Daily Archive: June 11, 2019

அய்யா!

Alpha (film)  சிலநாட்களுக்கு முன்னர் ஆல்ஃபா என்னும் சினிமா பார்த்தேன். மனிதன் முதல்நாயைக் கண்டடைந்து அதைப் பழக்குவதைப் பற்றியபடம். இங்கே திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ஆனால் அதை எவரும் பார்த்து, குறிப்பிட்டு எழுதியதாகத் தெரியவில்லை. என்னைப்போன்ற நாய்ப்பிரியர்களுக்கு ஒரு மறக்கமுடியாத படம். அமெரிக்காவில் வெற்றிப்படம். இங்கே பெரிதாகஓடவில்லை எனத் தோன்றுகிறது. வேட்டையின்போது பள்ளத்தில் விழுந்து இறந்துவிட்டான் என குடியினரால் கைவிடப்பட்ட கதைநாயகனாகிய சிறுவன் தன்னைத் தாக்கவந்த ஓநாய்க்கூட்டத்தில் ஒன்றை காயப்படுத்துகிறான். பின்னர் அதற்கு அவனே உணவளித்துக் காப்பாற்றுகிறான். அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122653

மழைக்காலநிலவு

அன்புள்ள ஜெ, மலையாள இசைமையமைபபளர்களில் நான் மிகப்பெரிதாக மதிப்பவர்களில் ஒருவர் தக்ஷிணாமூர்த்தி. மலையாள இசையமைப்பாளர்களில் அவர்தான் மூத்தவர் என நினைக்கிறேன். ஆனால் எண்பதுகள் வரை பாட்டு போட்டுக்கொண்டிருந்தார். அவருடைய பாடல்கள் கர்நாடக சங்கீதத்தின் சாயலை விட்டு வெளியே செல்லாதவை. பெரும்பாலும் தெளிவான ராக அடையாளம் கொண்டவை. ஆனால் அந்த ராகத்தை சரியான பாவத்துடன் அவர் இணைக்கிறார். நிறைய பாடல்களை நான் நூறுமுறைக்குமேல் கேட்டிருப்பேன். இந்தப் பாடல் அதில் ஒன்று. மலையாள டிவி சேனலில் ஒருவர் இதை சூப்பர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122332

தும்பி

“எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122256

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63

கிருதவர்மன் படைவீரனின் புரவியைப் பற்றியபடி மெல்ல நடந்து படைமுகப்பை அடைந்தான். முதலில் நின்று நின்று மூச்சிளைப்பு ஆற்றி மீண்டும் நடந்தான். நடக்க நடக்க அந்த நடைக்கு உடல் பழகி அவ்வண்ணமே விரைவுகொள்ள முடிந்தது. ஓருடலிலிருந்து பிறிதொரு உடலுக்கு குடிபெயர்ந்துவிட்டதுபோல. அப்புதிய உடலின் எல்லைகளையும் வாய்ப்புகளையும் அகத்திலிருந்து அவன் ஒவ்வொன்றாக தொட்டுத் தொட்டு அறிந்துகொண்டிருந்தான். எந்நிலையிலும் அறிதல் அளிக்கும் உவகையை கிருதவர்மன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். படைமுகப்பில் கௌரவப் படைகளும் பாண்டவப் படைகளும் பத்து பத்து பேர் கொண்ட குழுக்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/122454