Daily Archive: June 16, 2019

தாக்குதல் பற்றி…

அன்புள்ள நண்பர்களுக்கு,   நான் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தாடையிலும் தோள்பட்டையிலும் வலியும் ரத்தகீறல்களும் உள்ளன. கீழே விழுந்தமையால் உடல் வலியும். ஆனால் ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பிற நோயாளிகளின்  துன்பங்கள் அழுகைகள்  நடுவே தூங்க முடியவில்லை. ஆகவே வந்துவிட்டேன்.தனியார் மருத்துவமனையில் சற்று மருத்துவம் செய்யவேண்டியிருக்கலாம்.   சில செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாக்கியவர் திமுகவின் அடிமட்டப் பொறுப்பில் இருப்பவர். ஆனால் முழுக்கமுழுக்க குடிவெறியால் நிகழ்ந்த தாக்குதல் இது. ஏற்கனவே பகல்முழுக்க குடிவெறியில் கலாட்டா செய்துகொண்டிருந்திருக்கிறார். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122898

மண்ணென வருவது…

  இரண்டுவாரம் முன்பு காலைநடை சென்றிருந்தேன். மழைக்குக் காத்துக்கிடக்கும் வயல்கள். அவற்றில் மண்ணின் அலைகள். கொக்குகள் பாய்விரித்த படகுகள் என அந்த மண்கடல்மேல் அமைந்து எழுந்தன. எதிரில் ஒருவர் வந்தார். தோளில் வாழையிலைக் கொத்து. சூழ இரு நாய்கள். நான் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னை கடந்துசென்றபோது “அதாக்கும் இப்பம்” என்றார்   நான் திடுக்கிட்டு “ஆமா” என்றேன். அதன்பின்னரே அது என்ன என்று மண்டை ஓடியது. “என்னவாக்கும்?” என்றேன். அதற்குள் அப்பால் சென்றுவிட்டிருந்தார். ஆனால் தொடர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122797

நிலவின் தொலைவு – இடாலோ கால்வினோ

தமிழாக்கம் டி ஏ பாரி   சர் ஜார்ஜ் எச். டார்வினின்1 கொள்கைப்படி ஒரு காலத்தில் நிலவு பூமிக்கு மிக அருகில் இருந்தது. பின்னர் கடலலைகள் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளியதில் வெகு தொலைவிற்குச் சென்றுவிட்டது : பூமியின் நீர்பரப்பில் தான் உண்டாக்கிய அலைகளாலேயே நிலவுக்கு இது நிகழ்ந்தது, அங்கு பூமி மெதுவாக தன் ஆற்றலை இழந்து கொண்டிருக்கிறது. நான் நன்றாகவே அறிவேன்! – முதிய Qfwfq2 கத்தினார் – உங்களில் யாராலும் நினைவுகூர முடியாது, ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122421

கிரீஷ் கர்நாட், கிரேஸி மோகன் – கடிதங்கள்

அஞ்சலி: கிரீஷ் கர்நாட் அஞ்சலி, கிரேஸி மோகன் அன்புள்ள ஜெயமோகன்   கிரேஸி மோகன், கிரிஷ் கர்நாட் இருவரைப்பற்றியும் உங்கள் மதிப்பீடுகளுடன் கூடிய அஞ்சலிகல் மிகக்கறாராக இருந்தன. மிகச்சரியாக இருந்தன.   கர்நாட் ஓவர் ரேட்டட் என்பது இந்தியாவின் மிகச்சிறந்த நாடகங்களை வாசித்தவர்கள் அறிவார்கள். அவர் அனந்தமூர்த்தியைப்போல அதிகார அமைப்புக்களுக்கு நெருக்கமான பெரியமனிதராக வளையவந்தவர். பிற்காலப்படைப்புக்கள் எல்லாமே அரசியல் பாலிமிக்ஸ்களை எழுதியவைதான்.   கிரேஸி மோகன் பெரிய நகைச்சுவையாளர் அல்ல. அவருடையது நாடகமும் அல்ல. அவருடையது அவருடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122761

குமரகுருபரன் விருதுவிழா – கடிதங்கள்

  சென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா அன்புள்ள ஜெ..   வழக்கம் போல ஒரு அருமையான விழா..   விருது வழங்கு விழாவுக்கு முன் சிறுகதை விவாதம் என்பது அற்புதமாக ஒரு ஏற்பாடு.. இதற்கு என ஒரு தனி ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்பதை , இந்த கொளுத்தும் மதிய வேளையிலும் அரங்கில் நிரம்பியிருந்த வாசகர்கள் நிரூபித்தனர்   இளம் தலைமுறையை ஊக்கப்படுத்தும் விழா என்றுதான் பொதுவாக நினைப்பார்கள்.. இந்த விருதின் நோக்கம் ஊக்கப்படுத்துவது அல்ல… …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122759