாங்கி நிறுத்தப்பட்டிருந்தது. கருவறைகளுக்குள் கற்கள் கொட்டப்பட்டு உள்ளே நுழைவதற்கான மாவட்ட ஆட்சித்தலைவரின் தடையாணை எழுதி ஒட்டப்ப்ட்டிருந்தது. வரலாற்றுக்குள் நுழைவதற்கான தடை என அதை அன்று நாட்குறிப்பில் எழுதிவைத்திருந்தேன்   அதன் பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124054

பயணியின் கண்களும் கனவும்

  அன்புள்ள ஜெயமோகன், ஜப்பான், ஒரு கீற்றோவியம் தொடரை படித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கும்போது தோன்றிய எண்ணம் அன்றைய இரவின் கனவில் ஆழ் மனம் நினைக்க வேண்டுமென்றால் ஒரு நகரத்தை எப்படி மனதுக்குள் பூட்டுவது? நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள்? மோகன் நடராஜ்   அன்புள்ள மோகன் எந்த ஒரு விஷயமும் கனவாக வரவேண்டும் என்றால் அது நம்முள் புகுந்திருக்கவேண்டும். நமது ஈடுபாடுதான் அவ்வாறு ஒன்றை கனவுக்குள் கொண்டுசெல்கிறது ஆனால் ஈடுபாடு அப்படி தன்னிச்சையாக எழும் என்று சொல்ல மாட்டேன். அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123838

அனோஜனும் கந்தராசாவும் – கடிதம்

முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன் ஆசி கந்தராசா பயணியின் புன்னகை அன்புள்ள ஜெயமோகன் ,   ஆசி.கந்தராஜா அவர்களின் ‘கள்ளக் கணக்கு’ சிறுகதை தொகுப்பு பற்றிய அனோஜனின்  பார்வையை தங்கள் தளத்தில் கண்டேன்.அருமையான தலைப்புடன் விரிவான கண்ணோட்டத்தினை தந்திருக்கிறார், இந்தத் திறமை மிகுந்த இளம் படைப்பாளி.   நிகழ்காலத்தின் மேன்மை மிக்க எழுத்தாளர் தாங்கள்  என்பதில் உணர்வு பூர்வமாக நான் உடன்படுகிறேன். “ஒரு கோப்பை காபி”என்ற தங்கள் சிறுகதைக்கான தெளிவு தரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123928

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19

யுதிஷ்டிரன் சல்யரை நோக்கியபடி வில்லுடன் தேரில் முன்சென்றார். சல்யரின் சீற்றம் அவருக்கு உயிரச்சத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஓரிரு அம்புகள் வந்தறைந்த விசையைக் கண்டதும் அவர் நகுலனுக்காகவும் சகதேவனுக்காகவும் அஞ்சினார். “இளையோரே, விலகுக… அவர் வெறிகொண்டிருக்கிறார்” என்றார். அப்போதுதான் அவர் அம்புபட்டு உயிரிழந்துகிடந்தவர்களின் முகங்களின் வெறிப்பை அடையாளம் கண்டார். “இளையோரே, இது மத்ரநாட்டுப் பாறை நஞ்சு… இதை நான் அறிவேன். நரம்புகளைத் தொடுவது… விலகுக!” என்று கூவினார். நகுலன் “நாங்கள் போரிடுகிறோம் மூத்தவரே, நீங்கள் அம்பு எல்லைக்கு அப்பால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124052