Daily Archive: July 18, 2019

கதிரவனின் தேர்- 6

  தேர்த்திருவிழா மெல்லமெல்ல விசைகொண்டபடியே இருந்தது. கோயிலில் இருந்து தேருக்கு மலர்மாலைகளையும் பூசனைத் தாலங்களையும் கலங்களையும் கொண்டுவந்துகொண்டிருந்தனர். இந்தியாவெங்கும் சப்பரம் கொண்டுவரும் அதே முறைதான். ஒருசாரார் உந்த மறுசாரார் தடுக்க அலைகளின் மேல் என பல்லக்குகள் அலைபாய்ந்தன. படகுகள் போல சுழன்று தத்தளித்தன. கூச்சல்களும் வாத்திய ஒலிகளுமாக அங்கே ஒரு பாவனைப் போர்க்களமே நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொன்றையாக தேருக்குள் கொண்டு சென்று வைத்தார்கள். தேருக்குள் புகுவதே ஒரு போராட்டம். அங்கே ஏற்கனவே பெருங்கூட்டம். அவர்களை ஊடுருவித்தான் செல்லவேண்டும். அங்கிருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123960

வாசிப்புச் சவால் – கடிதங்கள்

வாசிப்பு எனும் நோன்பு வாசிப்பு நோன்பு- கடிதங்கள் வாசிப்புச் சவால் -கடிதம்   அன்புள்ள ஜெ ஆயிரம் மணிநேர வாசிப்புச் சவாலை எனக்கு நானே விடுத்துக்கொண்டேன். நான் அதை எவருக்குமே சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கே நம்பிக்கை இல்லை. நான் வாசித்தது எல்லாமே 30 வயதுக்குள்தான். சென்ற எட்டாண்டுகளாக அனேகமாக புத்தகம் என எதையுமே வாசிக்கவில்லை. வாசிப்பு முழுக்க இணையத்தில்தான். அதிலும் உதிரிப்பதிவுகள். இந்த இணைய வாசிப்புக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அது அவ்வப்போது ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123860

இன்றைய காந்திகளைப்பற்றி…

இன்றைய காந்திகள் இலா பட் – காந்திய தொழிற்சங்கத் தலைவர்! – பாலா காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்– பாலா ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் –பாலா சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! –பாலா பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்– பாலா போற்றப்படாத இதிகாசம் –பாலா ஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!   அன்புள்ள ஜெ   இன்றைய காந்திகள் என்றபேரில் பாலா எழுதிய கட்டுரைகள் நூலாக வரவிருக்கின்றன என நினைக்கிறேன். சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகள் இவை. இன்றுவரை இவர்களைப்பற்றி இவ்வளவு விரிவாக அக்கறையாக எவரும் தமிழில் பதிவுசெய்யவில்லை. அவ்வப்போது உதிரிச்செய்திகளாக இவர்களில் சிலரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய இவர்களைப்பற்றி இப்படி ஒரு சித்திரம் என்னிடம் இல்லை   இலா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123293

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18

சல்யரை அத்தனை வீச்சுடன் களத்தில் ஒருபோதும் அர்ஜுனன் பார்த்ததில்லை. குருக்ஷேத்ரத்தில் பத்து முறைக்கு மேல் அவன் சல்யரை அம்புகளுடன் எதிர்கொண்டிருக்கிறான். எத்தகைய வில்லவர் அவர் என்பதை அவன் அறிந்திருந்தான். மலைவில்லவர்களுக்கு உரியமுறையில் நெடுந்தொலைவை நோக்கவும் அம்புகளால் தாக்கவும் அவரால் இயலும். அவர்களின் அம்புகளை மலைப்பறவைகள் என்றனர். அவை தொலைவுகளை விழிகளால் கடப்பவை. மத்ரர்களின் வில் ஒப்புநோக்க சிறியது. அம்புகளும் சிறியவை. ஆனால் பயிறு இலையில் என தண்டு செருகும் இடம் உள்வாங்க கூரின் இருபுறமும் சற்றே பின்னால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124032