Daily Archive: July 12, 2019

தொல்பாறைகளுடன் உரையாடுதல்…

மகராஷ்டிரத்தில் மால்வான் அருகே தொன்மையான பாறைப்படிவு ஓவியங்கள் கண்டடையப்பட்டதுமே  அங்கே செல்லவேண்டும் என்று கிருஷ்ணன சொல்லத் தொடங்கிவிட்டார். கூடவே ஒரு மழைப்பயணம் பற்றிய திட்டமும் இருந்தது. தென்மேற்குப் பருவக்காற்றைத் தொடர்தல். இரண்டையும் ஒன்றாக்கிவிட்டோம். பெங்களூரில் இருந்து ரத்னகிரி வரை. மால்வானிலும் குடோப்பியிலும் தொல்லோவியங்கள். வழியில் பெல்காமிலும் கடக்கிலும் ஆலயங்கள் நான், கிருஷ்ணன்,ராஜமாணிக்கம், ஈஸ்வரமூர்த்தி, ஈரோடு சிவா, சென்னை செந்தில், ஜிஎஸ்வி நவீன், சக்தி கிருஷ்ணன்,பெங்களூர் கிருஷ்ணன், பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன், மணிமாறன், திருமாவளவன் என 12 பேர் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123993

இ.பாவை வணங்குதல்

அன்புள்ள சார், ஒரு பள்ளி ஆண்டு விழாவில் சிறப்புரையாற்றிக்கொண்டிருந்தவர், திருவள்ளுவர் ஏன் 1330 குறள்கள் எழுதினார் என்று ஒரு விளக்கம் அளித்தார். 1330 என்கிற எண்ணை ஒன்றுடன் ஒன்று கூட்டினால் 7 வருகிறது. திருக்குறளைப் படித்தவனுக்கு ஏழு பிறவிக்கும் கவலையில்லை என்று அதற்குப் பொருள் என விளக்கினார். அப்பொழுது நான் வாயை அனுமார் போல வைத்துக்கொண்டு ஒரு பதிவைத் தேடினேன். அது இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய இந்தப்பதிவு. பெரியாழ்வார் பாடியிருப்பாரா? சிறில் அண்ணன் இபா அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123997

’மறுசந்திப்பு’ ஐசக் பாஷவிஸ் சிங்கர்- தமிழாக்கம் டி.ஏ.பாரி

முட்டாள் கிம்பெல்: ஐசக் பாஷவிஸ் சிங்கர் நிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக் தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக் முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்   தொலைபேசி அடித்ததில் டாக்டர். மேக்ஸ் க்ரீட்சர் விழித்தெழுந்தார். படுக்கையின் அருகே மேசையில் இருந்த கடிகாரம் எட்டு மணிக்கு இன்னும் பதினைந்து நிமிடம் காட்டியது. “இந்த காலை நேரத்தில் யாராக இருக்கும்?” என முனகியவாறே தொலைபேசியை கையில் எடுத்தார். ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123282

ஜப்பான் – கடிதம்

  ஜெமோ,     தத்துவங்களையும் ஆச்சாரங்களையும் இணைத்துத்தான் மதம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்கு இணைப்பானாகச் செயல்படும் ரப்பர்தான் புராணம். உங்களை தொடர்ந்து வாசித்தாலும், பெற்றுக் கொள்வதற்கு இப்படி ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் Black box போன்றே முன்வைக்கப்படும் மதத்தின் உள்ளடக்கங்களை X-Ray துணை கொண்டு ஊடுருவிப் பார்ப்பது போல் இருந்தது ஜப்பானியப் பயணக்கட்டுரையில் வரும் இவ்வரிகள். உலகம் முழுவதும், எவ்வித வேறுபாடுமின்றி, மதங்கள் அனைத்தும் இப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றுணரும்போது எழும் புரிதல் உலகத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123709

ஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு

ஏழாம் உலகம் மின்னூல் வாங்க ஏழாம் உலகம் வாங்க     நான் கடவுள் திரைப்படம் பார்த்தபோது என்னுடைய மனத்தை உலுக்கியது அதில் வரும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை. தங்களுடைய கஷ்டத்தை நகைச்சுவை மூலம் கரைத்து எப்படி வாழ்கிறார்கள் என்பது ஒரு பெரிய படிப்பினை. ஆனால் ஏழாம் உலகமோ இன்னும் நுணுக்கமாக ஒவ்வொரு உருப்படியையும் அலசி ஆராய்ந்து புதிய படிப்பினையை தருகிறது. இதில் வரும் பண்டாரம் நான் கடவுள் திரைப்படத்தில் வரும் தாண்டவன் இல்லை. பண்டாரமும் ஒரு மனிதன்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123671

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12

சாத்யகி ஒருகணத்தில் மூண்டுவிட்ட அப்போருக்கு மிக அப்பால் நின்றான். இருபுறமிருந்தும் கரிய நீர்ப்பெருக்குகளென படைவீரர்கள் எழுந்து சென்று அறைந்து குழம்பி கலந்து கொப்பளித்து கொந்தளிக்கும் உடற்பரப்பென ஆயினர். எப்பொருளும் எண்ணிக்கை பெருகுகையில் நீரென மாறும் விந்தையை அப்போர்க்களத்தில் வந்த நாள் முதல் அவன் கண்டிருந்தான். மானுட உடல்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாக்கும் அலையை, சுழிப்பை, திளைப்பை, குமிழ்வை, கொந்தளிப்பை காணும்போதெல்லாம் அகம் திடுக்கிடுவான். தன்னை தனித்துக் காணும் ஒன்று உள்ளிருந்து பதைக்கிறது என்று உணர்வான். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123761