Daily Archive: June 30, 2019

எப்படி இருக்கிறேன்?

தாடை! இல்லாத மணிமுடி மாயாவிலாசம்!   நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்தபடியே உள்ளன. என் உடல்நிலை, உளநிலை குறித்த உசாவல்கள். சுருக்கமாக, நன்றாகவே இருக்கிறேன் கைகளிலும் கழுத்திலும் இருந்த வீக்கங்களும் கீறல்களும் மறைந்துவிட்டன. உடல்வலியும் நீங்கிவிட்டது. எஞ்சியிருப்பது தாடைவலி. அது அத்தனை எளிதாகச் சீரமையாது. முதல்சிலநாட்கள் மெல்ல முடியாதபடி கடுமையான குத்தல் வலி இருந்தது. ஆகவே டாக்டர் முகம்மது மீரானைச் சென்று பார்த்தேன். தாடையை மண்டையோட்டுடன் இணைக்கும் குருத்தெலும்பில் அடிபட்டிருப்பதாகவும் நாட்பட சரியாகும் என்றும் சொன்னார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123310

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

  ஹிரோஷிமா- நாகசாகி இரு ஊர்களும் நாம் பள்ளிப்பாடங்களிலேயே அறிந்தவை. சேர்த்துப் படித்து ஒற்றை ஊராகவே நம் மனதில் நின்றிருப்பவை. நான் ஆறாம்வகுப்பு பாடத்தில் படித்த அந்த இரண்டு பெயர்களுக்கு அப்பால் உண்மையில் அங்கு  நிகழ்ந்ததென்ன என்பதை புரிந்துகொண்டது ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது வாசிக்க நேர்ந்த டாக்டர் தகாஷி நாகாயி எழுதிய த பெல்ஸ் ஆஃப் நாகசாகி என்ற புத்தகத்தின் தமிழாக்கம் வழியாக. [நாகசாகியின் மணிகள்] அந்நூல் பேர்ல் பதிப்பகம் வழியாக வெளிவந்ததா என ஓர் ஐயம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123040

மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?-சரவண ராஜா

சாம்ராஜ் ஜார் ஒழிக நூல் வாங்க கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக!”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது கதைகளின் தொடர்ச்சியாகவும், அதே வேளையில் சில அம்சங்களிலும், சில கதைகளிலும் விலகி நிற்கிறது. இத்தொகுப்பில் வரும் செவ்வாக்கியம், மரிய புஷ்பம் ஆகியோர் அவரது ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123257

வாசிப்பு நோன்பு- கடிதங்கள்

வாசிப்பு எனும் நோன்பு வாசிப்புச் சவால் -கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம் அறிய ஆவல். ஒரு வாசகருக்கு, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றிய தங்களது எதிர் வினையையும், கடலூர் சீனு-வின்கடிதத்தையும் வாசித்தேன். அதற்கு எனது சார்பாக ஒரு கடிதம் எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டேஇருந்தேன். காரணம் , என்னடா இவனும் இப்படி ஆகிவிட்டானே என்று நீங்களும் , கடலூர் சீனுவும் நினைத்துவிடக்கூடாதுஎன்று ஒரு சிறு தயக்கம். இன்னோரு பக்கம், தாங்கள் புத்தகத்திற்கும், காட்சியூடகத்தில் வந்ததற்கும் நிறைய வேறுபாடுஇருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/123217