Daily Archive: June 18, 2019

’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை

  வெண்முரசு இருட்கனி களம்நிறைந்த பெருந்தீயில் முடிந்தது. முடிந்த அன்றே என் மீதான தாக்குதல் நிகழ்ந்தது. நான் இன்று தற்செயல்களை நம்புபவன் அல்ல. அவை பெரிய ஒர் ஒட்டுமொத்தத்தின் பகுதியாக நிகழ்பவை என நினைப்பவன். இதையும் அவ்வாறே எடுத்துக்கொள்கிறேன். உண்மையில் நடந்தது ஒரு விபத்து போலத்தான். இன்று தமிழகத்தில் எவர் வேண்டுமென்றாலும்  குடித்துவிட்டு நின்றிருக்கும் ஒருவரால் எக்காரணமும் இன்றித் தாக்கப்படலாம். பலருக்கும் இதற்கு நிகரான அனுபவம் இருக்கும். சொந்த ஊர் என்பதனால் பாதுகாப்புணர்ச்சியும் விலக்கமும் இல்லாமலிருந்தேன் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122922

நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்

  நினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் ஆறு சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்   [ 1 ]   தமிழ் உரைநடையின் தொடக்கமாக ஆனந்த ரங்கம்பிள்ளையின் நாட்குறிப்புகளைக் கொள்வோம் எனில் தமிழ் உரைநடை இரண்டரை நூற்றாண்டுகளைக் கடந்து விட்ட ஒரு நிகழ்வு. தமிழ் இலக்கியத்தில் பிள்ளைத்தமிழ் பள்ளு குறவஞ்சி போன்ற சிற்றிலக்கிய வகைமைகளோடு செய்யுள்களின் காலகட்டம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. செய்யுள்களின் காலகட்டத்தின் முடிவினை குறிக்கும் ஒரு குறியீட்டு உதாரணமாக செய்யுள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122567

ஆல்பா -கடிதம்

அய்யா!   இனிய ஜெயம்     தொலைகாட்சி முன் அமர்ந்து வருடம் கடந்து விட்டது.  உங்கள் கட்டுரை வழியே ஆல்பா தரவிறக்கினேன். தொகா ரிமோட் இயக்கும் விதமே மறந்து விட்டிருந்தது :)  அது ஒரு ஜேம்ஸ் பாண்ட் டிவி .காணும் எதையும் அதன்  வழியே முப்பரிமாணமாக மாற்றிக் கொண்டு பார்க்க முடியும் [சன் டிவி சீரியலைக் கூட] . தங்கை மகள் உதவியுடன் ரிமோட் இயக்கி முப்பரிமாணத்தில் ஆல்பா [துணை உரை இன்றி]  படம் பார்த்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122794

இடதுசாரிகள் -கடிதம்

. இடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா? வங்கத்தில் என்ன நடக்கிறது?   ஜெமோ,   இடதுசாரி கட்சிகள் பற்றிய உங்களுடைய சமீபத்திய பதிவுகள் என்னை “பின்தொடரும் நிழலின் குரல்’ தினங்களுக்கு அழைத்துச் செல்கிறது. என்னுடைய நண்பனின் அண்ணன் மிகவும் பிரசித்தி பெற்ற கிரிமினல் வக்கீல். சில சமயங்களில் உச்சி வெயிலில் பேருந்து நிலைய நுழைவாயிலில்  ஒரு கையில் ஏந்தி தோளில் சாய்ந்திருக்கும் சிவப்புநிற கொடியுடனும், இன்னொரு கையில் ஏந்திய உண்டியலுடனும் அவர் நிற்பதை பார்த்திருக்கிறேன். கேட்டால் கட்சிக்கான நிதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122530

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா -கடிதங்கள்

சென்னை குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா   அன்புள்ள ஜெ..   குமரகுருபரன் விழா நிகழ்வில் தக்கர் பாபா.அரங்கு குறித்த உங்கள் கோபம் புரிகிறது..மரங்கள் சூழந்த அந்த அரங்கை அவர்கள் சரியாக நிர்வாகம் செய்து இருந்தால் , அல்லது இதே நிகழ்ச்சி , ஒரு குளிர்காலத்தில் நடந்து இருந்தால் ,சென்னையிலேயே உங்களுக்கு பிடித்த அரங்கமாக இதை சொல்லி இருப்பீர்கள்.. கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு வாகன இரைச்சல் இல்லாமல் , இயற்கையான காற்றுடன் நிகழ்ச்சி நடத்த இயலக்க்கூடிய சென்னையின் ஒரே அரங்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122789

வெண்முரசு புதுவை கூடுகை – ஜுன் 2019

  வெண்முரசு புதுவை விவாதக்கூடுகை வரும் ஜூன் 20 அன்று வழக்கமான இடத்தில் நடைபெறுகிறது. நண்பர் சிவாத்மா வண்ணகடல் பற்றி உரையாற்றுவார்   கிருபாநிதி அரிகிருஷ்ணன் ஸ்ரீநாராயணபுரம்  முதல்மாடி 27 வெள்ளாளர் வீதி புதுவை 605001 தொடர்புக்கு 9943951908  

Permanent link to this article: https://www.jeyamohan.in/122917