Daily Archive: July 1, 2019

சூரியனின் நிலம் நோக்கி…

இந்தியப்பயணம் 22, கொனார்க், புவனேஸ்வர் ஸௌரத்தின் மிச்சங்கள் ரதம் – சிறுகதை   நண்பர்கள் சிலர் புவனேஸ்வரில் உள்ளனர். நண்பர் சங்கர்குட்டி, அய்யம்பெருமாள். அவர்கள் புவனேஸ்வருக்கு அழைத்துக்கொண்டே இருந்தனர். ஒரு மாதம்முன்னர் தற்செயலாகப் பார்த்தபோதுதான் ஜூலை 4 அன்று பூரி தேரோட்டம் என்று தெரியவந்தது. நானும் அருண்மொழியும் செல்லலாம் என்று முடிவெடுத்திருந்தோம். சைதன்யா வருவதாகச் சொன்னாள். ஆகவே மூவரும் கிளம்பி பூரி செல்கிறோம். கொனார்க், புவனேஸ்வர் ஆகிய ஊர்களையும் பார்த்துவிட்டு திரும்பி வருவதாக எண்ணம். நான் புவனேஸ்வருக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123311

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -7

ஹிரோஷிமா அளித்த ஆழ்ந்த அதிர்ச்சியை வெவ்வேறு வகையில் பேசிப்பேசிச் சீரமைத்துக்கொண்டிருந்தோம். ஹிரோஷிமாவைப்பற்றி பேசுவது ஒருவகை. ஹிரோஷிமா அல்லாதவற்றைப் பேசுவது இன்னொரு வகை. ஹிரோஷிமா பற்றிய பேச்சு எப்போதுமே நம்மை அதிலிருந்து விலக்கிக்கொள்வதாகவே அமைவதைக் கவனித்தேன். அதாவது அணுகுண்டுவெடிப்புக்கு முழுக்காரணமும் மேலைநாட்டு அறிவியல் மேலாதிக்கம், அதை கருவியாகக் கொண்டு உலகைவெல்லவேண்டும் என்னும் அவர்களின் மிதப்பு, அதற்கு வழிவகுத்த தொழிற்புரட்சி, அதன் விளைவான நுகர்வு வெறி. உடனே தாயக்கட்டை மறுபக்கம் திரும்பி ஜப்பானின் போர்வெறி, உலகமெங்கும் ஜப்பான் இழைத்த மன்னிக்கமுடியாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123325

எழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்

  வாசகனின் இடத்தில் சொந்தக்காரனை ,சாதிக்காரனை,தொண்டனை வைத்து அழகு பார்ப்பவன் பிணம்..ஒரு வாசகனையெனும் கண்டடையாதவன் ஒருபோதும் எழுத்தாளன் இல்லை.அவன் பொய்யன் .எழுத்தாளன் அணியும் ஆடைகளை மட்டும் அப்படியே எடுத்து அணியாத தெரிந்தவன்.மேலாடைக்கு உள்ளிருப்பது பிணம் எழுத்தாளனுக்கோ,கவிஞனுக்கோ ஏற்படுகிற பாதிப்பு ;உள்ளபடியே தனக்கு ஏற்படுகிற பாதிப்பு என்பதை ,அதன் உண்மையான தளத்தில் அறிபவன் வாசகன் ஒருவனே.அவன் எப்போதும் குறைவில்லா நித்தியானந்தன்   எழுத்தாளனுக்கு வாசகனே உறவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/123447

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-1

கணியரின் களத்தில் கதிரெழுகை நிகழ்ந்து நெடும்பொழுதான பின்னரும் உருக்கி விழுதென ஊற்றப்பட்டு உறைந்து கல்லானதுபோல் கருக்கிருள் குருக்ஷேத்ரத்தை முற்றாக மூடியிருந்தது. அதற்குள் பெய்துகொண்டிருந்த மென்மழையின் துளிகளால்கூட எங்கும் இருளொளியை எழுப்ப இயலவில்லை. அனைத்துச் சுடர்களும் அணைந்திருந்தமையால் களம் வான் போலவே தானும் இருண்டு இன்மையென்றாகிவிட்டிருந்தது. இருளுக்குள் யானைகளின் காதுமணிகளும் புரவிகளின் கழுத்தணிகளும் குலுங்கும் ஓசை மழையின் சீரான வருடலோசைக்குள் ஒலித்தது. மழைத்துளிகள் சொட்ட எங்கும் கூரை இருக்கவில்லை. சொட்டொலி இல்லாத மழையொலி எங்கோ பெருகியோடுவதுபோல கேட்டுக்கொண்டிருந்தது. படைவீரர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123006