Daily Archive: June 12, 2019

அஞ்சலி: கிரீஷ் கர்நாட்

கிரிஷ் கர்நாடை நான் 1986ல் காசர்கோடு திரைப்படவிழாவில் அவர் நடித்த, இயக்கத்தில் பங்கெடுத்த வம்சவிருக்ஷா சினிமா திரையிடப்பட்டபோது சந்தித்தேன். விருந்தினராக வந்திருந்தார். அந்த சினிமா பற்றியும் அதன் பின்னணி பற்றியும் சுருக்கமாகப் பேசினார். கேள்விகளுக்குப் பதிலளித்தார். நான் அதைப்பற்றி ஒரு கேள்விகேட்க அதற்கு பதில் சொன்னார். என்ன கேள்வி என எனக்கு நினைவில்லை. ஆனால் அவர் ஜிப்பா அணிந்து தடித்த கண்ணாடிபோட்டு பேராசிரியரின் தோரணையில் இருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின் கன்னடத்தின் முக்கியமான கவிஞரும் கல்லூரி ஆசிரியருமான வேணுகோபால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122730

அஞ்சலி, கிரேஸி மோகன்

கிரேஸி மோகனை நான் கமல் அளித்த ஒரு விருந்தில்தான் முதலில் சந்தித்தேன். முதல்நிமிடத்திலேயே உற்சாகமாகப் பேசத்தொடங்கினார். அரை மணிநேரத்திலேயே நண்பர்களாகிவிட்டோம். அவரிடம் என்னை அணுகச்செய்தது அவருக்கு இருந்த தமிழறிவு. வைணவ இலக்கியங்களில் குறிப்பிடும்படியான பயிற்சி அவருக்கு இருந்தது. பழந்தமிழ் இலக்கியங்களில் தீராத மோகமும், செய்யுள் இயற்றும் முனைப்பும் கொண்டிருந்தார். அவர் விளையாட்டாக இயற்றிய வெண்பாக்களை எனக்கு அனுப்புவதுண்டு “நீங்க பிராப்பர் சென்னைதானா?” என்று ஒருமுறை கேட்டேன். “பிராப்பர் மைலாப்பூர். அசோக்நகர் போனாலே ஹோம்சிக்னெஸ் வந்திரும்” என்றார். அவருடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122725

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்  குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது – 2019   கவிஞர். ச.துரைக்கு அளிக்கப்பட்டது.சென்னையில் 9-6-2019 அன்று நிகழ்ந்த விழாவில் பேசப்பட்டவற்றின் காணொளித்தொகுதி     ஜெயமோகன் உரை   பி.ராமன் உரை   தேவதேவன் உரை   அருணாச்சலம் மகாராஜன் உரை   ச.துரை ஏற்புரை     நன்றி Team Shruti.TV

Permanent link to this article: https://www.jeyamohan.in/122686

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

அன்புள்ள ஜெ ராஜராஜ சோழன் பற்றிய இன்றைய விவாதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் எஸ்.மகேஷ் *** அன்புள்ள மகேஷ், எண்பதுகளில் ராஜராஜ சோழனைப்பற்றி வசைபாடி இங்குலாப் எழுதிய ஒரு கவிதை பாடநூலில் வைக்கப்பட்டு விவாதத்திற்காளானது. அதுமுதல் இந்த விவாதம் அரைவேக்காட்டு மார்க்ஸியர்களால் பொதுவெளியில் பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது 2010ல் நான் எழுதிய கட்டுரை இது. இன்று தமிழகத்தில் பெரும்பாலான பயிற்சி நிலையங்களில் படிக்கப்படுகிறது ஜெ ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? ராஜராஜ சோழன் காலகட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122748

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-64

சுப்ரதரை அணுகிய சுடலைக்காவலன் சற்று அப்பால் நின்று தலைவணங்கி அவர் திரும்பிப்பார்த்ததும் “சூதர்கள் தங்கள் பாடலின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள், அமைச்சரே” என்றான். விழிசுருக்கி அவன் சொல்வது புரியாததுபோல் சில கணங்கள் நோக்கிய பின் அவன் செல்லலாம் என்று கையசைத்துவிட்டு சற்று முன்னால் சென்று மரக்கிளைகளின் இடைவெளியினூடாகத் தெரிந்த வானை சுப்ரதர் நிமிர்ந்து பார்த்தார். முகில்கணங்கள் இடைவெளியில்லாது செறிந்து வான் இருண்டிருந்தது. இருள் அடர்ந்த முன்காலை என்றே தோன்றியது. கதிரெழுவதுவரை சூதர்கள் பாடியாக வேண்டும். அதற்கு முன் விருஷாலியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122536