Monthly Archive: June 2019

அறிவடைந்த குரங்கின் கதை- ராகவேந்திரன்

  சேப்பியன்ஸ் வாங்க   ஜெ யுவல் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் குறித்து. மனித குலம் தனது வரலாற்றை பல காரணங்களுக்காக வியப்புடன் பரிசீலித்து  வந்திருக்கிறது. நாம் இன்று சந்திக்கும் சிக்கல்கள் நம் முன்னோராலும் எதிர்கொள்ளப்பட்டவையா என்ற வினா எப்போதும் எழுந்து வந்துள்ளது. வெறும் ஐம்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட நாம் இருக்கும் ஊரின் படத்தைப் பார்க்கும்போதே ‘ எப்படி இருந்த்து இப்படி ஆகி விட்டது ‘ என்று வியக்கிறோம்.  . நம் முன்னோர்கள் நடந்த பாதையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123096

இரு விமர்சனங்கள் – கடிதங்கள்

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன் நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள் விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள் அன்புள்ள ஜெயமோகன் யுவன் சந்திரசேகர் சுரேஷ்குமார இந்திரஜித் இருவருடைய கதைகளைப்பற்றியும் வெளிவந்த கட்டுரைகள் சமீபத்தில் வாசித்த நல்ல விமர்சனங்களாக இருந்தன. பொதுவாக வாசகனே ஏற்கனவே அறிந்திருக்கும் சின்ன விஷயங்களை ஏகப்பற்ற கோட்பாட்டுச் சொற்களுடன் சுற்றிச்சுற்றி சொல்வதாகவே இந்தவகையான விமர்சனங்கள் இருக்கும். நான் விமர்சனங்களை அதிகமாக வாசிக்காமலிருப்பதற்கான காரணம் இதுவே. மாறாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123079

தாது உகு சோலை

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி கம்பன் நிகழாத களங்கள் கம்பன் கண்ட மயில் கம்பனும் குழந்தையும் கம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி கம்பராமாயணம் வகுப்பு அணிகளின் அணிநடை தேவர்கள் அணிவகுக்கும் தோரணவாயில் அன்புள்ள ஜெயமோகன் அண்ணா, வெண்முரசு வாசிப்பின் இடைவேளையில் சுவரேறி கம்பராமாயணம் என்னும் அவ்வுலகை கொஞ்சம் எட்டிபார்த்து பரவசத்தில் நிலையழிந்து விழுந்துவிட்டேன்.  கிட்டத்தட்ட இப்போது வெண்முரசு எப்படி எதிர்கொள்ளப்படுகிறதோ அப்படித்தானே கம்பராமாயணமும் எதிர்கொள்ளப்பட்டிருக்கும்.?   தாது உகு சோலை தோறும், சண்பகக் காடு தோறும், போது அவிழ் பொய்கை தோறும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123099

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -3

  எந்த ஒரு பண்பாட்டையும் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கப்பட்ட ஏட்டுச்சுவடிபோல உருவகிக்கலாம். அல்லது மேலும் சிறந்த உதாரணம் மேல்மேலாக வரையப்பட்ட ஓவியம். தஞ்சைப் பெரியகோயிலில் நாயக்கர்கால ஓவியங்களுக்கு அடியில் சோழர்கால ஓவியங்கள் உள்ளதுபோல. இதை நகரங்களைக் கொண்டு மேலும் துல்லியமாக உணரமுடியும். உதாரணமாக இன்றைய சென்னைக்கு முன்னோடி நகரம் என்றால் அது கும்பகோணம்தான். இன்றைய தஞ்சைக்கு அடியில் இருக்கும் நகரம் உறையூர். இன்றைய டெல்லிக்கு கல்கத்தாதான் முன்னோடிநகரம்.இந்நகரங்களில் எது பொதுவாக இருந்தது, எது வளர்ந்து மாறுபட்டது என்பதைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123125

அரியணைகள்,வாசிப்பு -கடிதங்கள்

காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல் போதைமீள்கையும் வாசிப்பும் அரியணைச் சூதுகளும் வாசிப்பும் அரியணைகளும் வாசிப்பும் 1     அன்புள்ள ஜெ   காட்சியூடகத்தை வாசிப்பை அழிப்பது என்று சொல்வது எந்தவகையிலும் பொருந்தக்கூடிய பேச்சு அல்ல.  காட்சியூடகம் நாம் அறியாத உலகத்தை நமக்கு உருவாக்கிக் காட்டுகிறது. நாம் இன்றைக்கு கற்பனைகள் இல்லாத சமூகமாக ஆகிவிட்டோம். புறவுலகம் யதார்த்தமானது. அது இரும்பு போல நெகிழ்வில்லாததாக உள்ளது. இந்தவகையான கதைகள் காட்டும் கதைஉலகம் நம்மை ஓர் கற்பனை உலகில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123091

மாயாவிலாசம் -கடிதங்கள்

  இந்தப் பதிவிற்காக எவ்வளவு வருடங்கள் காத்துக்கொண்டுருந்தேன் !!!   மென்பொருள் என்ற சொல்லே ஒரு தனி பரிமாணம் அல்லவா ? அதைப் பற்றி இதுவரை நீங்கள் எதுவும் எழுதியதில்லை.   ஆனால் நீங்கள் சொல்வது போல ‘ அது புறவயமாக ஒரு கருவியில் ஏற்றப்பட்ட உள்ளத்தின் ஒரு செயல்பாடு’ – அது ஒரு சவால், கலைவெளிப்பாடு போல, ஒவ்வொரு மென்பொருளிலும் எவ்வளவு சாத்தியமாகியிருக்கிறது என்பதைத் தான் பார்க்கமுடியும்   என்னளவில், பல மென்பொருள்களில் உள்ள undo option என்பதை முதன்முதலில் வடிவமைத்தவன் காலத்தின் விதிகளை மீறி திரும்பச்செல்லும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123084

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -2

  ஜப்பானைப்பற்றிய எனது நினைவுகள் தொடங்குவது எங்கள் இல்லத்தில் இருந்த ஒரு சிறிய பொருளில் இருந்து. அது ஒரு மூக்குக்கண்ணாடி. அந்த கண்ணாடியை எனது அப்பாவின் சிறிய தந்தையார் பயன்படுத்தியிருந்தார். வெள்ளி விளிம்பு கட்டியது. இன்றைய கணக்குக்கு எடை மிக்கது. அன்று அதை தொட்டு எடுக்கையில் குளிர்ந்த தளிர்க்கொடியால் ஆன ஒன்று என தோன்றியது. அதை போட்டு வைப்பதற்கு அரக்கில் செய்த கூடும் இருந்த்து. அது கட்டெறும்பு நிறமானது . மெழுகென குன்றிமணி என மின்னுவது. அப்பா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123012

செல்பேசி எழுத்து -கடிதங்கள்

மாயாவிலாசம்! அன்புள்ள ஜெ, மாயாவிலாசம் படித்தேன்.  வேண்டாத வார்த்தை தானம் இல்லாமல் மென்பேசியில் தமிழ் தட்டச்சு செய்ய கீ பேடையே த‌மிழுக்கு மாற்றிக் கொள்ளும் எழுத்தாணி என்ற செயலி உள்ளது. (ezhuthani) . செயலியைத் தரவிறக்கம் செய்த பின் தெவைப்படும்போது அதை தூண்டிவிட்டு get started > setting up ezhthani > switch to ezhuthani> Finished. இதன் பின் எங்கு கீ பேட் எழுந்தாலும்  தமிழில் தட்டச்சு செய்யலாம். “அ” வை அழுத்தினால் தமிழ். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122968

இன்றைய காந்திகள் -கடிதங்கள்

இன்றைய காந்திகள் அன்புள்ள ஜெ இந்தத் தளத்தில் வெளிவந்த நவகாந்தியர்கள் பற்றிய கட்டுரைகள் மிகப்பெரிய திறப்பை அளித்தன. அவை காந்தியம் என்றால் என்ன என்று காட்டுகின்றன. இதுவரைக்கும் நானே காந்தியம் என்பது ஒரு தரப்பு கம்யூனிசமும் திராவிடவாதமும் வேறு தரப்புக்கள் என்றே நினைத்துவந்திருந்தேன். ஆனால் காந்தியம் செயல்படுபவர்களின் தரப்பு. மற்றவை வெறுமே கருத்துசொல்பவர்களின் தரப்புக்கள் என்று இன்றைக்குத் தெரிந்துகொண்டேன். மற்றவர்கள் எதிரிகளை வசைபாடுகிறார்கள். தங்கள் தரப்பைச் சொல்கிறார்கள். காந்தியம் சொல்வதற்கு சான்றாகச் செய்து காட்டுகிறது. எதையும் வசைபாடுவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123074

பாரி மொழியாக்கம் செய்த கதைகள் – கடிதங்கள்

நிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக் தக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக் முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங் அன்புள்ள ஜெ இந்த தளத்தில் பாரி மொழியாக்கம் செய்து வெளியிட்டுவரும் சிறுகதைகள் புதிய வாசல்களைத் திறக்கின்றன. அறிவியல்கதைகள் என்றாலும் அவையெல்லாம் வெறும் ஆச்சரியத்தை மட்டும் அளிக்காமல் வாழ்க்கையின் பல கோணங்களை திறந்துகாட்டுவனவாக உள்ளன. மொழியாக்கமும் மிகவும் சரளமானதாகவும் எளிமையாக வாசிக்க வைப்பதாகவும் உள்ளது. நான் மொழியாக்கக்கதைகளை பொதுவாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122956

Older posts «

» Newer posts