மே 16, ஜப்பானில் இருந்து கிளம்பும் நாள். செந்திலின் இல்லத்தில்தான் முதல் ஐந்துநாட்களும் தங்கியிருந்தோம். விசாவுக்காக விடுதி அறை போடவேண்டியிருந்தது. அதை ரத்துசெய்தாலும் பாதி செலவாகும். ஆகவே இறுதி இரண்டு நாட்கள் விடுதியில் தங்கினோம். ஜப்பானிய விடுதிகள் வசதியானவை. ஆனால் சிறியவை. ஆடம்பரங்கள் இருப்பதில்லை. அதேசமயம் உபசரிப்பு மிக மிக தொழில்முறையானது. ஒரு சிறிய கோரிக்கைகூட நிறைவேற்றப்படும்.காலையுணவு ஜப்பானிய முறைப்படி இருந்தது. காலையில் செந்திலின் இல்லத்திற்குச் சென்று விடைபெற்றுக்கொண்டோம். அவருடைய மனைவி காயத்ரி குழந்தைகள் கவின்,காவ்யா …
Daily Archive: July 10, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/123625
தத்துவ வாசிப்பின் தொடக்கம்
அன்பின் ஜெமோ, வணக்கம். நலமா?. “இடைவெளி” நாவலையொரு 3 வருடங்களுக்கு முன்னர் வாசித்தேன் . அப்பொழுது எனக்கு அந்நாவல் சுத்தமாகபிடிபடவில்லை. மேலும் அந்நாவலை வாசிக்க காரணம் அச்சமயத்தில் மரணம் பற்றியே கேள்விகள் என்னை பெரிதும்அலைக்கழித்துக் கொண்டே இருந்தது இப்பொழுதும் இருக்கின்றது. இப்பொழுது கிட்டத்தட்ட சம்பத்தின் மனநிலையில்இருக்கிறேனோ என்று கூட தோன்றுவதுண்டு . மேலும் நான் எழுதும் சிறுகதை முயற்சிகளில் எப்படியேனும் மரணம் புகுந்துவிடும். வாழ்வை ஒரு அளவேனும் திருப்திகரமாய் வாழ (வாழ்வது என்றால் என்ன?) மரணம் பற்றி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/121813
நட்பெதிரி – கடிதம்
நட்பெதிரி அன்பு ஜெயமோகன்! முன்னொரு சமயம் motel என்பதற்கு ஒரு தமிழ்ப்பதம் தேடினேன். அதை a hotel for people who are travelling by car, with space for parking cars near the rooms என்கிறது Oxford. சென்னை சொற்களஞ்சியம் அதை உந்துலாவினர் தங்கல் மனை அமைவு என்று தமிழ்ப்படுத்தியது கண்டேன். motel-ன் சொற்பிறப்பியலை Oxford-ல் தேடினேன். Motor, hotel ஆகிய இரண்டு சொற்களின் சரிபாதிகள் motel-ஆக இணைக்கப்பட்டதை கண்டுகொண்டேன். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/123666
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10
திருஷ்டத்யும்னன் சென்று சேர்ந்தபோது ஏற்கெனவே யுதிஷ்டிரனின் அவை கூடியிருந்தது. அவனுக்காக பிறர் காத்திருப்பது தெரிந்தது. முகப்பில் நின்றிருந்த சுருதகீர்த்தி தலைவணங்கி கையசைவால் அவையமரும்படி காட்டினான். பாடிவீடுகளென அமைந்திருந்த குடில்களும் கூடாரங்களும் முற்றாக எரிந்தகன்று கரிப்படிவங்களென மாறியிருந்த அந்நிலத்தில் முன்பிருந்த அவைக்கூடத்திற்கு உள்ளேயே கற்களையும் அடுமனைக்கலங்களையும் போட்டு அவை அமைக்கப்பட்டிருந்தது. திருஷ்டத்யும்னன் ஒருகணத்திற்குள் தன்னுடல் அந்த கரிக்கோட்டு வடிவிலிருந்து அங்கிருந்த பழைய அவையை எவ்வண்ணம் பெருக்கி எடுத்துக்கொண்டது என்பதை எண்ணி வியந்தான். இடைநாழியில் நடப்பதையும் வாயிலில் நுழைவதையும்கூட அவன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/123745