Daily Archive: June 19, 2019

தாடை!

  சில தற்செயல்கள் வேடிக்கையானவை. டாக்டர் முகம்மது மீரான் அவர்களிடம் தாடையை காட்டுவதற்காகச் சென்றிருந்தேன். சீட்டு கொடுத்த நர்ஸுக்குப் பின்பக்கம்  தொலைக்காட்சியில்  பிரம்மாண்டமான ஒரு நீர்யானை வாயை அகலகலகலமாக திறந்து டபாரென்று மூடியது. “இதுக்கு ஈஎன்டி பிரச்சினை ஒண்ணுமில்லைன்னு நினைக்கிறேன்” என்றேன். நர்ஸ் புன்னகைத்துக் கொண்டார். நீர்யானைகள் தாடைகளாலேயே சண்டைபோட்டுக்கொண்டன. கோட்டாவிப்போர்!   தாடையின் குருத்தெலும்பு ஒரு அதிர்வுதாங்கி. தாடையில் விழும் அடிகள் அங்கேதான் பதிகின்றன. ஆனால் அதற்கு கட்டுபோட முடியாது. பிறந்தநாள் முதல் கடைசிச்சொல் வரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122930

சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் – காளிப்பிரசாத்

  [சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய வெளிச்சமும் வெயிலும் நூல் குறித்து காளிப்பிரசாத் பேசியது. குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு 9-6-2019]   வெளிச்சமும் வெயிலும் வாங்க   அனைத்துப் படைப்புகளுக்கும்  பாணி என்று ஒன்று உண்டு. அவ்வழியாக படைப்புகளை அறியும்போது அவற்றை இன்னும் நெருக்கமாக அறியமுடிகிறது. இப்பொழுது தொடர்ச்சியாக சில திரைப்படங்களைக் கண்டு, எங்க வீட்டுப் பிள்ளை பாணி மற்றும் ஆங்ரி யங்மேன் பாணி என்று கூறுவதைப் போல ஒரு சிறுகதைத் தொகுப்பை அணுகுவது சரியான ஒன்றா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122907

ராகுல்,மோடி -கடிதங்கள்

ராகுல் காந்தி தேவையா? ராகுல் -ஒரு கடிதம் அன்புள்ள ஜெ ,   சீனாவில் மாணவர்கள் புரட்சி மற்றும் அது சார்ந்த படுகொலைகளின் முப்பதாவது நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது..  நம் சூழலில் அதை பெரிதாக நினைக்காவிட்டாலும் உலகின் மனசாட்சியில் அது ஒரு ரணமாக நீடிக்கிறது அந்த படுகொலைகளால்தான்  சீனா இன்று செழிப்பாக வல்லரசாக இருக்க முடிகிறது என சீன பாதுகாப்பு அமைச்சர் இப்போது கூறுகிறார் அப்பாவி மக்களை கொன்று  குவித்து அந்த பிணங்களின் மீது  மக்கள் ஆட்சியை நிறுவுவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122647

வாசிப்புச் சவால் -கடிதம்

  வாசிப்பு எனும் நோன்பு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, என் நெஞ்சில் அச்சடித்து வைத்துக்கொள்வதுபோல் ஒரு பதில் கடிதம் எழுதியதற்கு நன்றி. தங்களின் வாசிப்பு நோன்புகளை அறிந்துகொண்டதில் எனக்கு நல்லதொரு மகிழ்ச்சியும் புத்துணர்வும் த ந்துள்ளது. வாசிப்பதையும், வாசிப்பதை பற்றி பேசுவதையும் எழுதுவதையும், என் அடுத்தகட்ட வாழ்க்கையாக அமைத்துக்கொள்ளலாம் என்று இருக்கும்பொழுது, உங்களின் கடிதம் நல்லதொரு கண்திறப்பையும் வழிகாட்டுதலையும் கொடுத்துள்ளது. நான் தேடி தேடி வாசித்தாலும், என்னிடமிருந்த ஒரு மகத்தான பிழை தெளிவெனத் தெரிந்தது. அலுவலக வேலைகளை ETA (Estimated …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122425