Daily Archive: July 6, 2019

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12

தலைநகரங்களில் அரசர்களின் அரண்மனைகள் இருப்பது வழக்கமாகக் காணக்கிடைப்பது .அவை சுற்றுலாத்தலங்களாக மாறிவிட்டிருக்கும். யானை கோமாளிவேடம் அணிந்து சர்க்கஸ் வளையத்திற்கு வருவதுபோன்றது அது. அரண்மனை என்றாலே அரண் கொண்ட இல்லம்தான். அது காட்சியிடமாகும்போது அங்கே அரண் இல்லை. எஞ்சுவது வெறும் மனை. நான் பார்த்தவற்றில் மலைப்பூட்டிய அரண்மனை பிரான்ஸின் வெர்ஸேல்ஸ் அரண்மனை. அது  கலைக்கூடம், அருங்காட்சியகம், சிறை, நினைவில்லம் ஆகியவற்றின் கலவை. மிக எளிமையாக இருந்தது இந்தோனேஷியாவில் யோக்யகர்த்தாவில் கண்ட சுல்தானின் அரண்மனை. நம்மூர் பண்ணையார் வீடு போல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123490

நீர் என்ன செய்தீர்

சத்திமுத்தப் புலவர் ஜெயமோகன், சமீபத்தில் நீர் எழுதிய சம்பவத்தை படித்தேன் அறம் என்ற தலைப்பில். (கதை என்ற வார்த்தையை பிரயோகிக்க மனம் வர வில்லை )  படித்து முடிததவுடன் கண்ணை கட்டி விட்டார் போல் இருந்து. அவ்வளவு சோக ரசம். அந்த முதிர்ந்த எழுத்தாளர் பட்டினியும் பசியுமாக காயக் கிலேசம் செய்து நாற்பது வயதில் நிச்சயம் ஒரு அறுபது வயது வாழ்க்கையை வாழ்ந்து இருக்க வேண்டும். நீர் எழுதிய வரிகளில் பறங்கிக் கொடியின் பற்றுச் சுருளைப் போல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123290

ஸ்ரீபதி பத்மநாபா – கடிதம்

கலை வாழ்வுக்காக அன்புள்ள ஜெ ஸ்ரீபதியின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் அறிவிப்பில்  அதிகபட்ச தொகையை அளிப்பவருக்கு எனது ஓவியம் என்று சொல்லி இருந்தேன். பலர் தங்களால் இயன்ற தொகையை திருமதி. சரிதா அவர்களின் வங்கி கணக்கில்  செலுத்தி விட்டு எனக்கு ரஷீதுகளை அனுப்பி இருந்தார்கள். மொத்தமாக ரூ. 54128க்கான ரஷீதுகள் வந்தன. அதில் அதிக தொகையான ரூ.14000 செலுத்திய பாண்டிச்சேரி வெண்முரசு நண்பர்கள் குழுவுக்கு எனது ஓவியத்தை அளிக்க இருக்கிறேன். மற்றபடி நிதி அளித்த அனைவருக்கும் ஸ்ரீபதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123673

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6

பார்பாரிகன் அமர்ந்திருந்த காவல்மாடம் இளமழையில் நனைந்து நான்கு பக்கமும் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க இருளுக்குள் ஊழ்கத்திலென நின்றிருந்தது. ஓசை எழுப்பாத காலடிகளுடன் நடந்த புரவியின் மீது உடல் சற்றே சரித்து கடிவாளத்தை இடக்கையால் பற்றி வலக்கையால் தாடியை நீவியபடி அமர்ந்திருந்த சகுனி அதனருகே நின்று மேலே பார்த்துக்கொண்டு எண்ணங்கள் உறைந்தவர்போல் சற்று நேரம் இருந்தார். ஓரிரு கணங்களுக்கு வந்தமைந்து அகலும் துயில் அவர் மேல் பரவிச்சென்றது. பின்னர் நீர் சொட்டும் ஓசையில் விழிப்பு கொண்டவர்போல் தன்னை உணர்ந்து, மழைத்துளிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123454