Daily Archive: July 13, 2019

கதிரவனின் தேர்- 1

  புரியின் ஜகன்னாதர் தேரைப்பற்றி நான் கேள்விப்படுவது விந்தையான ஒருவரிடமிருந்து. 1970 களில் நான் சிறுவனாக இருந்தபோது அருமனை பள்ளி அருகே நிகழ்ந்த ஒரு மதச்சொற்பொழிவில் ஒரு வெள்ளையர் சொன்னார். “இந்தியாவில் நாகரீகத்தைக் கொண்டுவந்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள். அவர்கள் இங்கே வந்து பார்த்தபோது மக்கள் சொற்கத்திற்குச் செல்வதற்காக பூரி நகரில் நிகழும் ஜகன்னாதர் தேரின் சக்கரங்களை நோக்கி தங்கள் குழந்தைகளை தூக்கி வீசி கொன்றனர். தேரோடும் வீதி முழுக்க உழுதிட்ட வயல்போல குழந்தைகளின் குருதி நிறைந்திருக்கும்.அதன்மேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123770

ஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு

கலை வாழ்வுக்காக -ஸ்ரீபதியின் குடும்பத்திற்காக வணக்கம் சமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்பநாபாவின் கவிதைகளுக்கு நான் ரசிகை. ஆய்வுமாணவியாக இருந்த 90களின் இறுதியில்தான் விகடனில் வெளிவந்த அவரது ஒரு கவிதையில் முதன் முதலாக அவரை அறிந்துகொண்டேன். 4 வருடங்கள் தினம் பொள்ளாச்சியிலிருந்து கோவை சென்ற அக்காலத்தில் வியாழக்கிழமைகளில் விகடனை கடையில் வாங்கியபின்பே பேருந்தில் ஏறும் வழக்கம் இருந்தது. வழியெல்லாம் வாசித்துக்கொண்டே போவேன். விகடனில் அப்படி முழுப்பக்கம் வந்திருந்த அந்த முதல்கவிதை என்னை வெகுவாக பாதித்தது. ’எல்லாம் எல்லாம் மறந்துவிடுவதாக’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123830

எழுதும் முறை – கடிதங்கள்

மாயாவிலாசம்! அன்புள்ள ஜெ அய்யா   தங்கள் செல்பேசித் தமிழ் கட்டுரை பற்றி எனது எண்ணங்கள்   நம்மில் சிலர் புது கண்டுபிடுப்புகளை வேகமாக கைய்யாள தொடங்குகிறார்கள் ஆனால் பலரிடம் ஒரு தயக்கமோ அச்சமோ இருக்கிறது. smart போன் அறிமுகமான சில தினங்களிலேயே என்னுடன் பணியாற்றிய சிலர் கைபேசியிலேயே நீண்ட மின்னஞ்சல்களை எழுதத் தொடங்கிவிட்டனர். நான், ஆமாம், OK, போன்ற பதில்களைத் தாண்டி எதுவும் எழுத முயற்சிக்கவில்லை. உடனே மடிக்கணினிக்கு தாவி விடுவேன்.   கூட பணிபுரிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123221

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13

அஸ்வத்தாமனை நோக்கி அம்புகளைத் தொடுத்தபடி போர்க்கூச்சல் எழுப்பிக்கொண்டு தேரில் சென்றபோது திருஷ்டத்யும்னன் துயிலிலோ பித்திலோ என முற்றிலும் நிலையழிந்திருந்தான். வெளியே கேட்டுக்கொண்டிருந்த ஓசைகளும் அறைந்து உதிர்ந்த அம்புகளும் புகையென அவன் உடலைக் கடந்து சென்றுகொண்டிருப்பதுபோல் தோன்றியது. ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கிறேனா என்னும் ஐயம் அவனுள் எழுந்துகொண்டே இருந்தது. இல்லை, இடவுணர்வும் காலபோதமும் இருக்கின்றன. இதோ இங்கே இவ்வண்ணம் போரிட்டுக்கொண்டிருக்கிறேன். நேற்று இன்றுடன் பிணைப்புண்டிருக்கிறது. இக்கணம் அனைத்தையும் மையமென நின்று தொகுத்துக்கொண்டிருக்கிறது. இக்கணம், இக்கணம், இக்கணம்… இக்கணமே அனைத்தையும் மையமென …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123865