Monthly Archive: July 2019

கதிரவனின் தேர்-9

ஒரியக்கலையின் ஒட்டுமொத்தத்தையே பார்த்துவிட்டோம் என்னும் உணர்வை கொனார்க்கில் அடைவோம். அதன்பின் லிங்கராஜ் ஆலயம் நாம் பார்த்தது ஒரு பட்டையை மட்டுமே எனக் காட்டும். அந்த விழிகளுக்கு முக்தேஸ்வர் ஆலயம் இன்னொரு உலகைத் திறக்கும். பொதுவாகப் பார்த்துச்செல்லும் ஒருவர் இந்த ஆலயங்கள் அனைத்தும் ஒன்றுபோலவே இருப்பதாக நினைக்கலாம். முக்தேஸ்வர் ஆலயம் லிங்கராஜ் ஆலயத்தின் கன்று என்றும் சொல்லலாம். சற்று கூர்ந்து நோக்கி கலையழகை அறிபவர் அவற்றின் தனித்தன்மையைக் கண்டடைவார் செவ்வியல் கலையின் மாயமே அதுதான். ஒன்றே என்றும் வேறுவேறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124115

விஷ்ணுப்பிரியா -கடிதங்கள்

  மீள்வும் எழுகையும் அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு, பொருளீட்டுவதும், சமூக அந்தஸ்து பெறுவதும் மட்டுமே வாழ்க்கை என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுக்கப்பட்டு அதை நோக்கிஓடிக் கொண்டிருக்கும் இச்சமூகத்தில் மாற்றாக உண்மை,தியாகம், மனிதநேயம், தன்னறம் போன்ற உயர் விழுமியங்களுக்காக தன்வாழ்க்கையை அர்ப்பணிக்கும் விஷ்ணுபிரியா போன்றவர்கள் பெரும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முதன்முதலாக குக்கூ அமைப்பைச் சேர்ந்த நண்பர்களை திருப்பரங்குன்றம் குடைவரைக்கோயிலில் உங்கள் நிகழ்வில்தான் சந்தித்தேன். பெரும் பொருள் ஈட்டக்கூடிய,சமூகம் போற்றக்கூடிய பணிகளை உதறிவிட்டு தான் நேசிக்கும் வாழ்க்கையைவாழ்வதற்காக கைத்தறி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124184

ஜப்பான் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,   வணக்கம். ஐந்தாவது, ஆறாவது கட்டுரை வாசிக்கும் போதே, நீங்கள் இன்றைய ஜப்பானின் உறவுச்சிக்கல்களை ஏதோ ஒரு கட்டுரையில் தொடூவீர்கள் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. பதினைந்தாவது கட்டுரையில் அது வந்தது. கட்டுரைத் தொடரின் கனத்த பகுதி.   குறிப்பாக உழைப்பு பற்றிய பகுதி. உழைப்பு பற்றிய பொதுவான நோக்கினை உடைத்தெறிவது. மசானபு புஃகோகோ ஒற்றை வைக்கோல் புரட்சியில் வேளாண்மை செய்வது பற்றி இவ்வாறு சொல்லியிருப்பார். மனிதன் குறைவான நேரமே உழைக்க வேண்டும், ஆறு மாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124112

புதுவை வெண்முரசு கூடுகை – 28

  அன்புள்ள நண்பர்களே ,   வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி “ஜூலை மாதம்” 28 வது கூடுகையாக. 25-07-2019 வியாழக்கிழமை அன்று மாலை6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும்,புதுவை வெண்முரசு கூடுகையினசார்பாக அன்புடன் அழைக்கிறோம் .   கூடுகையின் பேசு பகுதி வெண்முரசு நூல் வரிசை 3 “வண்ணக்கடல்” பகுதி எட்டு “கதிரெழுநகர்” , 49 முதல் 58 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124217

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21

சல்யர் யுதிஷ்டிரனின் வில்லையே விழிவாங்காமல் நோக்கிக்கொண்டிருந்தார். முதலில் அந்த வில் போருக்கு எழும் என்பதையே அவரால் உணரமுடியவில்லை. அதன் அம்புகளின் விசையை மெல்ல மெல்ல அவர் உணர்ந்தபோது ஒரு கணத்தில் அது தன் மூதாதையின் வில் என்பது நினைவிலெழ திகைப்புற்றார். அக்கணம் அவர் கையிலிருந்து வில் தழைந்தது. அவருடைய நெஞ்சிலும் தோளிலும் யுதிஷ்டிரனின் அம்புகள் தைத்தன. அவர் நிலையழிந்து தேர்த்தூணை பற்றிக்கொள்ள அவருடைய பாகன் அவரை மீட்டு அலைகொண்ட படைகளுக்குப் பின்பக்கம் அழைத்துச்சென்றான். தான் பின்னடைகிறோம் என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124186

கவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது

  2019 ஆம் ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது கவிஞர் வெயில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது   “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”, ரூபாய் 50,000 பரிசுத் தொகை, விருதுப் பட்டயம், விருதாளர் குறித்த புத்தகம் ஆகியவை உள்ளடங்கியது.வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது. வெயிலுக்கு வாழ்த்துக்கள்   செய்தி கவிஞர் வேல் கண்ணன் அறங்காவலர் கவிஞர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124093

கதிரவனின் தேர்-8

  ஆறாம் தேதி மாலையில் சென்னைக்குக் கிளம்புவதாகத் திட்டம். ஆகவே அன்று பகலில் புவனேஸ்வரில் எஞ்சும் முதன்மையான ஆலயங்களைப் பார்த்துவிடலாம் என்று எண்ணினோம். புவனேஸ்வர் ஓர் ஆலயநகரம். இங்குள்ள அனைத்து ஆலயங்களையும் பார்க்க ஒருமாதமாவது தேவை. தவிர்க்கமுடியாத ஆலயங்கள் என சில உள்ளன. நல்லூழாக அவை அனைத்துமே அருகருகே உள்ளன. புவனேஸ்வரில் முக்கியமான கலைமையம் லிங்கராஜ் ஆலயம்.பிரம்மாண்டமானது புரி கோயிலை விடவும் சிற்பச் கொண்டது. இந்த ஆலயத்திலிருந்துதான் இவ்வூருக்கே இப்பெயர் வந்தது. புவனேஸ்வரின் மிகப்பெரிய ஆலயம் இது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124073

யானை டாக்டர் மீண்டும்…

சூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா? என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122486

தம்மம் தோன்றிய வழி…

  அன்புள்ள சார், எழுத்தாளர் விலாஸ்சாரங் எழுதிய ஆங்கில நாவலான “The Dhamma man” நாவலை ‘ தம்மம் தந்தவன்’ என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். ‘நற்றிணை’ பதிப்பித்துள்ள இந்நாவல் சென்ற சனிக்கிழமையன்று வெளியானது. இது புத்தரின் வாழ்க்கையைப் பற்றியது. நீங்கள் பயணத்தில் இருந்ததால் அந்தச்சமயத்தில் அழைக்கவில்லை. வீட்டிற்கு ஒரு புத்தகத்தை கொரியர் அனுப்பியிருந்தேன்.இது மொழி பெயர்ப்பு அனுபவம் குறித்த எனது பதிவு :- மொழி பெயர்ப்பு அனுபவம்– தம்மம் தந்தவன் புத்தரைச் செலுத்திய விசை- தம்மம் தந்தவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124180

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20

யுதிஷ்டிரன் அந்தப் போரை தனக்கும் தன் வில்லுக்கும் இடையேயான முரண்பாடாகவே உணர்ந்தார். தயை மிக மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருந்தது. அதன் நாண் இறுகக்கட்டிய யாழின் தந்திபோல் விரலுக்கு வாள்முனையென்றே தன்னை காட்டியது. அதில் ஏற்றப்பட்டதும் அம்புகள் அதிலிருந்தே ஆணையை பெற்றுக்கொண்டன. அதில் உறைந்த விசையை தங்களுக்குள் நிறைத்துக்கொண்டன. இலக்கை மட்டுமே அவர் தெரிவுசெய்ய வேண்டியிருந்தது. அம்புகள் ஒற்றைச்சொல்லை உரைத்தபடி வானிலெழுந்தன. அது போர்க்களத்திற்கு பயனற்றது என அவர் உணர்ந்திருந்தார். அஸ்தினபுரிக்கு அவர் அந்த வில்லுடன் வந்தபோது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/124178

Older posts «