Daily Archive: June 15, 2019

தாக்கப்பட்டேன்

இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரியகுடிகாரன். ஏற்கனவே குடித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122884

சபரிநாதனுக்கு யுவபுரஸ்கார் விருது

  2019 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம். சாகித்ய அக்காதமி விருதுகள் கவிஞர்களுக்கு பொதுவாக அளிக்கப்படுவதில்லை. அவர்கள் எழுதியவை பெரிய ‘வால்யூம்கள்’ அல்ல என்பதே காரணம். சபரி விருது பெறுவது மேலும் பல கவிஞர்கள் கவனிக்கப்பட வாய்ப்பாகும் யுவபுரஸ்கார் ஒரு படைப்பாளிக்கு நல்ல தொடக்கம். கருத்தரங்குகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அவற்றை சபரிநாதன் எளிய தயக்கங்களால் தவறவிடமாட்டார் என எண்ணுகிறேன். தமிழ் நவீன இலக்கியத்தை இந்திய அளவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122878

காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்

போதைமீள்கையும் வாசிப்பும் அரியணைச் சூதுகளும் வாசிப்பும் அன்புள்ள ஜெ   காட்சி ஊடகங்களைப் பற்றி தொடர்ச்சியாக எதிர்மறையாகவே எழுதி வருகிறீர்கள். நான் காட்சியூடகங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். காட்சியூடகங்கள் கற்பிப்பதில்லை என நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. காட்சி ஊடகங்களை குறைவாகவும் வாசிப்பை மேலாகவும் நினைக்கும் ஒருவகையான உளவியல் பிரச்சாரம்தான் இது.   சக்திவேல் சுப்ரமணியம்   அன்புள்ள சக்திவேல்,   கேம் ஆப் த்ரோன்ஸ் உள்ளிட்ட தொடர்களையோ சினிமாக்களையோ பார்ப்பவர்கள் மீதோ, அவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122842

அச்செடுக்கமுடியாத இடைவெளிகள்- விஷால் ராஜா

நாவல், சிறுகதை ஆகிய இரு புனைவு வடிவங்களுக்கும் நடுவிலான வேறுபாடு குறித்து பலரும் பல விதங்களில் பேசியிருக்கிறார்கள். நாவலை இதிகாசத்துடனும் சிறுகதையை கவிதையுடனும் ஒப்பிடுவது பரவலான வழக்கம். [“சிறுகதையை உரைநடை புனைவின் கவிதை என்றும் நாவலை அதன் இதிகாசம் என்றும் நாம் சொல்லலாம்” – வில்லியம் பாய்ட்]. இரண்டு வடிவங்களுடைய நோக்கங்களையும் இந்த ஒப்பீடு துல்லியமாகவே வரையறை செய்கிறது. நாவலில் பெரும்பாலும் விடுபடல்கள் இருப்பதில்லை. வாழ்க்கை அதன் ஒழுங்கின்மையோடு அப்படியே பதிவாகிறது. பல்வேறு முகங்களும் அனுபவச் சிதறல்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122694

ஆல்ஃபா -கடிதங்கள்

  அய்யா! ஜெ,     ஆல்பாவை ஒரு விமானபயணத்தில் பார்த்தேன்.  பரிணாமத்தில் ஆர்வம் கொண்ட ஆராய்ச்சியாளனாக , பெரும் கிளர்ச்சியை அளித்த படம்.     மனித மிச்சத்தை உண்ண ஊருக்குள் வந்த வனநாய்களில் சாதுவானதே அண்டிப் பிழைத்திருக்க முடியும். மூர்க்கமானது கொல்லப்பட்டிருக்கும் அல்லது தப்பியோடியிருக்கும்.     மூர்க்கமற்ற திறமையான ஒன்று மேலும் மேலும் தேர்வு செய்யப்பட்டு domestic செய்யப்பட்டிருக்கும்.  இன்று கைக்கடக்க நாய்கள் தேவைக்கேற்ப selective breeding செய்யப்பட்டு வருகிறது.     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122806