அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம், ஜூலை மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது ‘பிதாமகரும் வசுக்களும்’ என்கிற தலைப்பில் ‘லாஓசி’ சந்தோஷ் உரையாடுவார். வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. நேரம்:- வரும் ஞாயிறு (07/07/2019 ) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை இடம் சத்யானந்த யோகா மையம் …
Daily Archive: July 4, 2019
Permanent link to this article: https://www.jeyamohan.in/123649
ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10
குரு நித்யா மறைந்தபோது ஊட்டி நாராயணகுருகுலத்தில் அவருடைய சமாதியிடம் ஜப்பானிய முறைப்படி அமைக்கப்பட்டது. குருவின் ஜப்பானிய மாணவியான மியாகோ அதை அமைக்க முயற்சி எடுத்துக்கொண்டார். அதைச்சுற்றி குருவின் விருப்பப்படி ஒரு ஜப்பானியத் தோட்டமும் அமைக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்குப்பின் தொடர்ச்சியான பராமரிப்பின்மையால் அது அழிந்தது அந்த ஜப்பானியத்தோட்டம் உருவாக்கப்படுகையில் நான் உடனிருந்தேன். ஜப்பானியத் தோட்டக்கலை என்றால் என்ன என்பதை அணுகி அறிந்தேன். ஜப்பானியத் தோட்டக்கலையின் நெறிகள் மூன்று. ஒன்று: மிகக்குறுகலான இடத்திற்குள் அது அமைக்கப்படுகிறது. இருநூறு சதுர அடி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/123425
கோவையில் ப.சிங்காரம்
அன்புள்ள ஜெ., சொல்முகம் வாசகர் குழுமத்தின் இரண்டாம் கூடுகை ஜூன் 30 அன்று முதல் கூடுகையை விட சற்று பெரியதாகவே அமைந்தது. மொத்தம் இருபது பேர். நமது தளத்தில் அறிவிப்பு வெளியான அன்று இரவு பத்து மணியளவில்அழைத்து அடுத்த நாள் காலை வருவதாக சொல்லி இருவர் புதிதாக இணைந்துக் கொண்டார்கள். நண்பர் விஜய சூரியன் பேனர் அடித்து கொண்டு வந்திருந்தது வாசக நண்பர்களின் இச்சந்திப்பை அடுத்த தளத்திற்கு மேலும்விரித்து நிறுவி விட்டது போன்று தோன்றியது. இவற்றிற்கு மேலாக எழுத்தாளர்கள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/123563
டால்ஸ்டாய் கதைகள்- கேசவமணி
அன்புள்ள ஜெயமோகன், நலம், நாடலும் அதுவே. சில பல பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். கடந்த காலங்களில் முடிந்தபோதெல்லாம் மொழியாக்கத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். குறிப்பாக டால்ஸ்டாயின் கதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். கடவுளுக்கு உண்மை தெரியும் ஆனால் காத்திருக்கிறார் ஒரு பைத்தியத்தின் நாட்குறிப்பு மூன்று கேள்விகள் அல்யோஷா எனும் பானை மூன்று துறவிகள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு நிலம் தேவை? இலியாஸ் சூரத்தின் காபி ஹவுஸ் மேற்படி கதைகளை அமேசானில் மின்நூல்களாக வெளியிட்டிருக்கிறேன். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/123383
உலகம் -கடிதங்கள்
ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1 அன்புள்ள திரு ஜெ வணக்கம். நலம் அடைந்திருபீர்கள் என்று நம்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு, பாஸ்டன் அருகில் உள்ள சிறு நூலகத்தில் உறுப்பினகராக பதிவுசெய்திருந்தேன் , அங்கு நேஷனல் ஜியோக்ராபிக் பதிப்பிற்காக மட்டும் இருந்த தனியறைக்கு முதலில் சென்றபோது ஒரு மிட்டாய் கடையில் தனித்து விடப்பட்ட சிறுவனாகத்தான் உணர்தேன். ஒரு பதிப்பை கூட எடுக்கமால் , பதிப்பின் வருடங்களை மட்டும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தேன் , நினைவு சரியாக இருந்தால் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/123224
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4
துரியோதனன் எழுந்து கைகூப்பி வலம் திரும்பி நடந்து பாடிவீடென உருவகிக்கப்பட்டிருந்த கரித்தடத்திலிருந்து வெளியேறினான். அங்கு நின்றிருந்த காவலன் ஓடி அவனை அணுக கையசைவால் தேர் ஒருக்கும்படி ஆணையிட்டான். அவன் விரைந்து அகன்று தேருக்கென கைகாட்டினான். தேர் இருளில் இருந்து திரண்டு ஒளிக்கு வந்து நின்றது. புரவி மிகக் களைத்திருந்தது. குலைவாழை என அதன் தலை நிலம்நோக்கி தழைந்தது. மூச்சு சீற காலால் தரையை தட்டியது. துரியோதனன் நடந்து செல்வதை அவர்கள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அஸ்வத்தாமன் எண்ணிக்கொண்டிருந்ததையே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/123443