Daily Archive: July 11, 2019

பழைய முகங்கள்

கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பின் என் இளமைக்கால நினைவுகளில் ஒன்றான இந்தப்பாடலைக் கண்டடைந்தேன். முன்பெல்லாம் திருவனந்தபுரம் வானொலியில் அவ்வப்போது ஒலிபரப்பாகும். இணையம் எல்லாவற்றையும் அழிவற்றதாக்குகிறது.   இந்தப்பாடல் நான் பிறந்த ஆண்டு , பிறப்பதற்கு ஒருமாதம் முன் , 1962 மார்ச்சில் வெளியான ஸ்னேகதீபம் என்னும் படத்தில் வெளிவந்தது. இசை எம்.பி.ஸ்ரீனிவாசன். இயற்றியவர் பி.பாஸ்கரன். அக்காலத்தில் வந்த தூய மேலைநாட்டு மெட்டு. ஆகவே அன்று இது ஒரு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. இசைநிகழ்ச்சிகளில் பாடுவார்கள். அதைவிட பாண்ட் வாத்தியங்களில் வாசிப்பார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122506/

கம்பன் மொழி

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில் கம்பனும் குழந்தையும் கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி கம்பராமாயணம் வகுப்பு அணிகளின் அணிநடை தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில் அன்புள்ள ஜெயமோகன்,   கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல். நாட்டு படலம் முப்பத்தி நாலாவது பாட்டு.   ஆறு பாய் அரவம், மள்ளர் ஆலை பாய் அமளை, ஆலைச் சாறு பாய் ஓதை, வேலைச் சங்கின் வாய் பொங்கும் ஓசை, ஏறு பாய் தமரம், நீரில்  எருமை பாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123261/

வீரமான்: ஒரு சந்திப்பு

  நான் எப்போதுமே என் நண்பர்களிடம் சொல்வதுண்டு. விற்பனையின் எண்ணிக்கையையும் வெளியீட்டின் லாபத்தையும் மையமாக வைத்து செயல்படும் ஒத்த சிந்தனையை உடைய நவீன இலக்கியவாதியைவிட கருத்தியல் ரீதியாக முற்றும் முழுதாக முரண்பட்ட பல மரபான எழுத்தாளர்கள் எனக்கு முக்கியமானவர்கள். இந்த தேசத்தில், இந்த மொழியில் இயங்கினால் தனிமையும் வெறுமையும் வறுமையும் இறுதியில் நிலைக்கும் எனத்தெரிந்தே அதில் இயங்கத் துடித்தவர்கள் அவர்கள்.  தாங்கள் நம்பிய இலக்கிய வடிவத்துக்கு நேர்மையாக இருந்தவர்கள். அவர்களை வணங்குவதும் நினைவுபடுத்துவதும் இன்றைய படைப்பாளிக்கு முக்கியமானது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123933/

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-11

சாத்யகி தேர் மேல் ஏறி நின்று அதை ஓட்டிய புதிய பாகனிடம் “செல்க!” என்றான். தேர் முன்னெழுந்து சென்றபோது அவன் தன்னைத் தொடரும்படி படைவீரர்களுக்கு ஆணையிட்டான். அவனுடைய கையசைவு விளக்கொளிச் சுழலாக மாறி காற்றில் வடிவுகொள்ள சவுக்கால் சொடுக்கப்பட்ட யானை என அவனுக்குப் பின் அணி நிரந்திருந்த பாண்டவப் படை ஓசையெழுப்பியபடி தொடர்ந்து வரத்தொடங்கியது. அவன் அதன் ஓசைகளை எப்போதும் தன்னைத் தொடரும் பெரும்படையின் முழக்கமென்றே உணர்ந்தான். உளம் கூர்ந்தபோதுதான் அவ்வோசை மிகத் தணிந்தொலிப்பதை அறிந்தான். ஓரிரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123756/