Daily Archive: July 5, 2019

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11

  ஒரு நாட்டின் தலைநகரைப் பார்ப்பதென்பது அதன் பிற இடங்களைப் பார்ப்பதைவிட அரிதான ஓர் அனுபவம். பிற நகர்களில் வணிகம், தொழில், சுற்றுலா என பல கூறுகள் இருக்கும் .தலைநகர்களில் நேரடியாகவே அதிகாரம் திகழும். அதிகாரம் என பொதுவாகச் சொல்கிறோம். நான் அதன் வெளிப்படையான அடையாளங்களை மட்டும் சொல்லவில்லை. அதிகாரச் சின்னங்களான கோட்டைகள், அரண்மனைகள், அரசகுடிகளுக்கான சமாதியிடங்கள், வெற்றித்தூபங்கள் என பல அங்கே இருக்கும். அவற்றுக்கு அப்பால் நாம் அந்த இடத்திற்கே உரிய ஓர் குறீயீடை நாமே  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123464

பார்ஸிலோனாவில் நடை

  ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு , நலமடைந்து வருகீறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி ,கூடவே பயணத்திற்கான உற்சாகத்தில் வெறிகொண்டு எழுதுவும் தொடங்கிவிட்டீர்கள் . இரு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் உங்களுடன் கேரளாவிற்கு நடைபயணம் திட்டமிட்டதாக சொன்னார். நான் ஒருமுறை நாகர்கோவிலிலிருந்து-கொச்சிக்கு ரயிலில் செல்லும்போது என் பக்கத்து  இருக்கையில் அமர்ந்திருந்த இங்கிலாந்தை சார்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்    தாமஸ்(வயது அறுபது) ஆலப்புழாவுக்கு பயணித்தார். திருக்குறள் பற்றி பேசினார்,ஆங்கில திருக்குறள் தன்னிடம் இருப்பதை காண்பித்தார்.இது இறைவேதம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123405

காந்திகளின் கதை

இன்றைய காந்திகள் அன்புள்ள ஜெ நவகாந்தியர்கள் பற்றிய நூல் அனைவருக்கும் ஒரு பெரிய படிப்பினையாக அமையும் நூல். நாம் அனைவருக்குமே இன்றைய காலகட்டத்தில் காந்தியத்திற்கு ஏதேனும் பொருள் இருக்கமுடியுமா என்று சந்தேகம் இருக்கும். அந்தச் சந்தேகம் நம்முடைய சொந்த அறியாமை, அச்சம் ஆகியவற்றிலிருந்து எழுவது. நம்மால் முடியாது, ஆகவே காந்தியாலும் முடிந்திருக்காது என்று எண்ணுகிறோம். நவகாந்தியர்களின் சாதனைகள் நம்மைச்சுற்றித்தான் நிகழ்ந்துள்ளன. அவை நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கின்றன. நாம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இன்றைக்குத் தகவலறியும் சட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123276

கோவை,சிங்காரம்,சு.வேணுகோபால் -கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, ஞாயிறு காலை ஜப்பான், ஒரு கீற்றோவியம்-6 படித்துவிட்டு நம்முடைய கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் கூடுகைக்குச் சென்றேன். ப. சிங்காரம் அவர்களின் கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி நாவல்கள் குறித்து கலந்துரையாடல். நிகழ்வு நன்றாக சென்றது. திரு. சு. வேணுகோபால் அவர்களும் திரு. கால சுப்பிரமணியம் அவர்களும் கலந்து கொண்டது கலந்துரையாடலை மேலும் சிறப்பாக்கியது. நண்பர்கள் வெவ்வேறு கோணங்களில் அந்நாவல்களின் மீதான தங்கள் வாசிப்பை முன்வைத்து பேசினர். இரண்டு விஷயங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123570

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-5

அவைக்கூடுகைக்கு வெளியே நிழலசைவென ஏவலன் வந்து விளக்கின் முன் நின்று தலைவணங்கினான். அவன் நிழல் நீண்டு அவைக்கு நடுவே விழ சகுனி தலைதிருப்பி கையசைவால் “என்ன?” என்றார். மத்ரநாட்டின் முத்திரையை அவன் கையால் காட்ட அவ்வசைவு அவர் முன் தரையில் நிகழ்ந்தது. அழைத்துவரும்படி கையசைத்தபின் சகுனி கிருபரிடம் “மத்ரர் திரும்பி வந்துவிட்டார்” என்றார். கிருபர் “வரமாட்டார் என்று எண்ணினீர்களா?” என்றார். “ஆம். மறுபடியும் குருக்ஷேத்ரத்திற்குள் அவரால் கால் வைக்க இயலாதென்று தோன்றியது. இரவு முழுக்க சிதைக்காட்டுக்குள் உலவிவிட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123457